Friday, September 16, 2011

மாத்தி யோசி...!


ஒரு ஊர்ல,அந்த ஊர் எல்லைல... ஒரு மரத்தடியில, ஒரு ஓல்ட் லேடி நிறைய வயர்களை வைச்சுண்டு எதையோ அசெம்பிள் பண்ணிண்டு இருந்தாளாம். அந்த சமயம் பார்த்து ஒரு காக்கா அங்க வந்துச்சாம்...
...’வந்து?’
அந்த ஓல்ட் லேடி அசந்திருக்கும் போது,அசெம்பிள் பண்ணி வைச்சிருந்த ஒரு ’பாம் டாப்பை’ லபக்னு தூக்கிண்டு பறந்து போயிடுச்சாம்.
“அச்சச்சோ அப்புறம்?”
அந்த காக்கா ஒரு உச்சாணி மரக்கிளையில உட்கார்ந்துண்டு அந்த ‘பாம் டாப்பில’ படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது,அந்த பக்கமா நரி ஒண்ணு வந்ததாம்....
“ நரி வந்து?”
...நரி வந்து..”காக்கா..காக்கா நீ நம்ம சாய் சரண் மாதிரி நல்லா பாட்டுப் பாடுவியாமே .ஒரு பாட்டு பாடேன்.. ” என்று சூப்பர் சிங்கர் ரேஞ்சுக்கு அதை கொம்பு சீவி
விட, நம்ம காக்காக்கு ஏக சந்தோஷம்.. நாமளும் அந்த ‘மாமா...மாப்ளே’ பாட்டை ட்ரை பண்ணிப் பார்க்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப..”
” யோசிச்சிட்டு இருந்தப்ப..அந்த காக்கா என்ன பண்ணிச்சு? பாட்டு பாடிச்சா?”
” ... பாடலாம்னு தான் நினச்சது..ஆனா..”
“ என்ன ஆனா?”
“ இரு சொல்றேன்.. நரி உசுப்பேத்தி விட்டுச்சா..காக்காக்கு ஏக சந்தோஷம் நாம பாடற பாட்டையும் கேக்கிறதுக்கு ஒரு நாதரி பய இருக்கானேன்னு ...”
” காக்கா பாடிச்சா...?”
“ பாடலாம்னு தான் நினச்சது..அதுக்கு திடீர்னு அதோட தாத்தா சொன்னது ஞாபகம் வந்துச்சா..”
“ தாத்தா காக்கா என்ன சொல்லிச்சு?”
வாயில இருந்த பாம் டாப்பை காலுக்கு இடுக்கில வைச்சுகிட்டு நம்ம காக்கா அந்த நரி கிட்ட சொன்னது;
“ லே நரியே..உங்க தாத்தா எங்க தாத்தாட்ட வடை சுட்ட கதையை எங்கிட்ட விலா வாரியா சொல்லிட்டு..பேராண்டி..பேராண்டி நா ஏமாந்தா மாதிரி நீயும் ஏமாந்துடாதேன்னாரு..அதனால.. நாம் ஏமாற மாட்டேன்..உன் வேலையைப் பார்த்துட்டுப் போன்னு
சொல்லவே..அந்த நரியும் தலையை தொங்க போட்டுகிட்டு ஓடிப் போயிடுச்சாம்...”
இது தான் நரி பன்னு தின்ன கதை!!
எதுக்கு இவ்வளவ்.. பில்டப்னு கேக்கறீயளா?
எங்க பார்த்தாலும்..யாரைப் பார்த்தாலும் ”மாத்தி யோசி..மாத்தி யோசி”ன்னு உயிரை எடுக்கிறாங்க..
அதனால்ல.. நரி, பாட்டிட்ட காக்கா சுட்ட வடையை சுட்ட கதையை நாமளும் தான் எத்தனை நாளக்குத் தான் சொல்லிக்கிட்டு இருக்கிறது..?
அதான் கொஞ்சம் மாத்தி யோசிச்சுட்டோமில்ல..........

11 comments:

குறையொன்றுமில்லை. said...

காக்கய்க ளும் புத்திசாலித்தனமா யோசிக்குதே?

RAMA RAVI (RAMVI) said...

ஆமாம் காலம் மாறச்சே எல்லாமேதானே மாறனும்?

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா ! வடையில்லாவிட்டாலும் கதை ருசிக்குதே.
ஆரண்யநிவாஸில் சுட்ட வடை ஸாரி, கதையன்றோ!!

Philosophy Prabhakaran said...

ரைட்டு... போட்டாச்சா...

middleclassmadhavi said...

Yosichu maathitteenga! :-))

பித்தனின் வாக்கு said...

intha kathaiyai unga area pasanga kitta sonningala?. nalla irukku story.

ரிஷபன் said...

வடை சுட்டுருச்சி..

கே. பி. ஜனா... said...

நல்லாவே மாதி யோசிக்கிறீங்க!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நல்லாவே மாத்தி யோசிச்சிருக்கீங்க.

ADHI VENKAT said...

புத்திசாலி காக்கா தான்....

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லாருக்கே..