நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Saturday, December 24, 2011
தன் காலில் நின்றால் தான்!!!
” என்னங்க..உங்களைத் தானே, அந்த மந்திரியைப் போய் பாருங்க..’
’ அவருக்கு என்னை இன்னமும் ஞாபகம் இருக்குமா?”
” எப்பப் பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருங்க..”
” அதுக்கில்ல..பார்வதி.. நம்ம பையன் நல்லா மார்க் வாங்கியிருக்கான்..எதுக்கு ஒருத்தர்ட்ட
சிபாரிசு போகணும்?”
” என்னங்க எடக்கு,மடக்கா பேசிக்கிட்டு..இருக்கிறது மூணு போஸ்ட் தானாம்..முன்னூறு பேர் அப்ளை பண்ணியிருக்காங்கன்னு தம்பி சொல்லுது..அந்த மந்திரி ’வட்டமா’ இருக்கும் போது நீங்க தானே வண்டி ஓட்டிக் கிட்டு இருந்தீங்க..உங்கள அவர் அவ்வளவு சீக்கிரம் மறந்துட மாட்டாரு..
சிபாரிசு செய்யச் சொல்லித் தான் கேட்டுப் பாருங்களேன்..கல்ல விட்டு எறிங்க..பளம் விளுந்தா சரி..இல்லாட்டி கல்லு போனாப் போவுது!”
.. அதானே..இந்த அப்பா எனக்காக சிபார்சு பண்ணினால் தான் என்னவாம்...அப்பா என்ன சொல்லப் போகிறார்..
வெளியிலிருந்து அவர்கள் பேசுவதை ஆர்வத்துடன், கவனித்தேன்..
”..பார்வதி.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே.. நம்ம சரவணன மேல அக்கறை இருக்கிறதனால் தான் சொல்கிறேன்..என்னப் பாரு..சிபாரிசோட கூட லஞ்சமும் கொடுத்து கார்ப்பரேஷன்ல ட்ரைவரா சேர்ந்தேன்..வேலை எளிதா கிடைச்சதால, எனக்கு கஷ்டமும் தெரியாம..சொகுசா வாள்ந்துட்டு, இப்ப அதே ட்ரைவராவே ரிடையர்ட் ஆயிட்டேன்..என் பையனும் அதே தப்பை செஞ்சா, அவனுக்கும் கஷ்டம்னா என்னன்னு தெரியாது..காலம் பூரா க்ளார்க்கா இருந்தே, வாழ்க்கையில உசராம அப்படியே ரிடய்ர்டாயிடுவான்..அதனால..சிபார்சு இல்லாம போட்டியில இந்த வேலை அவனுக்கு கிடைக்கணும்..கிடைக்கட்டும்..”
’அதானே’ என்றேன், நான், அப்பாவைப் பற்றிய உயர்வான எண்ணத்துடன்!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்லதொரு கருத்து நிறைந்த கதை! பாராட்டுகிறேன் சகோ...
ரொம்ப கரெக்ட் தன்முயற்சில வேலை கிடைச்சால் தான் அதன் அருமை புரிந்துகொள்ள முடியும். அதை அழகா சொல்லி இருக்கீங்க.
அப்பா!
அப்பப்பா!!
சூப்பர் அப்பா!!!
ஆனாலும் .......
வேலை தானாகவே கிடைத்துவிடும்.
வேலைக்கா நம் நாட்டில் பஞ்சம்?
வேலைசெய்ய ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமே!
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி .....
விவசாயி விவசாயி என்ற வாத்யார் பாட்டு ஏனோ ஞாபகம் வந்தது எனக்கு.
நேற்று அவரின் நினைவு தினம் அல்லவா, அதனாலோ என்னவோ!
அன்புடன் vgk
அருமை.
நல்ல பதிவு.
நல்ல கருத்துள்ள கதை...
கதை உசந்து நிக்குது.. சொல்ல வந்த மெசேஜ்ல.
Post a Comment