நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Wednesday, November 23, 2011
ஓரி காக்கை..
ராமாமிர்தத்திற்கு சந்தோஷமும் இல்லை..துக்கமும் இல்லை.. அவருடைய அபிப்ராயம் கேட்டால்,அவர் அந்த காலேஜ் ப்ரோபஸரின் மூன்றாவது பெண்ணைத் தான் செலக்ட் செய்வார்..ஆனால், லலிதாவிற்கு அந்த வரன் பிடிக்காது.. அந்த பேங்க் மேனேஜரின் பெண்ணைத் தான் அவள் தேர்வு செய்வாள்!ஏனென்றால், அவர்களுக்கு ஒரே பெண். ஆசை.. ஆசையாய் செய்வார்கள்.
”அம்மா, ஜோஸ்யர் சொல்லிட்டார்..இரண்டு வரனும் நன்றாகப் பொருந்துகிறது என்று” - இதை சொல்லி விட்டால், அவர் கடமை முடிந்தது.
விஷயம் இது தான்!
அவர்கள் பையன் சுனிலுக்கு பெண் பார்க்கிறார்கள்..தரகர் கொடுத்த வரன்களில், இரண்டு வரன்கள் அவர்கள் தகுதிக்குப் பொருத்தமாக இருந்தது..இப்போது இரண்டுமே பொருத்தம் என்று ஜோஸ்யர் சொல்லி விட்டார்.
பேங்க் மேனேஜருக்கு ஒரே பெண்..அவர் மனைவியும் அரசு உத்யோகம்.. நன்றாகவே செய்வார்கள்..மேலும் பெண் வேலை பார்க்கிறாள்.
புரபஸருக்கு நான்கும் பெண்கள்..இது மூன்றாவது பெண்..இன்னும் ஒரு பெண்ணை கரையேற்ற வேண்டும்..ஒரு சம்பளம்! இதில் உறவுகள் ஜாஸ்தி.தொண்ணூறு வயதில் கொள்ளு தாத்தா, பாட்டி இருக்கிறார்களாம், கல்யாணப் பெண்ணிற்கு! பெரிய குடும்பம்!
“ என்ன ஆச்சு?”-லலிதா.
“ இரண்டுமே நல்லா பொருந்தறதாம்..”
“ அப்படீன்னா, அந்த புரபஸரோட பெண்ணையே பார்க்கலாம்..”
“ என்ன லலிதா, அது பெரிய சம்சாரம்...கும்பல் சொல்லி மாளாது”
“ அது தான் நமக்கு வேணும்.. நான் ஓரி காக்கை..உங்க வீட்லயும் அப்படித் தான்.. நமக்கும் ஒரே பையன் தான்..இதுல பெரிய சம்சார குடும்பத்தில சம்பந்தம் வைச்சிட்டா தான், நமக்கு உறவுகளோட அருமையே தெரியும்..இந்த பொண்ணு, நம்ம பையனை நல்லா கவனிச்சுப்பா... நாம வயசானதும், நம்மளையும் பெத்த தாய், தந்தை போல் கவனிச்சுப்பா..உறவு தான் வேணும் பணம் வேண்டாம்”
லலிதா சொல்ல..சொல்ல அப்படியே மகிழ்ச்சியில் திக்கு,முக்காடி போனார், ராமாமிர்தம்!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சரியான முடிவு....
நானும் யூகித்தது சரியாக இருந்தது கடைசியில்....
தமிழ்மணம்: 2
ஓரி காக்கை...
கருப்பழகி
எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு!
கதை சூப்பர்,ஆனா அது என்ன சார் ஓரி காக்கை?நான் கேள்விப் பட்டதே இல்லையே! ஒத்தை ஆள்னு அர்த்தமா?
நான் அப்படித்தான் புரிஞ்சுண்டேன்
ஓரி காக்கைன்னா ஒத்தையா..
மனுஷங்க வேணும்னு சொல்ற ஆர் ஆர் ஆருக்கு ஜே!
//ஓரி காக்கை.//
இந்த வார்த்தையை கேள்விபட்டதே இல்லை. இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன்.
கதை நன்றாக இருக்கு.
ரொம்ப நல்லா இருக்கு சார். சரியான முடிவு.
Post a Comment