நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Sunday, November 27, 2011
தொழில் தர்மம்!
”..லே மூக்கா..இங்க வாடாலே..”
“ந்தா”
ராக்கப்பனும், மூக்கனும் தோஸ்த். மூக்கனுக்கு ராக்கப்பன் பையன் வயசு இருக்கும்..தொழில்னு வந்துட்டா,அதெல்லாம் பார்க்க முடியாது..அப்ரசண்டியா... கிப்ரசண்டியா ...ஏதோ ஒண்ணு தொழில் கத்துக்க்ற சிஷ்யன்... மூக்கன்..என்ன தொழில்னு கேக்கறீயளா? வேறென்ன?
பிக்பாக்கெட்டு...திருடறது தான்..
கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாதுன்னு சொல்வாங்களேன்னு நீங்க முணுமுணுக்கிறது காதில விழறது..என்ன செய்ய?
வர,வர ராக்கப்பன்னுக்கும் வயசாயிட்டேப் போவுது..முன்ன மாதிரி முடியல..இந்த மூக்கன் பய மட்டும் கொஞ்சம் படிஞ்சான்னா, தன் பொண்ணு கழுத்தில மூக்கனை விட்டு மூணு முடிச்சு போடச் சொல்லிட்டு, கிருஷ்ணா..ராமான்னு ஏதாவது கோவில்லப் போய்..
திருட வேண்டியது தான்!
“அண்ணாத்தே..அண்ணாத்தே”
“என்னடாலே”
“இதைப் பாரு”
பெரிய வீடு..காவலில் நாய் இல்ல..கூர்க்கா குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.
சரித்தான்..இன்னிக்கி யார் முவத்தில முழிச்சோமோ..
சந்தோஷமாய்
பம்மினான்..
பதுங்கினான்..
ராக்கப்பன்.
“ஏய் வாடாலே மூக்கா..”
திடீரென்று நின்றான், ராக்கப்பன்.
” என்ன அண்ணாத்தே?”
“உஷ்..கிளம்பு என்னோட”
கொழுத்த பசு மாடு ஒன்றை விட்டு விட்டு சிங்கம் ஏமாற்றத்துடன் செல்ல, குட்டியும் தொடர்ந்தது, ஏக்கத்துடன்!
”எதுக்கு அண்ணாத்தே கிளம்பிட்டீங்க?”
“வீடு ஆருது?”
“தெர்லே”
“..அது மந்திரி மாடசாமி வூடுடா”
“பயந்துட்டீகளா?”
“பயமா..எனக்கா? மந்திரின்னா ஆரு?”
”தெர்ல”
“ திருடன்டா மாப்ளே, திருடன்! திருடன் வீட்ல, திருடன் திருடக் கூடாது..அது தொளில் தர்மமில்ல..”
ஆங்கமாய் மூக்கன் தலயில் ராக்கு குட்டு ஒன்று வைக்க..
அக்...கா....ங் ன்று கத்தினான் மூக்கன் வலி தாங்காமல்!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அதானே, கூட்டாளி வீட்டுலயே திருட முடியுமா.....
//“..அது மந்திரி மாடசாமி வூடுடா”
“பயந்துட்டீகளா?”
“பயமா..எனக்கா? மந்திரின்னா ஆரு?”
”தெர்ல”
“ திருடன்டா மாப்ளே, திருடன்! திருடன் வீட்ல, திருடன் திருடக் கூடாது..அது தொளில் தர்மமில்ல..”//
திருடர்களின் தொழில் தர்மம் மெய் சிலிர்க்க வைத்தது.
நல்ல நகைச்சுவை.
இந்த நகைச்சுவையிலும் நகை இருப்பதால் அதுவும் திருட்டுப்போய் விடப்போகிறது. ஜாக்கிரதை ஸ்வாமி!
vgk
ஒண்ணும் தப்பே இல்ல.. தொழில்ல எப்படிப் பார்த்தாலும் அவருதான் பெரியவரு.. குடும்பத்துல வசதிக் குறைவானவங்களைக் காப்பாத்தாணும்னு சாஸ்திர தர்மம் சொல்லுது! ராக்கப்பனை அடுத்ததடவ உள்ளார போகச் சொல்லுங்க.
நல்ல தொழில் தர்மம்தான்!
Post a Comment