Saturday, December 17, 2011

கருத்துள்ள விதைகள்!!


*
இனி ஒரு புத்தன்
பிறக்க மாட்டான்!
ஞானம் கொடுக்க
நம்மிடம்
மரமில்லை!

**
ஆறாயிரம் கிமீ தாண்டி,
உள்ள ஊருக்கு,
குமரியிலிருந்து
இருப்புப் பாதை போட்டு,
இதயங்களை இணைத்த
அதே வேளை,
முன்னூறு கிமீயில்,
இருக்கும் மூணாறு
போக முடியவில்லை,
முல்லை பெரியாரால்!
***
முன் ஜாமின் கொடுத்து,
வெளி வந்தவன்,
கொலை!
முன் விரோதம்!!
****
பிரசவ ஆஸ்பத்திரி
வழியாய் செல்லும்
டவுன் பஸ்ஸும்
நிறை மாத கர்ப்பிணியாய்!
*****
உனக்கும்,
பிக் பாக்கெட் காரனுக்கும்,
ஒரு வித்யாசம்!
அவன் கைகளால்
உள்ளதை எடுத்தான்!
நீ உன் கண்களால்
உள்ளத்தை எடுத்தாய்!!
*****

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. அனைத்துமே அருமை.

//அவன் கைகளால்
உள்ளதை எடுத்தான்!
நீ உன் கண்களால்
உள்ளத்தை எடுத்தாய்!!//

நீங்களும் தான் இந்த சூப்பரான குட்டிக்குட்டிக் கவிதைகளால். ;)))))

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை.... :)

உள்ளத்தை கவர்ந்தவர் நீங்களும் தான் - உங்கள் கவிதைகளால்.... :)

ஸ்ரீராம். said...

இரண்டும், ஐந்தும்!

ரிஷபன் said...

அஞ்சுவை அமுது!

vasan said...

Kavithai....Kavithai.. Super RR. :)

ADHI VENKAT said...

அனைத்துமே அருமையாய் இருந்தது.

ஹ ர ணி said...

அருமை சார். ஐந்தும் ஐந்து ஞானமுத்துக்கள்.

சசிகலா said...

அவன் கைகளால்
உள்ளதை எடுத்தான்!
நீ உன் கண்களால்
உள்ளத்தை எடுத்தாய்!!