Wednesday, September 7, 2011

(4) குறளும், குறுங்கதையும்!!


அம்மா கூனிக் குறுகி நின்றாள்...
“ நாம் பாட்டுக்கு சொல்லிண்டே இருக்கேன்..பேசாம இருக்கியே..என்ன நெஞ்சழுத்தம் உனக்கு?”
“ நா என்ன பண்றது, அம்மு..என் கையில ஒண்ணும் இல்ல...”
அம்மாவின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்தது
“ அன்னிக்கு இதே வார்த்தையை நானும் சொல்லிட்டு துண்டை உதறித் தோளில போட்டுண்டு போயிருக்கலாமோல்யோ? ஏன் போகலை”
“ உனக்கு பெரிய மனசு அம்மு”
“ அதெல்லாம் ஒண்ணுமில்லே.. நான் ஏமாளி..அன்னிக்கு அப்பா இவர் கையைப் பிடிச்சுண்டு உங்கள நம்பித் தான் ஐந்து பெண் குழந்தைகளையும் விட்டுட்டுப் போறேன்னு சொன்னப்ப இவர் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா...கவலையேப் படாதேங்கோ.. நான் பார்த்துக்கறேன்னு சொல்லி உங்க ஐந்து பேருக்கும் கல்யாணம் ஜாம்..ஜாம்னு பண்ணலியா..அதுக்கு இது தான் பிரதியுபகாரமா?”
“ அம்மு...எங்க மாமனார்..மாமியாரைக் கேட்க வேண்டாமா?”
“ பேஷாக் கேளு..அவா ஒண்ணும் சொல்ல மாட்டா..”
.....ஐயோ... நானா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு சொன்னேன்..ஏதோ அப்பா..தன் அந்திம காலத்துல அத்திம்பேர் கையைப் பிடிச்சு சத்தியம் வாங்கிண்டார்னா... நான் எந்த விஷயத்துல பொறுப்பு...அதுக்கு பர்த்தியா என் குழந்தையை சுவீகாரம் கேட்கறியே நீ....என்னால எப்படி அம்மு என் குழந்தையை பிரிஞ்சுட்டு இருக்க முடியும்?...
அம்மா பேசவில்லை..அம்மா கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் பேசியது.
புரிந்து கொண்ட நான் அம்மா புடவைத் தலைப்பை என்னுள் போர்த்தி கொண்டேன்.
”...டேய்..சீனு..இங்க வாடா..இனிமே நான் தான் உன்னோட அம்மா..” ஹிஸ்டீரியா வந்தது போல் கத்த,
“ இல்லை..இல்லை.. நீ பெரீம்மா.....”
ஹீனஸ்வரத்தில் நான் முனக, அம்மா அழ ஆரம்பித்தாள், அப்போது!

என் குறள் : எந்நன்றி சொன்னார்க்கும் உய்வுண்டாம்- உய்வில்லை
செய்நன்றி சொன்ன மகற்கு!

13 comments:

குறையொன்றுமில்லை. said...

குறளும் குறுங்கதையும் நல்லா இருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தக்குறளுக்கு இன்னும் வலுவான கதையாகத் தரமுடியுமே தங்களால் எனத்தோன்றியது. OK OK
இதுவே நல்லாத்தான் இருக்கு. அடுத்த குறுங்கதையும் குறளும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். vgk

monica said...

nice

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப நன்னயிருக்கு சார் கதை.

மோகன்ஜி said...

அப்படி வறீங்களா? நல்லாத்தான் இருக்கு..மூவார்! கதையின் அமைப்பும் அளவும் கனக்கச்சிதம்..

ஜீவி said...

கதை தான் குறுகத் தரித்து இருக்கிறது; இந்த சின்னதிலிருந்து விஸ்ரூபமெடுக்கும் அந்த பிர்மாண்டத்தை விரித்துப் பார்த்தால், அற்புதமான ஒரு குறுநாவலைக் காணலாம்..

வாழ்த்துக்கள்..

ADHI VENKAT said...

குறளோடு இணைந்த கதை....அருமை.

ரிஷபன் said...

என்னால எப்படி அம்மு என் குழந்தையை பிரிஞ்சுட்டு இருக்க முடியும்?...
அம்மா பேசவில்லை..அம்மா கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் பேசியது.

கிளாஸிக்!

அப்பாதுரை said...

(4) பின்றீங்க.

ரூம் போட்டு யோசிப்பீங்களானு அடிக்கடி பின்னூட்டங்கள்ல பாத்திருக்கேன். இது வரைக்கும் யாரையும் நான் இப்படி கேட்டதில்லை.. இப்பத்தான்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உணர்வு பூர்வமான நல்ல கதை.

கதம்ப உணர்வுகள் said...

பாச உணர்வுகளை அப்படியே சொல்லி செல்கிறது கதை....

தாய்ப்பாசத்தை வெல்லும் சக்தி உலகில் இல்லை...

அன்பு வணக்கங்கள் ஆர் ஆர் ஆர்....

உங்க தளம் வந்து பார்த்தேன், மிக அருமைப்பா...

அன்பு வாழ்த்துகள் குறளுடன் சொன்ன கதைக்கு....

vasan said...

பானும‌தி அவ‌ர்க‌ள் ந‌டித்த‌ `அன்னை` திரைப்ப‌ட‌ம் அப்ப‌டியே க‌ண் முன் வ‌ந்து போன‌து.
ஏன் என்று புரிய‌வில்லை. அந்த‌ "ஓ...ப‌க்கும்..ப‌க்கும் மாட‌ப் புறா..." பாட‌ல்

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

என் வாழ்க்கையில் நடந்த/நடக்க இருந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திய குறுங்கதை...வாழ்த்துகள்!!!