
”வைவஸ்வதன் லதாங்கிக்கு பொருத்தமானவன் தான்..இருந்தாலும்...”
”என்ன இருந்தாலும்..”
”அவன் அப்படி ஒரு கண்டிஷன் போட்டிருக்கக் கூடாது..”
”அதனால என்ன?”
”அதை அவளும் பொருட்படுத்தியிருக்க வேண்டாம்..”
”அதை வேணா சொல்லு..”
”பாரு..இந்த சாதாரண விஷயத்தினால், அவர்கள் காதல் தொங்கலில்!”
”யாராவது ஒருத்தர் ஒத்துக் கொண்டால் தான் என்ன?”
”ஆமாம்..அதைத் தான் நானும் சொல்கிறேன்..”
”ஆனால் அவன் தான் பிடிவாதமாய் இருக்கிறான்...”
”அவளாவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்..”
”இருக்கலாம்..சின்னஞ்சிறுசுகள் அவர்களுக்கு ஆசை இருக்காதா?”
”இருக்கட்டுமே..இது அவர்கள் வாழ்வில் எப்படி தடையாய் இருக்க முடியும்?”
”அதுவும் சரி தான்..”
அதோ வைவஸ்வதன்..ஓ லதாங்கியும்..
“அங்க்கிள்..ஆண்ட்டி.. நீங்க ரெண்டு பேரும் அவசியம் வரணும்..இருபதாம் தேதி எங்க நிச்சயதார்த்தம்!”
”உங்க ப்ராப்ளம்?”
”ஸால்வ்ட்”- வைவஸ்வதன்.
லதாங்கியைப் பார்த்தேன்..கண்களை சற்றே தாழ்த்தினாள்.சம்மதம் தெரிந்தது!
“எப்படி சாத்யம்,இது?”
தனிமையில் வைவஸ்வதனும்.. நானும்!
“கடவுள் க்ருபை அங்க்கிள்..அவள் ப்ரிய அப்பாவை அவள் அண்ணி முதியோர் இல்லத்தில் சேர்த்து விட...அந்த காயமே..என் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ள தோதாக அமைய..
ஆதரவு அற்ற எங்கள் அத்தையும் நம்முடன் இருக்க வேண்டும் எனற என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாள்..”
“காட் ப்ளஸ் யு”
6 comments:
குழந்தையை தத்தெடுப்பது போல முதியோர் இல்லத்திலிருந்து ஒரு தாத்தாவை தத்தெடுத்துக் கொண்டார்களா வைவஸ்வதனும் லதாங்கியும்...!
கதை சிறப்பாக இருக்கு.
கதை நன்றாக இருக்கிறது.
வைவஸ்வதன் பேர் நல்லா இருக்கு.. ஆமா நிலாமகள் சொன்னதுதான் கதையா..
சூர்ய வம்சத்தில் அதிதி தேவிக்கும் - காச்யபருக்கும் பிறந்தவர் விவஸ்வான் (ஸூர்யன்) இவரது புத்திரர் சிராத்ததேவர். இவரை வைவஸ்வதன் என்று அழைப்பார்கள் (வைவஸ்வத மநு) இவருடைய புத்திரர் இக்ஷ்வாகு.
இக்ஷ்வாகுவின் வம்ஸத்தில் ஸத்யவ்ரதர் (த்ரிசங்கு), ஹரிச்சந்திரன், பகீரதன், தசரதன், பின்னர் ஸ்ரீராமபிரான் ஆகியோர் தோன்றினர்.
அந்த வைவஸ்வதனுக்கும் இந்த வைவஸ்வதனுக்கும் இடையில் விரியும் காலத்துக்கிடையில் எத்தனை எத்தனை கதைகள்? உறவுகளின் நெருக்கமும் விலக்கமும் எத்தனை எத்தனை?
இன்னமும் பெயர் துரத்திக்கொண்டிருக்கிறது ஆர்.ஆர்.ஆர். சார்.
வைவஸ்வதன் - லதாங்கி... நல்ல பெயர்கள்.....
நல்ல கதை.
Post a Comment