Saturday, September 2, 2017

கடுக்கன் வருங்கால்?

இந்த கொனஷ்டை ஸ்கூல் படிக்கிற காலத்திலேர்ந்தே வந்தாச்சு....ஸ்கூல் பக்கம் விக்கற எலந்த வடை,கொடுக்கா புளி,அருநெல்லிக்காய் இதெல்லாம் அன்ஹைஜீனிக் என்பதனால்,கொடுக்கற பாக்கெட் மினியை(மணி எங்கே தராங்க,எல்லாம் சில்லறை காசுகள் தான்) சேர்த்து வச்சு, எங்க க்ரூப்ல, ஒரு குட்டி பணக்காரனா இருந்தேன்...என்னை சுத்தி,எப்பவுமே அஞ்சு பேர் இருப்பாங்க..(பணக்காரனை சுத்தி பத்து பேர் மாதிரி!) 
அல்லாரும் கசமுசன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க...என்னடான்னு பார்த்தா, எங்களுக்கு காது இரண்டிலும் கடுக்கன் போட்ட கோபால் ஐயா தான் தமிழுக்கு வராராம்....கொஞ்சம்..என்ன நிறையவே கண்டிப்பு...அவர் பேசறத விட அவர் கையில் உள்ள பிரம்பு தான் நிறைய பேசுமாம்....
நான் ஏதோ, சொல்ல வந்ததை மசால் வடையை மோப்பம் பிடிக்கிற மௌஸ் மாதிரி ஒருத்தன் சொன்னான்...'டேய், நம்ம ஶ்ரீதர் ஏதோ சொல்ல வராண்டா"
நான் தொண்டையை செருமிக் கொண்டேன்..அவ்ளவ் கூட்டமும் என் பக்கம் இருப்பதை கன்பர்ம் செய்து கொண்டு வாயைத் திறந்தேன்...
"கடுக்கன் வருங்கால் நகுக!"
பொதுவா நாம ஏதாவது ஜோக்(நாம ஜோக்னு நினைக்கறது!) சொன்னா,நாம சிரிக்காம இருந்தா தான் ஆடியன்ஸ் சிரிப்பாங்கன்னு தெரிஞ்சு வச்சிருந்தேன்...
ஆனா, அன்னிக்கு நான் சிரிக்கிறது நினைச்சிருந்தாலும் சிரிக்க முடியாது!
காரணம்,
எம் பின்னால, அந்த 'கடுக்கன்' நின்று கொண்டு இருந்தார்,அப்போது!

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா மாட்டிக்கிட்டீங்களா

settaikkaran said...

இந்த மாதிரி ஒருவாட்டி எனக்கும் ஆச்சு. நண்பர்களோட ஒரு கிரவுண்டுல கிரிக்கெட் விளையாடிட்டிருந்தோம். அப்ப, எங்க காலேஜ் லெக்சரர் மாதிரி ஒருத்தர் தூரத்துல நடந்து போயிட்டிருந்தார். உடனே ‘அடைக்கோழி’ன்னு (அவர் பட்டப்பெயர்) கூவினோம். அவர் நின்னு, எங்களைப் பார்த்து நடந்து வந்தார். பார்த்தா அது எங்க லெக்சரர் இல்லை. பக்கத்துல வந்து ‘ நான் அடைக்கோழி இல்லை; அடைக்கோழியோட தம்பி’ன்னு சொல்லிட்டுத் திரும்பிப் போயிட்டார் ஆவன்னா ராவன்னா! :-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மாட்டிகிட்டேன் கரந்தை சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட்டே...
வாங்க சேட்டை!
நீங்க இங்கே வந்தா தான் சபையை களை கட்டும்!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா மாட்டிக்கிட்டீங்களா?

நான்காம் வகுப்பு படிக்கையில் ஒரு ஆசிரியருக்கு மூக்கன் எனப் பெயர் வைத்து அழைக்க மாட்டிக்கொண்டிருக்கிறேன்! :) பிறகென்ன... பிரம்பு தான்!