Sunday, November 27, 2011

காணாமல் போன கதலி!


அது ஒரு ப்ரும்மாண்டமான கோவில்..
தமிழின் ஒவ்வொரு மாதத்தின் பெயரிலும்
ஒவ்வொரு வீதி!
விஸ்தாரமான இடம்..
நந்த வனம்..தெப்பக் குளம்..யானை,குதிரை லாயங்கள்..
மடப்பள்ளி..பூக்கடை.
அர்த்த ஜாம மண்டபம்
.என்று சகல விதமான
செளகரியங்களுடன்..
சுற்றி வந்து இதோ கர்ப்பக்ருஹம்...
நிசப்தமான சூழலைக் கிழித்தாற்போல்,
என்ன சப்தம் அது?
உற்று கவனிக்கிறோம்!
அங்கு பலம்(பழம்),தளம்(இலை)
பத்ரம் புஷ்பங்களுக்குள் போட்டி,
யார் பெரியவன் என்று?
எல்லாம் பேசிப் பேசி
அசந்து போய் விட,
கதலி பலம் (வாழைப் பழம்)
மட்டும் கர்வத்துடன்
பேசியது..ஏன் கத்தியது..
உங்களில் அத்தனை பேரிலும்
நானல்லவோ சுவை உள்ளவன்..
நான் தான் பெரியவன்..
பம்மிக் கிடந்தன,
பாக்கி அத்தனையும்!
பகவானின் நிர்மால்ய தரிசனம்!
தளத்தை மாலையாக்கி,
பகவானின் கழுத்தில்
போட்டார்கள்......,
புஷ்பம் தலயில் சூடப் பட..
பாதார விந்தங்களில், பத்ரம்!
கலங்கிப் போய் கதலி நிற்க,
எங்கிருந்தோ வந்த எலி ஒன்று,
அதைக் கவ்விக் கொண்டோட,
கர்வத்துடன் பேசிய கதலி,
அங்கு,
காணாமல் போயிற்று!

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

கதலி - இந்த வார்த்தையிலேயே எலி இருக்கே! அதான் கொண்டு போயிடுச்சு! :)

நல்லா இருக்கு!

ரிஷபன் said...

காணாமல் போன காதலின்னு படிச்சுட்டேன்.. முதல்ல.

கர்வம் வந்தா காணாமத் தான் போவோம்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அடடா!

கர்வப்பட்ட கதலியை கடைசியில் எலியல்லவா தூக்கிச்சென்று விட்டது!

சிவகுமாரன் said...

நானும் காணாமல் போன காதலி என்று தான் படித்தேன்.
நம்ம புத்தி போற போக்கு அப்படி.

மிக அழகாக கர்வம் ஆகாது என்பதை சொல்லிப் போகிறீர்கள்
அருமை மூவார் சார்.

நிலாமகள் said...

அட‌ப்பாவ‌மே! க‌த‌லிக்கு இப்ப‌டியொரு க‌ர்வ‌ப‌ங்க‌மா...?! ச‌வுண்டு பார்ட்டியாக‌ இருப்ப‌தை விட‌ சைல‌ண்ட் பார்ட்டியாக‌ இருப்ப‌துதான் ந‌ல்ல‌து போலிருக்கிற‌து!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அய்யோ ரிஷபன்! ஸேம் பின்ச்.காதலிதான் என் கண்ணிலும் பட்டாள்.

காதலி கதலியாகிப் பின் எலிவாயில் போனாள் செருக்கால்.

அருமை ஆர்.ஆர்.ஆர். சார்.

ADHI VENKAT said...

கர்வம் வரக்கூடாத ஒன்று. ரொம்ப நல்லா இருந்தது சார்.

இராஜராஜேஸ்வரி said...

கலங்கிப் போய் கதலி நிற்க,
எங்கிருந்தோ வந்த எலி ஒன்று,
அதைக் கவ்விக் கொண்டோட,
கர்வத்துடன் பேசிய கதலி,
அங்கு,
காணாமல் போயிற்று!/

கதலியை
காதலியாய் நினைத்து
எலி கவ்விக் கொண்டோடியிருக்கும்!