Wednesday, September 28, 2011

செருப்பாலூரில்.......


செருப்பாலூர்!
உங்களுக்கு வேண்டுமானால் ஊரின் பெயர் வினோதமாய் இருக்கலாம்..ஆனால், எனக்கு..கிரிக்கு..சிகாமணி சித்தப்பாக்கு...பாலு சித்தப்பாக்கெல்லாம் ..செருப்பாலூர் என்று சொன்னால் போதும்..கண்களில் மின்னல் தெறிக்கும்..பேச்சில் குஷி பிறக்கும்..
சிகா சித்தப்பாக்கு அவருடைய ஃப்ரண்ட்ஸ் ஷாஹுல் ஹமீது..பாசித்... கிருஷ்ணன்..முத்துக்குமரன்..STO..ஹெட் க்ளார்க் சோம சுந்தரம்.. லஸ்கர் நேசையன்..என்று ஞாபகம் வரும்..
லஸ்கர் நேசையன் பற்றி..
PWD யில் லஸ்கர் வேலை.என்று பெயர்...ஆனால் முழுக்க..முழுக்க பாட்டிக்கு PET..பாட்டி எது சொன்னாலும் செய்வார்..எது வாங்கி கொண்டு வா என்றாலும் ..அது புலிப்பால் என்றாலும் வாங்கி வந்து விடுவார்.. சிகா சித்தப்பா தான் செக்‌ஷன் ஆஃபீசர்..அவரை ஆபீஸ் வேலைக்காக சித்தப்பா எதுவும் சொல்ல முடியாது..பாட்டி SHIELD ஆக இருந்து கொண்டு அவரை காப்பாற்றி விடுவார்..பாட்டியின் சிபாரிசில் சிகா சித்தப்பாவிடமே நேசையன் காரியம் சாதித்துக் கொண்டு விடுவார்..என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. நேசையன் என் இன்னொரு பிள்ளை என்று பாட்டி அடிக்கடி சொல்லும் அளவிற்கு பாசம் உள்ளவர்.. நாங்கள் அங்கிருக்கும் போதே, அவருக்கு தக்கலைக்கு ட்ரான்ஸ்பர் ஆகி விட்டது. அதற்குப் பிறகு சதாசிவம் என்று ஒருவர் வந்தார்..அவர் எங்களுடன் அவ்வளவாய் ஒட்டவில்லை..
தாத்தாக்கு கோபால் பிள்ளை..(அவர் எங்களுக்கு ட்யூஷன் வாத்தியார்!) பாட்டிக்கு நேசையன்... நேசையன் கொண்டு வந்த சீனு என்கிற நாய்குட்டி!
எனக்கும்..கிரிக்கும்...செருப்பாலூர் என்றால் பெரிய லிஸ்ட் ஞாபகம் வந்து விடும்!
அயனிப் பழம்..கொல்லாம் பழம்..பேயன் வாழை..இதை அடுப்பில் சுட்டுத் தருவார் பாட்டி!
சிகா சித்தப்பா ஃப்ரீயா இருக்கும் போது, ஆஃபீஸ் ஜீப்பில் எங்களைக் கூட்டி கொண்டு செல்லும் இடங்களான பேச்சிப் பாறை..பெருஞ்சாணி டேம்..திற்பரப்பு ஃபால்ஸ்..பத்மனாப புரம் அரண்மனை..குலசேகரம் மார்க்கெட்..
செருப்பாலூர் எங்கிருக்கிறது என்று சரியாக ஞாபகம் வரவில்லை..ஆனால், மார்த்தாண்டத்திற்கும், குலசேகரத்திற்கும் நடுவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்..
திருச்சியிலிருந்து வந்த அந்த கூட்டுக் குடும்பம் இரண்டாகப் பிரிந்து...அண்ணா,அம்மா,பாலுசித்தப்பா,முரளி எல்லாரும் நாகர்கோவிலில்..தாத்தா..பாட்டி..சிகாமணி சித்தப்பா.. நான் ..கிரி..சகுந்தலா அத்தை..(அவர்களுக்கு கொஞ்ச நாளில் கல்யாணம் ஆகி மெட்ராஸ் போய் விட்டார்கள்)எல்லாரும் செருப்பாலூரில்!
நாங்களும் முதலில் அண்ணா,அம்மாவோடு தான் இருந்தோம்... நான் மூன்றாவதும்..கிரி ஒன்றாவதும் நாகர்கோவிலில் தான் படித்தோம்..ஆனால் அண்ணாவிற்கு ’கோதையார் லோயர் கேம்ப்’பிற்கு ட்ரான்ஸ்வர் ஆகி விட்டதால், அங்கு அப்போது ஸ்கூல் இல்லாத காரணத்தினால், நான் நான்காவதும், கிரி இரண்டாவதும் செருப்பாலூரில் தாத்தா, பாட்டியிடம் படித்தோம்.
சிகாமணி சித்தப்பா ராயல் என்ஃபீல்ட் வைத்திருந்தார்...பிரமாதமாய் ஜீப் ஓட்டுவார்..ஙோய்..ஙோய் சித்தப்பா... நானும் வரேன் சித்தப்பா என்று நானும்,கிரியும் அழுவோம்..அவர் எங்களை விட்டு ஆஃபீஸ் போனால்!
நாங்களும் எங்கள் ஃபெரண்ட்ஸ் ( வலது பக்கத்து வீட்டில் அம்பிகாபதி..அமராவதி அக்கா..ஒரு சின்ன தம்பி பெயர் மறந்து விட்டது ஹெட்க்ளார்க் சோமசுந்தரம் மாமா வீடு அது..இடது பக்கம் STO முத்துக் குமரன் சார் வீடு..அவர் பையன் ரமணி கிரி வயது)
எல்லாரிடமும் எங்கள் சிகா சித்தப்பா மோட்டார் சைக்கிள்..கார்..ஜீப்..ஏன் ஏரோப்ளேன்..ஹெலிகாப்டர் எல்லாம் சூப்பரா ஓட்டுவார் என்று சொல்ல..அவர்களூம் வாயில் ஈ புகுந்தது தெரியாமல் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்..
பெரிய பெரிய ஓட்டு வீடு..இன்ஸ்பெக்‌ஷன் பங்களா போல்! சுற்றிலும் பசுமை...ஆங்காங்கே ரப்பர் எஸ்டேட்..மரத்தை நேர்வகிடில் கத்தியால் கீறி..கொட்டாங்கச்சி வைத்திருப்பார்கள்..ரப்பர் பால் அதில் வடியும்!
பாடம் நடத்தியது போக கோபால் பிள்ளை ஒரு நாள் எங்களுக்கு கதை சொல்வார்..மறு நாள் காகிதத்தில் பந்து செய்ய கற்றுக் கொடுப்பார்..சிகாமணி சித்தப்பா கல்யாண ஃபோட்டோவில் கோபால் பிள்ளையை இன்னமும் அடையாளம் காட்டுவேனாக்கும் நான்!
தாத்தா,பாட்டி,சிகாமணி சித்தப்பா போயாச்சு!
அண்ணா,அம்மா,பாலு சித்தப்பா, நான்,கிரி எல்லாருமாய் ஒரு வண்டி எடுத்துக் கொண்டு நாகர்கோவில் வேப்பமூடு சித்ரா லாட்ஜில் ரூம் எடுத்துக் கொண்டு..
மறுபடியும் அந்த செருப்பாலூரைப் பார்க்க வேண்டும் என்று கொள்ளை ஆசை?
அப்படியே நேசையன்.. நாகர் கோவில் நாகராஜன் (இப்போது வாத்யாராம்..அங்கு புரோகிதரை வாத்யார் என்று சொல்வார்கள்)அவர்கள் சகோதரிகள் கீதா அக்கா..பாலா அக்கா எல்லாரையும்
பார்க்க வேண்டும் என்று ஆசை...முடியுமா?
ஹே..செருப்பாலூர்..என்கிற என் ஆருயிர் . நண்பனே...
உன்னை எப்போது காண்பேன், இனி?

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமையான நினைவுகள்... பழைய நினைவுகளை அசை போடுவதில் இருக்கும் ஆனந்தம் வேறெதில்....

செருப்பாலூர் நிச்சயம் வினோதமான பெயர் தான்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஊர் பெயரோ என்று நினைத்தேன். பிறகு தான் ஆள் பெயர் என்று தெரிந்து கொண்டேன். நல்ல பசுமையான நினைவுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மீண்டும் படித்தேன். ஆள் பெயரல்ல ஊர் பெயர் தான் என்று தெரிந்து கொண்டேன்,
வினோதமான பெயராகத் தான் உள்ளது.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

எனக்கும் கூட செருப்பாலூரைப் பற்றிய இனிய நினைவுகள் இன்றும் உண்டு....எப்போது அங்கு செல்வதாக உத்தேசம்...முன்கூட்டியே சொல்லவும்...’ஙொய்...ஙொய்..மூவார் முத்துசார்....நானும் வர்றேன்...முத்து சார்!!’

ஜீவி said...

ஒவ்வொரு பெயரையும் அவர்கள் இன்னார் என்று அறிமுகப்படுத்தி அடுக்கிய விதம் அழகாக இருந்தது. நினைவுகளைப் பெயரைக் கொண்டும் அந்தப் பெயர்கள் நினைவில் நிற்கும் பந்தம் குறித்தும் பாந்தமாகச் சொல்லியிருப்பதைச் சொல்லாமலும் விடமுடியாது.

ADHI VENKAT said...

அருமையான மலரும் நினைவுகள். வித்தியாசமாகவும் இருக்கு.

ரிஷபன் said...

அப்படியே கால யந்திரத்தில் பயணம் செய்த உல்லாசம்.
புது டெம்ப்ளேட் சூப்பர்..

மோகன்ஜி said...

மூவார்! காலச்சக்கரத்தை ரிவர்சில் சுற்றிவிட்டு, அந்த நாட்களுக்கு எங்களையும் இல்லே கூப்பிட்டுக் கொண்டு போய் விட்டீர்கள்?