ஆங்கிலத்தில் தலைப்பா என்று திகைக்க வேண்டாம் ...நம் தமிழில் புத்தி மான் பலவான் என்று சொல்கிறார்களே ..அதைத் தான் அவர்கள் SWOT ANALYSIS என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள் ...
நம் சிறு வயது கதை ஒன்று ஞாபகம் வரணுமே ..ஒரு நாகம் காகம் பொந்தில உள்ள முட்டைகளை தினம் தினம் தின்ன, வலு இல்லாத அந்த காகம் அங்கு வந்த நரியின் ஐடியா கேட்டு, அதன் படி ராணி ஆற்றங்கரைக்கு குளிக்க வரும் போது, அவள் கழற்றி வைத்த நகைகளை தன் பொந்தில் போட, வீரர்கள் அந்த பொந்தை ஈட்டியால் குத்த, புஸ்ஸென நாகம் சீற, வாளால் அதைக் கொன்று, நகையை மீட்டதாக கதை !
பஞ்ச தந்திர கதைகளில் வரும் !
அது மாதிரி உண்மையில் நடந்த நிகழ்ச்சி இது !
வட கொரியாவிலிருந்து சீனாவிற்கு ஷூக்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது ..எல்லாம் வழக்கம் போல் நடந்து கொண்டு தான் இருந்தது ..
திடீரென்று ஷூவிற்கான கஸ்டம்ஸ் டூட்டியை 40% லிருந்து 150% க்கு சீனா ஏற்றி விட்டது. இதனால் ஷூ விற்பனை பாதிக்கப் படும். ஏற்றுமதியைக்
குறைக்க சீனா செய்த தந்திரம் இது !
அந்த கொரியன் கம்பெனி என்ன செய்தது?
சீனாவின் BUDGET NOTIFICTIONS ஐ அக்கு வேறு, ஆணி வேறாக படித்துப்
பார்த்தது. அதில் ஒரு நம்பிக்கை கீற்று லேசாகத் தெரிந்தது ..அது என்னவென்றால், PARTLY FINISHED SHOES க்கு அதே 40% தான் வரி! அந்த சின்ன நூல் கண்டை பிடித்துக் கொண்டு போனதில் ஒரு விஷயம் தெரிந்தது..அதாவது PARTLY FINISHED SHOES க்கு அர்த்தம் என்ன என்று பார்த்தால், SHOES WITHOUT LACE ARE DEFINED AS PARTLY FINISHED SHOES என்று இருந்தது ..அது போதாதா அந்த கொரியன் கம்பெனிக்கு! WITHOUT LACE உடன் SHOES அனுப்பி அந்த வருஷத்து விற்பனையைத் தக்க வைத்துக் கொண்டனர் !
இது எப்படி இருக்கு ?
அது போல் இன்னொன்று பாருங்கள் !
ஒரு டூத் பேஸ்ட் கம்பெனியில் SALES ANALYSIS செய்ததில், அவர்கள் விற்கும் டூத் பேஸ்ட் சரியாக ஒவ்வொரு நாலு பேர் கொண்ட குடும்பத்திற்கு
ஒரு மாசம் வருகிறது ..விற்பனையைக் கூட்ட அந்த கம்பெனி என்ன செய்தது தெரியுமா?
விளம்பரத்திற்கு அதிகமாய் செலவழிக்கவில்லை...கொடுத்த காசிற்கு 50 கிராம் கூட பொருளைத் தரவில்லை...விலையையும் குறைக்க வில்லை ..
வேறு என்ன தான் செய்தது ?
டூத் பேஸ்ட் வாயின் முகத் துவாரத்தை ஒரு 2 mm DIA அதிகமாக்கியது
அவ்வளவு தான் !
பிய்த்துக் கொண்டு போயிற்று விற்பனை !
இது பிசினஸ் உலகில் மட்டுமல்ல ..சாதாரண நடைமுறை வாழ்க்கையில் செயல் படுத்தி செம்மையாய் வாழலாம் !
குள்ளமாய் தான் இருக்கிறோம் என்கிற குறையையே ஒரு ப்ளஸ் பாயிண்டாக எடுத்துக் கொண்டு நகைச்சுவை உலகில் முடி சூடா மன்னனாய்
ஒளிரவில்லையா அந்த நகைச்சுவை நடிகன்!
ஆகவே எவனொருவன் ’உள்’ளில் உள்ள குறையை, நிறைவாகவும் ‘வெளி’யில் உள்ள ஆபத்தை அனுகூலமாகவும் மாற்றுகிறானோ அவனைக் கண்டு நமனும் அஞ்சுவான் என்பது புது மொழி!

14 comments:
“ SWOT ANALYSIS “ படிக்கப் படிக்க ஒரே சுவாரஸ்யம். பொசுக்கென்று முடித்து விட்டீர்கள். அடுத்த ANALYSIS கொஞ்சம் அதிகமாகவே இருக்கட்டும்.
நல்ல பகிர்வு.....
சுவாரசியமான தகவல்கள்.நல்ல பகிர்வு.
டூத் பேஸ்ட் விசயம் எங்கோ படித்திருக்கிறேன்!. இருந்தாலும் உங்கள் பதிவில் அருமையாய் பொருத்தியிருக்கிறீர்கள்!!
ஆகவே எவனொருவன் ’உள்’ளில் உள்ள குறையை, நிறைவாகவும் ‘வெளி’யில் உள்ள ஆபத்தை அனுகூலமாகவும் மாற்றுகிறானோ அவனைக் கண்டு நமனும் அஞ்சுவான் என்பது புது மொழி!//
நல்ல புது மொழி.
நல்ல பகிர்வு.
புது மொழி-சிறந்த மொழி...
'strategy in a teeny box' நினைவுக்கு வருது. குட்டி management seminar மாதிரி ஒரு பதிவு.
நல்லதொரு பகிர்வு. தொடரட்டும் இது போல் வகுப்புகள்....
SWOT ANALYSIS -க்கு வகைக்கு ஒரு கதை கூறீருக்கலாமோ.?
ஆகவே எவனொருவன் ’உள்’ளில் உள்ள குறையை, நிறைவாகவும் ‘வெளி’யில் உள்ள ஆபத்தை அனுகூலமாகவும் மாற்றுகிறானோ அவனைக் கண்டு நமனும் அஞ்சுவான் என்பது புது மொழி!
புதுமைகள் படைத்து வெற்றிக்கனி பறிக்கவைக்கும் புதுமொழி..!
அட்டஹாசம்! இதைத்தான் நம் பெரியோர் 'எரிவதை (எரியும் கட்டையை) இழுத்தால் கொதிக்கிறது அடங்கும்' என்றார்களோ...!
பதிவின் முடிப்பும் அருமை! முந்தானை ஜரிகை போல்!
அருமை நிலாமகள்!
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (20.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
SWOT ANALYSIS பற்றி நானே எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.
அதற்கான STRENGTH என்னிடம் உள்ளதா என நான் யோசித்ததே என் WEAKNESS ஆகி OPPORTUNITY கிடைத்தும், நான் ஒருவேளை எழுதி வெளியிட்டால் நம் நண்பர் திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி என்ன கிண்டல் அடிப்பாரோ என்ற THREATS உம் கூடவே சேர ..... நான் எழுதாமல் நிறுத்திக்கொண்டேனாக்கும். ;))))
Post a Comment