Tuesday, December 13, 2011

அழைப்பிதழ்!!


அந்த ஆஃபீஸ் அன்று சந்தோஷத்தை பேலாவிலிருந்து எடுத்து வாரி வாரி பூசிக் கொண்டது!
வனஜா அழைப்பிதழ் கொடுத்த நன்னாள் அல்லவா!
யார் அந்த வனஜா?
ஆஃபீஸில் புதிதாய சேர்ந்த அனைத்து யுவன்களும்..யுவதிகளும் அடுத்தடுத்த வருடங்களில் திருமணப் பத்திரிகை கொடுக்க..பாவம் வனஜாவிற்கு தான் தட்டி.. போயிற்று!ஏதோ ஃபேம்லி ப்ராப்ளமாக இருக்க வேண்டும்.
என்னம்மா?
எப்ப?
என்னாச்சு?
வாதஸ்ல்யத்துடன் தான் கேட்கிறார்கள் எல்லாருமே..ஆனால்,அந்த இளம் குருத்து மனம் என்ன புண்படும் என்பதை யார் அறிவார்?
எத்தனை தடவை அழுதிருக்கிறாளோ?
ஆச்சு..
அந்த வனஜாவும் முகம் நிறைந்த சிரிப்புடன், ஒவ்வொருவர் சீட்டிற்கும் சென்று
”அவசியம் ஃபேமிலியுடன் வரணும்” என்று கேட்டுக் கொண்டு, திருமண அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்
அந்த நாள் அல்லவா இது!
அனைவருக்கும் சந்தோஷம்..
யாரையாவது விட்டு விட்டோமா என்று பார்த்து..பார்த்து கொடுத்தாள்..ஆனால், சுந்தரத்தை மட்டும் ஏனோ தவிர்த்து விட்டாள்!
ஹெட்க்ளார்க் கூட கேட்டு பார்த்தார்...
“அம்மா..சுந்தரம்?”
அதற்கு பதில் ஒரு புன்னகை தான்!
பாவம்..மனசை காயப் படுத்தி இருப்பான் போல..
அந்த நாளும் வந்தது!
சுந்தரம் லீவ்!
அவர்களுக்குள் என்ன மனஸ்தாபமோ?
சுந்தரத்தைத் தவிர அனைவரும் கல்யாணம் அட்டெண்ட் செய்ய..
சுந்தரம் ஜம்மென்று,சம்பந்தி வீட்டு மக்களுடன் உட்கார்ந்திருந்தான்..
அவனுக்கு மட்டும்...
வி.ஐ.பி. உறவு என்று, வீடு தேடி பத்திரிகை கொடுத்திருந்தாள், வனஜா!

8 comments:

RVS said...

லாஸ்ட் லைன் ட்விஸ்ட் கதை. ரொம்ப நல்லா இருக்கு சார்!

ஸ்ரீராம். said...

ஞாபகப் படுத்தியவர்களிடம் சொல்லியிருக்கலாமே...ஏன் சொல்லாமல் சஸ்பென்ஸ்...? ஒருபொருள் மறைபொருள் அவருக்கு இலக்கணமோ...!!

ரிஷபன் said...

சுந்தரமான கதை முடிவில்.

ADHI VENKAT said...

அருமையான கதை. கடைசி வரிகளில் நல்ல சுவாரசியம்.

RAMA RAVI (RAMVI) said...

நான் சுந்தரம் தான் மணமகன்னு நினைச்சுட்டேன்.நல்ல கதை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்க கடைசி வரிப் பொடிக்காக ஓடோடி வந்தேன்.எதிர்பார்த்தது போலவே பொடியும் கிடைத்தது.ஹச்.ஹச்.

நிலாமகள் said...

நான் சுந்தரம் தான் மணமகன்னு நினைச்சுட்டேன்.நல்ல கதை//

நானும்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... கடைசியில் வைச்சீங்களே ஒரு பொடி... :) அதான் உங்க டச்....