Friday, November 4, 2011

அலாஸ்காவும்,ஐஸ் பெட்டியும்!!!



பனி விழும் நாளில், ஊட்டியில் வாக்கிங் போவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!
எதிர்த்தாற் போல் மிஸ்டர் சுகவனேசன்...
சுகவனேசன் ஒரு விசித்ரமான பேர்வழி..என் மீது ஒரு ’பெரிய கம்பெனியில் மனித வள மேம்பாட்டுத் துறையில் பொறுப்பான உத்யோகம் பார்த்து இளைப்பாறுகிறவர்’ என்கிற மரியாதை உண்டு. மேட்டுப் பாளையத்தின் ஒரு பெரிய தொழில் அதிபர் இப்படி என்னுடன் வித்யாசமில்லாமல் பழகுகிறாரே என்று என்னுள்ளும் ஆச்சர்யம்!
இப்படித் தான் போன வாரம் நான் காரமடை ரங்கநாத பெருமாளை சேவித்து விட்டு வரும் போது,சர்ரென்று படகு போன்ற கார் ஒன்று என்னை இடிக்கிறார்போல் வந்தது..யாரடா என்று பார்த்தால், நம்ம சுகவனேசன்!
“ வாங்க சார்.. நம்ம ஆஃபீஸ்க்குப் போலாம்”
” என்ன விஷயம்?”
“ இன்னிக்கு ஒரு இன்ட்டர்வ்யூ..மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் செலக்‌ஷன்.. நீங்க இன்ட ர்வ்யூ கமிட்டி மெம்பர்..”
என் அனுமதி கோரப் படவில்லை..அவராகவே தீர்மானித்து அந்த க்‌ஷணமே அதை அமுல் படுத்தியும் விட்டார்!
அது தான் சுகவனேசன்!
இன்ட்டர்வ்யூ நடந்தது..வந்த பையன்களில் ஒரு பையன் எக்கசக்க ஸ்மார்ட்..அவன் ஒருவன் தான் டை கட்டியிருந்தான்..அவன் சொன்னது இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது..
“...சார்...தயவுசெய்து தற்பெருமை என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்! 'I AM ABLE TO SELL FRIDGES TO ESKIMOS..IT'S TRUE' என்றான்..அலாஸ்கா போன்ற தூந்திர பிரதேசத்தில் ஐஸ் பெட்டிகள் விற்பேன் என்று சொல்வதற்கு எவ்வளவு ’ஸ்மார்ட்னெஸ்’ வேண்டும்..அவனுக்குத் தான் மிக அதிகமான மார்க் கொடுத்திருந்தேன், நான்!
இதோ..இதோ...நெருங்கி விட்டார், சுகவனேசன்.
“ குட்மார்னிங், ராகவன்”
“ குட்மார்னிங் சார்..என்ன ஆச்சு இன்ட்டர்வ்யூ?”
“ செலக்சன் ஆச்சு”
” அந்த டை போட்ட பையன் தானே?”
“ சாரி..அவனில்ல.. நீங்க என்ன ..எல்லாரும் தான் அவனுக்கு ஜாஸ்தி மார்க் போட்டீங்க ..ஆனா, நான் செலக்ட பண்ணலே?”
“ ஏன்..ரொம்ப கெட்டிக் காரப் பையன்..அலாஸ்கால கூட ஐஸ் பெட்டி விற்பேன்னானே?”
“ அந்த ATTIDUDE தான் பிடிக்கல..தேவையில்லாத சாமானை கஸ்டமர் தலையில கட்டறது அவனோட தனிப்பட்ட சாமர்த்தியமா இருக்கலாம்....அதனால, ஷார்ட் ரன்ல வேணா நம்மோட டார்ஜெட் அச்சீவ் ஆகலாம்...ஆனா,கம்பெனிக்கு நல்லதா அது?லாங் ரன்ல பார்த்தா நம்மளோட குட்வில் இல்ல ERODE ஆயிடும்?....அதைத் தானே நாம பார்க்கணும்!
..அதனால தான் அவனை செலக்ட் பண்ணல..”
திகைத்து நின்றேன், நான்!

13 comments:

ரிஷபன் said...

ஷார்ட் ரன்ல வேணா டார்ஜெட அச்சீவ் ஆயிடும்...ஆனா, நம்மளோட குட்வில் ERODE ஆயிடுமே..லாங் ரன்ல..அதையில்ல பார்க்கணும்!

நிஜமாவே சுகவனேசன் வித்தியாசமானவர்தான்.

ஸ்வர்ணரேக்கா said...

//லாங் ரன்ல..அதையில்ல பார்க்கணும்!// நம்மளோட குட்வில் ERODE ஆயிடுமே.//

--- உண்மை... கம்பெனியை பொறுத்தவரை நல்லபெயர் தான் முக்கியம்...

good story...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தேவையில்லாத சாமானை கஸ்டமர் தலையில கட்டறது அவனோட சாமர்த்தியமா இருக்கலாம்..ஆனா, கம்பெனிக்கு நல்லதில்ல சாமர்த்தியமில்ல..//

ஆஹா! நுகர்வோர் நலனைக் கருத்தில் கொள்ளும் அருமையான நிர்வாகிகள். வாழ்க! வாழ்கவே!!

கே. பி. ஜனா... said...

நல்ல பாயின்ட்! நல்ல தீர்ப்பு! நல்ல கதை!

ஸ்ரீராம். said...

வித்தியாசமான, நல்ல கோணம். தொலைநோக்குப் பார்வை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை. வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதைத் தர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் முதலாளிகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போது இருப்பதில் நிறைய பேர் தன்னுடைய சம்பாத்தியம் ஒன்றே முக்கியம் என அல்லவா இருக்கிறார்கள்....

middleclassmadhavi said...

நல்ல கதை! கருத்து சிந்திக்க வைக்கிறது.

R. Jagannathan said...

சுகவனேசன் இண்டர்வியூவிற்கு வந்தவர் சொன்னதை ‘தன்னம்பிக்கையுடன், எப்படியும், எங்கும், எதையும் என்னால் விற்க முடியும்’ என்று சொன்னதாகவே எடுத்டுக்கொண்டிருக்க வேண்டும். யாரும் அவரை எஸ்கிமோவுக்கு ஃப்ரிட்ஜ் விற்கச் சொல்லப் போவதில்லை. இண்டர்விற்கு வந்தவர் அனாவசிய வாய் சவடால் பேர்வழி, சுகவனம் அனாவசிய ‘மாற்றி யோசி’ பேர்வழி! - ஜெ.

RAMA RAVI (RAMVI) said...

அருமையான கதை சார்.

Unknown said...

ஆஹா! சுவாரசியமான திருப்பம். நல்ல சிறுகதை சார், அன்பு வாழ்த்துக்கள்!

ஹ ர ணி said...

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்கிற அறிவியல் இன்றைக்குமட்டுமல்ல யுகங்களாகித் தொடர்கிறது. அர்த்தமுள்ள பதிவு.

அப்பாதுரை said...

right!

CS. Mohan Kumar said...

அருமை . இறுதி கருத்து வியாபாரம் செய்யும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று