காமெடி சானல் பார்க்கலாமா.. நியூஸ் சானல் பார்க்கலாமா எதுல காமெடி ஜாஸ்தி என்று ரொம்பவும் போர் அடித்ததினால் நான் பூவா தலையா போட்டு பார்த்துக் கொண்டிருக்கும் போது, வாசலில் சலசலப்பு..
பார்த்தால்...
ராப்பிச்சை!
அடச்சே என்றாகி விட்டது எனக்கு!
கொஞ்ச நேரம் முன் தான் நினைத்தேன்..குடுகுடுப்பைக் காரன், ராப்பிச்சை, சிட்டுக் குருவி, மூட்டை பூச்சி என்று நம் இளம் பருவ காலத்தில் நம்முடன் இருந்த இவர்கள் எல்லாம் இப்போது எங்கே தொலைந்து போய் விட்டார்கள் என்று பிலாக்கில் எழுதலாம் என்று இருந்தேன்..
கெடுத்து விட்டானே இந்த ராப்பிச்சை!
என்னை எதையும் சிந்திக்க விடாமல் வாசலில் கமலா அந்த ராப்பிச்சையுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தாள்..
அதுவும் ரொம்ப நேரம் நீடிக்க வில்லை..
குக்கர் தைர்யமாக (அதற்கு இருக்கும் தைர்யம் கூட எனக்கு கிடையாது) விசில் அடித்து கமலாவை கூப்பிடவே அவள் உள்ளே ஓடினாள்..
ஓடினவள் சும்மா ஓடவில்லை!
‘வாசலில் இருந்த அந்த ராப்பிச்சையை துரத்துங்க..’ என்று கத்திக் கொண்டே ஓட, நான் ஏதோ பெரிய ஹீரோ போல் வாசலுக்கு விரைந்தேன்..
அந்த ராப்பிச்சை ஏதோ கத்திக் கொண்டிருந்தான்..
சட்டென்று அவன் வாயை அடைக்க, சட்டைப் பையில் இருந்து, பத்து ரூபாய் நோட்டை அவன் தட்டில் போட்டேன்..
“சா...மீ............இந்த வூட்டு சாமி நீங்களா...” என்று பெரிதாய் கும்பிடு ஒன்று போட்டான்..
அட..ஒரு வெறும் பத்து ரூபாய்க்கா இந்த கும்பிடு என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே...’சா...மீ... நீங்க நல்லா இருக்கணும்.....” என்று தன் கைகளை தலைக்கு மேல் தூக்கினான்..
எனக்கு லைட்டாக இப்போது தான் சந்தேகம் தட்டியது..இந்த கூழைக் கும்பிடு...இந்த வணக்கம் இதெல்லாம் இந்த வெறும் பத்து ரூபாய்க்கு இருக்காதே... ...
அட்லீஸ்ட் ஒரு நூறு ரூபாயாவது தட்டில் விழுந்திருக்க வேண்டும்..
ஏதாவது ஞாபக மறதியாய் நூறு ரூபாய் நோட்டு ஏதாவதை போட்டு விட்டேனா...என்ன?
சந்தேகத்துடன் தட்டைப் பார்த்தேன்..
சந்தேகமே இல்லை
பத்து ரூபாய் தான்!
சாமி...சாமி....என்று நாத் தழுதழுக்க குழறினான்...கண்களில் மாலை மாலையாய் கண்ணீர் .....
கொஞ்சம் விட்டால் அழுது விடுவான் போல இருந்தது..
ஏதோ அந்த கால ஹிந்தி படத்தில் அரதப் பழசு பாடல் ஒன்று ஐம்பது வருடமாய் பிரிந்த அண்ணன்,தம்பிகளை ஒன்று சேர்ப்பது போல, இவன் ஏதோ என்னோட அண்ணன் என்று சொந்தம் கொண்டாடி விடுவானோ என்று மனதுக்குள் லேசாய் பயம் எட்டிப் பார்க்க......
நல்ல வேளை..
குக்கர் வாயை அடைத்து விட்டு கமலா வந்தாள்!
அதற்குள் அவன் போய் விட்டான்..
“ஏதாவது காசு,கீசு போட்டீங்களா?”
“சேச்சே”
“அவனுக்கு ரவா உப்புமா வேண்டாமாம்..காசு தான் வேணுமாம்..”
என்றாள் கமலா.
“அப்டியா?”
“ ஏம்ப்பா.. நேத்திக்கு மட்டும் ரவா உப்புமா வாங்கிண்டியேன்னு கேட்டேன்”
“அதுக்கு அவன் என்ன சொன்னான்?”
“ நேத்திக்கு உங்க வீட்ல ரவா உப்புமா வாங்கிண்டதினால் தான் சொல்றேன்... உங்க வீட்டில பண்ணின எதுவுமே எனக்கு வேண்டாம்..காசு கொடுங்கங்கறான்..என்ன கொழுப்பு பாருங்களேன் அவனுக்கு!”
அடக் கடவுளே!
அந்த பிச்சைக் காரன் இத்தனை நேரம் என்னைப் பார்த்து இதற்காகவா பரிதாபமாப் பட்டிருக்கான்?...
”வாங்க நாம ரவா
உப்மா சாப்டலாம்” என்றாள் கமலா!

10 comments:
ரவா உப்புமா கிண்ட எதுக்கு குக்கர்? டவுட்டு....
ஆனா பாவம் நீங்க...
//“ நேத்திக்கு உங்க வீட்ல ரவா உப்புமா வாங்கிண்டதினால் தான் சொல்றேன்... உங்க வீட்டில பண்ணின எதுவுமே எனக்கு வேண்டாம்..காசு கொடுங்கங்கறான்..என்ன கொழுப்பு பாருங்களேன் அவனுக்கு!”//
கொழுப்பு தான். ;)))))
இன்றும் ரவா உப்புமா தானா? கஷ்டம் தான்.
குக்கரில் வேறு என்ன செய்தார்களோ!
நேற்றைய உப்புமாவையே மீண்டும் சுடவைத்திருப்பார்களோ!!
ஹிஹி
(அடுத்த வாட்டி வந்தா உப்புமா கொடுக்குறதா பயமுறுத்தலாமே?)
முகப் புத்தகத்தில் ரசித்ததை இங்கே மீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பிலாக்கில் எழுதலாம் என்று இருந்தேன்..
கெடுத்து விட்டானே இந்த ராப்பிச்சை!
பிலாக்கணத்தை பிலாக்கில் போடமுடியாத
பீலிங்ஸ் ரசிக்கவைத்தது ..
நீங்கள் இப்படி எழுதுவது வீட்டில் தெரியுமா.?
நாங்களெல்லாம் ரவையை ரவா தோசை மட்டும் செய்வோமாக்கும்.
தங்களுக்கு விஜய ஆண்டில் ஜெயம் பெருகட்டும்.
இன்னிக்குன்னு
அதுவும் கரெக்டா 7.45 க்கு
உங்க பதிவுக்கு வரணுமா..?
என்ன செய்யறது...
உங்க பதிவினைப்பார்த்து முடிச்சுட்டு என்ன பின்னூட்டம் போடறதுன்னு
யோசிச்சுட்டு இருக்கும்போது தான்
அஹத்துக்காரி அவசர அவசரமா கூப்பிடரா..
ஏங்க...எத்தனை நாழியா கூப்பிடறேன் அப்படின்னு வேர ஒரு அதட்டல் சௌன்டு.
என்ன விஷயம்.... அத்தனை சத்தம்.
7.45 ஆயிடுத்தே.... சாப்பிடவேண்டாமா... இன்னிக்கு டிஃபன் தான்.
என்ன என்று கேட்டேன்.
ரவா உப்புமா என்கிறாள்.
மாந்துரையானே காப்பாத்து.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
பின்னூட்டம் போட்டு பின்னிட்டீங்க நண்பர்களே!
இதையும் தான் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...
”இவ்வுலகில் இப்படி ஒரு பொறுமை சாலியா?” என்று ராப்பிச்சையையே அசர வைத்த ரவா உப்புமா இப்போது என் தட்டிலிருந்து என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க.....
அதை வெறித்துப் பார்த்தபடியே வெறுமனே நான் உட்கார்ந்திருக்க, கமலா “ எந்த கோட்டையை பிடிக்க யோசனை..தட்டைப் பார்த்து சாப்பிடுங்க” என்று அதட்டல் ஒன்று போட, ஆஃபீசர் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரை மூடுவதற்க்குள், கையெழுத்துப் போட வேண்டுமென்கிற அவதியில் ஆஃபீசுக்குள் அவசர அவசரமாய் ஓடும் கிளார்க்குகள் போல, ஒவ்வொரு கவளமாக ரவா உப்புமாவும் என் வாய்க்குள் அவசர அவசரமாய் ஓடிக் கொண்டிருந்ததில்.........
தட்டு காலி!
“என்னங்க, ரவா உப்புமா எவ்ளவ் டேஸ்ட்!” என்று கமலா தன் சமையல் திறனை தானே வியந்து கூறிய அந்த ஒரு வார்த்தை....
அந்த ஒரு வார்த்தையில் நான் மளுக்கென உடைந்து.. என்னுள் குபுக்கென்று பொங்கி வந்ததை, அடக்க முடியாமல்,போய் புழக்கடை பக்கமுள்ள குட்டிச்சுவரைக் கட்டிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன்...
“ ஆண்டவனே...சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ...என்னை இப்படி அநியாயத்திற்கு பொய் சொல்ல வைத்து விட்டாயே” என்று!
// ஆண்டவனே...சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ...என்னை இப்படி அநியாயத்திற்கு பொய் சொல்ல வைத்து விட்டாயே” என்று! //
என்று கதறிய உங்கள் குரலை உங்கள் சகதர்மிணி கேட்காமல் இல்லை.
அடுத்த நிமிஷம் , " சின்ன விஷயத்துக்கே இப்படி அனியாயத்துக்கு பொய் சொல்லுற நீங்க...
பெரிய விஷயம் அப்படின்னு எத்தனையோ நடந்துருக்கே வூட்டிலே அதுலே எல்லாமே
எத்தனை பொய் சொன்னீகளோ தெரியல்லையே ? "
என்று துடி துடி துடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.
அந்த சீதா தேவியை ( மிஸர்ஸ் இராமமூர்த்தி பெயர் அதுவாத்தான் இருக்கணும் )
பெயர் சரியா தெரியல்லை, அதுனாலே
பொறுமையின் சிகரத்தை
பாராட்டுவோம்.
பெண் குலம் வாழ்க.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
Post a Comment