Sunday, November 27, 2011

மர்டர்..


”ஷஷாங்”
“எஸ்”
“ ஷஷாங்.. நான் தான் க்ரைம் பிராஞ்ச் மயில்வாகனன் பேசறேன்..இங்க பல்லாவரத்தில ஒரு கொலை நடந்துருக்குப்பா..”
“ சார்..சார்..இப்பத் தான் எனக்கும் ஷைலஜாவிற்க்கும் மேரேஜ் ஆகி, ஹனிமூன் கிளம்பிட்டிருக்கோம்..ப்ளீஸ்”
“ அட..உனக்கும்..ஷைலஜாவிற்கும் கல்யாணாமா சொல்லவே இல்லையே படவா....எனி ஹோ கங்க்ராட்ஸ்!எங்க ஹனிமூன் போறீங்க?”
“சார்..சார்...தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க..எனக்கும், அவளுக்கும் தனித் தனியா கல்யாணம்.
அவ புருஷனோட நைனிடால் போறா.. நான் என் வைஃபோட குலு மணாலி போறேன்.. நம்ம ஸ்னிஃபர் டாக் துப்பறியும் நிறுவனம் பத்து நாள் லீவ்!”
“ஷஷாங்..சின்ன வேலை தாம்ப்பா இது! நீ வந்தா அரை மணி நேரத்தில கண்டுபிடிச்சுடலாம்..
உங்க ஹனிமூன் செலவை டிபார்ட்மெண்ட் ஸ்பான்ஸர் செய்யும்..ப்ளீஸ்பா”
ஃபோன் வைக்கப் பட்டது.
“ஷைலு”
“எஸ். ஸார்..பல்லாவரம் போகணும்..மயில்வாகனன் சார் பேச்சு..சசி அண்ட் சேகர் சசிதரன் கொலை..கொலையா..தற்கொலையான்னு சந்தேகம்..பார்ட்னர் சேகர் சந்தேகப்பட்டு புகார் கொடுத்திருக்கார்..சந்தேகப் படும்படியாய் எதுவும் இல்ல..ஆனா, சசிதரன் சாரோட ட்ரைவர் சம்பவம் நடந்த அரை மணி நேரத்துல அப்ஸ்காண்டு ஆயிட்டாரு..போதுமா..
மூச்சு வாங்க ஷைலு சொல்லிக் கொண்டு போக, ஒரு ஸ்டேஜில் கண்களை மூடி கொண்டான், ஷஷாங்க்! சாரி...இது ஓவர்..கட்டின தாலி ஈரம் கூட காயல..அதுக்குள்ள துரோகம் பண்ணக் கூடாது..”
“அட”
அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் பல்லாவரத்தில்!
மயில்வாகனன் முன்னாலேயே வந்திருந்தார்.
ஃப்ரான்சிக் ரிப்போர்ட்..குறுக்கு விசாரணை....ஃபோட்டோ எல்லா சடங்குகளும் முடிந்தது.
சசிதரன் தலைமாட்டில் ஒரு பேப்பர், ஷஷாங்க் கவனத்தைக் கவர்ந்தது..
பக்கவாட்டில் ஒரு புத்தகம்.
துப்பறியும் சாம்பு.
“சார்..சேகர் சார் எங்கே?”
“இப்பத் தான்பா வீட்டுக்குப் போனார்..அங்க போனா பார்க்கலாம்..ஜீப் வேணுமா?”
“வேண்டாம்”
க்ரிங்..க்ரிங்..
சேகர் திறந்தார்..கண்கள் அழுதுக் கொண்டிருந்தன..
“வாங்க”
ஆஃபீஸ் ரூம் கூட்டிக் கொண்டு போனார்.
“ரொம்ப நல்லவர் சார் என் பார்ட்னர்..எங்களுக்கு விரோதிகளே இல்ல..பிசினஸ் நல்லா டெவலப் ஆயிட்டிருக்கும் போது, திடீரென்று தாழி உடைந்தாற் போல்..”
குலுங்கினார், சேகர்.
“ சார்..கூல் டெளன்..” சமாதானப் படுத்தினான், ஷஷாங்க்.
" அவரோட ட்ரைவர் எப்படி?”
“ நல்ல பையன் சார்..துருதுருன்னு இருப்பான்..இவரும் அவனை கண்ணான்னு தான் கூப்பிடுவார்..சந்தேகமே பட முடியாது, சார்”
பேசிக் கொண்டு இருக்கும் போது, சேகரின் கை ஏதோ பேப்பரில் கிறுக்கியது. காற்றில் அது பறந்து வந்து ஷஷாங் சட்டையில் ஒட்டிக் கொண்டது!
”அப்ப வரேன், சார்”
அடுத்த ஒரு மணி நேரம் ஆகி விட்ட நிலையில்,
க்ரிங்..க்ரிங்..
ஆஃபீஸ் ஃபோன்!
“ஷஷாங்.. நான் மயில் வாகனன்”
“ சார், கல்ப்ரிட்டைக் கண்டுபிடிச்சாச்சு”
“யாருப்பா?”
“ பார்ட்னர் சேகர்!”
“எப்படிப்பா சொல்றே? ரொம்ப மரியாதையான மனுஷர்பா அவர்!”
“ சார்..அவர் தான் கொலை பண்ணியிருக்கார்.அவர் இவருக்கு ஒரு புக் ப்ரெசண்ட் பண்ணியிருக்கார்..அதில ஒவ்வொரு முனையிலும் ஸ்லோ பாய்ஸன்..சசிதரனுக்கு ஒரு பழக்கம்.அவர் பக்கத்தை புரட்டும் போது,எச்சல் பண்ணித் தான் அடுத்த பக்கம் புரட்டுவார்..
அது..அந்த ஸ்லோ பாய்ஸன் கொஞ்சம் ..கொஞ்சமாய் உள்ள போய்..”
“அது சரி..அந்த புக்கை அவர் தான் கொடுத்தார்ங்கறதுக்கு என்ன ஆதாரம்?”
“ரொம்ப சிம்ப்பிள்! சேகருக்கு ஒரு பழக்கம். அவர் ஒரு இடத்திற்கு வந்தார்னா அங்க இருக்கிற பேப்பர்ல ஒரு கார்ட்டூன் வரைந்து விடுவார்..அந்த புக்கில் இரண்டு, மூன்று பக்கங்களில் கார்ட்டூன்!”
“ அப்ப அந்த ட்ரைவர்?”
“ சேகர் தான் அவருக்கு லீவ் கொடுத்து அனுப்பியிருக்கார்”
“வெரி குட்..அங்கியே இரு. செக் அனுப்பறேன்”
ஷைலூ.........
மெளனம்!
“சாரி சர்.. நான் அப்பவே எஸ்கேப் ..டேக் ஆஃப் டு நைனிடால்!”
ஷஷாங் செல் ஃபோன் கொஞ்சியது!

4 comments:

ஸ்ரீராம். said...

Short...
Sweet...
Thrill...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒருவ்ரைக்காலி செய்ய சூப்பர் வழி.

ஆனால் ஒரு கண்டிஷன், கொல்லப்பட வேண்டியவர் நாக்குப்போட்டு எச்சில் செய்பவராகவும், புத்தகப்புழுவாகவும் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டோம்.

நல்லதொரு டிடெக்டிவ் ஸ்டோரி ஸ்வாமி.

[நாளைமுதல் ... நாக்குப்போட மாட்டேன் ... சத்தியமடி தங்கம் ...
என்று பாடிக்கொண்டிருக்கிறேன்]

நானும் இப்போ ஜாலியா ஹனிமூன் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். வரட்டுமா? vgk

ரிஷபன் said...

மழைக்கு சுடச் சுட ஒரு கிரைம் ஸ்டோரியா.. பலே.

படம்தான் ரொம்ப மிரட்டுது.

வெங்கட் நாகராஜ் said...

அட இன்னிக்கே மூணு பதிவு! க்ரைம் ஸ்டோரி த்ரில்லிங்கா இருக்கு!

அடுத்ததையும் படிக்கிறேன்...