நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Saturday, December 3, 2011
என் ஜாதி மக்களுக்கு நான் கொடுத்த விருந்து!
ஆரண்ய நிவாஸத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை, என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு கொள்ளை ஆனந்தம் ....
படம் 1
சமீபத்தில் ஒடிஸா போயிருந்தேன்.அங்கு கார்த்திகை வியாழனன்று, நெல்லி மர இலைகளை வைத்துக் கொண்டு,லக்ஷ்மி பூஜை கோலாகலமாக நடந்தது.அதை என் சகதர்மிணி அவர் அம்மாவிடம் சொல்ல, அவர்கள் இருவருக்கும் ஆசை வந்து, எங்கள் வீட்டில் வளரும் நெல்லி மரத்தில்,கார்த்திகை ஞாயிற்றுக் கிழமை லக்ஷ்மி பூஜை பண்ணினார்கள்.. இது தான் மேலே உள்ள படம்.
மரங்களைப் போற்றுதும்!
மரங்களைப் போற்றுதும்!!
படம் 2
இதோ..இந்த வாழைமரம் குலை தள்ளியாகி விட்டது.பச்சை பசேலென்று இந்த இடமே மனசுக்கு ரம்யமாக இருக்கிறதல்லவா?
படம் 3
இந்த மரமும் கூடத் தான்!ஆனால் சூரியன் முந்திக் கொண்டு விட, என் கேமரா சற்றே பின் தங்கி விட்டது போலும்..அது தான் அந்த ப்ளாஷ்!
படம் 4
இந்த வாழையைத் தான் பாருங்களேன்!..குலை தள்ளிய வாழை தான் இதுவும்!ஆனால் இதை அப்படியே மரத்திலேயே பழுக்க வைத்து விட்டு, அந்த பழங்களை அப்படியே விட்டு விட்டோம்....எத்தனை பழம் தான் நாம் சாப்பிடுவது? எத்தனை பழம் தான் உறவுக் காரர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பது? ஒரு வாழைத் தாரை கடையில் விற்று, காசு பார்த்து விட்டோம்...
பழங்கள் அழுகி, பூச்சிகள் பல்கி பெருகி,அந்த இடம் அசிங்கமாய் போய் விடுமோ என்று உள்ளூர பயம்..இருந்தாலும், மரத்திலேயே பழங்கள் இருக்கட்டும் என்று ஒரு சங்கல்பம்..!
வாழைப் பழங்களும் பழுத்து விட்டது!
பெருமைக்காக சொல்லவில்லை!
நம் குருவிகளை பாருங்கள்!!
அழகாய் கூட்டம்.. கூட்டமாய் வந்து கூச்சலிட்டு..விளையாடி..பழங்களை சாப்பிட்டு ....
இடத்தை கொஞ்சம் கூட அசுத்தப் படுத்தாமல்....
அவற்றின் வருகை மனதுக்கு மிக..மிக.. சந்தோஷமாய்....
...இன்றைக்கு ஏன் தான் இந்த ஆனந்தமோ?
Labels:
ஆரண்ய நிவாஸம்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இயற்கையைப் பேணும் ஆர்.ஆர்.ஆரைப் போற்றுதும்..
அன்பின் ராமமூர்த்தி - இயற்கை அழிந்து கொண்டிருக்கும் இக்கால கட்டததில் இயற்கையினைப் போற்றி இரசிக்கும் குணம் நன்று. பழங்களைச் சாப்பிடும் பறவைகள் சிறு அசுத்தம் கூடச் செய்யாமல் சுத்தமாக இடத்தினை விட்டுச் சென்றது நாம் கர்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. படங்கள் 3 4 காணவில்லையே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பழங்களை மரத்திலேயே விட்டு விட சட்டென்று யாருக்கும் மனது வராது...பாராட்டுகள் சார்.
ஆரண்ய நிவாஸத்தில் வாழையும் நெல்லியும் இன்னும் பலவும் நன்கு செழித்து வளர்ந்து நன்கு பயன் தரட்டும்.
பதிவு நல்லா இருக்கு.ஆனா ரெண்டே படம்தான இருக்கு?
மகிழ்ச்சி.... ஆனால் இரண்டே படங்கள் தான் போட்டு இருக்கீங்க! மற்றவை எங்கே ? :)
இதோ..இப்போதே...! சாரி..கொஞ்சம் அவசரப் பட்டு விட்டேன் போல!
அற்புதமான விஷயம். எங்கள் வீட்டில் கூட பலாமரத்து உச்சியில் பழுத்த பழங்களை ஆண்டுதோறும் அது காக்கை குருவிகளுகாக இயற்கையின் பரிசென மனப்பூர்வமாய் விடுவது வழக்கம். மாமரத்திலும் அப்படியே. தானாக கனிந்து விழும் மாம்பழங்களை பறவையினங்கள் வந்து பசியாறி அவற்றின் மொழியில் குரல்கொடுத்து குதூகலப் படுத்துமே... அதற்கு எந்த பணம் ஈடாகும்...?! முந்திரி,கொய்யா, நாவல், சீத்தா மரங்களிலும் இதே வழக்கம் தான்.
எனக்கொரு சகோதரரும் இப்படியிருக்கிறாரென அறிய வரும்போது மிக மகிழ்கிறது மனம்.
நெல்லிமர பூஜை குறித்து விளக்கமாக ஒரு பதிவெழுதினால் என் மாமியாருக்கு உபயோகமாகும். தினசரி நாங்கள் விளக்கேற்றுவது உண்டு.
'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்ற பாரதி வழியில் பதிவின் தலைப்போ... முதலில் நான் மடத்தனமாக திகைத்து விட்டேன்.பதிவைப் படிக்கவும் உணர முடிந்தது.படங்கள் அருமை.
பெயரிலேயே வனம் வைத்திருப்பதாலோ இத்தனை பாசம்?
Post a Comment