எனக்கு இன்று காலை ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்தது. படித்துப்
பார்த்து விட்டு மயங்கி விழுந்தவன் தான் !
ஆறு மணி நேரம் கழித்து முழிப்பு வந்தது...மறுபடியும் அந்த வக்கீல் நோட்டீஸ்
ஞாபகம் வர மறுபடி மயக்கம் ...இப்படியாகத் தானே ஒரு நாளில் இருபத்தி ஐந்து மணி நேரம் கிட்ட தட்ட 'கோமா' ஸ்டேஜில் கிடந்தேன் !
அப்படி என்ன இருந்தது அதில் !
என்னை அலைக் கழித்த அந்த வக்கீல் நோட்டீஸ் இது தான் ...
".........எங்கள் கட்சிக் காரர் திரு அருமை ராஜன் சாரி எருமை ராஜன் தலைவர் எருமைகள் சங்கம் 777, எருமை ராஜன் நகர், எருது நகர் பின் கோட் 7777777
என்ற விலாசத்தில் வசிக்கும் அன்னார் சார்பாக நான் அறிவிப்பது என்னவென்றால் தாங்கள் தங்கள் வலைப்பூவில் அவரது இனமான
எருமைகளைப் பற்றி மிகமிகக் கேவலமாக அதுவும் மனிதர்களுடன் சம்பந்தப் படுத்தி எழுதி உள்ளீர்கள் .
இதனால் எங்கள் கட்சிக் காரர் மனவருத்தம் அடைந்து அதே மனக்
கிலேசத்துடன் NATIONAL HIGHWAYS ஐ கடக்கும் போது, மனிதர்கள் ஓட்டி வந்த MATADOR VAN
ஒன்று இடித்து மண்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு MENTAL DEPRESSION வருவதற்கும் காரணமாக உங்கள் எழுத்து உள்ளது .
இந்த அசெளகர்யங்களினால் ஏன் உங்கள் மீது எ.பி.கோ. செக்ஷன் 707
பிரகாரம் மான நஷ்ட ஈடு வழக்கு போடக்கூடாது என்பதற்கும் , தங்களால்
என் கட்சிக் காரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஏன் ஏழு மிலியன் டாலர்
அபராதம் விதிக்க கூடாது என்பதற்கும் இந்த அறிவிப்பு கண்ட எழுபத்திஏழு நாட்களுக்குள்
பதில் தருமாறு எங்கள் கட்சிக் காரர் சார்பாக கோரப் படுகிறது. அப்படி தங்களிடமிருந்து பதில் வராத பட்சத்தில் இந்த அறிவிப்பையே சம்மதமாக
எடுத்துக் கொண்டு தங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் படும் என்று
இதன் மூலம் கடுமையாக எச்சரிக்கை செய்யப் படுகிறது .
இவண் ,
எங்கள் கட்சிக் காரர் எருமை ராஜன் சார்பாக ,
எம தர்ம ராஜன் எம்.ஏ .பி. எல் .... "
எப்பொழுது எருமை மாடு பற்றி 'கன்னா பின்னா' என்று எழுதினேன்என்று
எனக்கும் தெரியவில்லை ..மேலும்
எருமை மாடு என்பது எனக்கு மிகவும் பிடித்த மிருகம். நான் மட்டும் பெரிய தலைவராய் இருந்திருந்தால் எருமை மாட்டையே தேசிய
விலங்காக
அறிவித்து விடும் அளவிற்கு ஆசை உள்ளவன்.எருமை மாடுகள் மீது இத்தனை
பிரியமாய் இருக்கும் ஒருவனைப் பார்த்து இப்படியா எழுதுவது ?
அது தான் என் வருத்தமே !
இப்போது நான் என்ன செய்வது ?
இந்த இக்கட்டினை எப்படி சமாளிப்பது?
ஏதாவது பதில் எழுத வேண்டுமே...
இல்லாவிட்டால் ஏழு மிலியன் டாலராமே ...
ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்தே நூறு நாளுக்கு மேல் ஆகி விட்டது !
யாராவது வக்கீல் நண்பர்கள் இருந்தால் சொல்லுங்களேன்...ப்ளீஸ்..
பின் குறிப்பு :
1. வக்கீல் FEES கொடுக்க என்னிடம் காசு கிடையாது !
2. ஒரு கட்டு வைக்கோல் வேண்டுமானால் தருகிறேன் !!
கடைசியாக வந்த தகவல்
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் ஒரு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் !
பயந்து கொண்டே கையெழுத்துப் போட்டேன் ..பிரித்துப் பார்த்தால் அந்த
வக்கீல் நோட்டீஸ் வேறொரு வலைத்தள சொந்தக் காரருக்காம் !
தவறிப் போய் எனக்கு அனுப்பி விட் டார்களாம்.!
நல்ல வேளை ..தலைக்கு வந்தது, கொம்போடு போயிற்று !
21 comments:
என்ன இது விசித்ரமா இருக்குது. !! சி.ஆர்.பி.சி லே மொத்தம் 481 செக்சன் தானே இருக்கு.
இவர் எங்கே 777 ஆவது செக்சனை கண்டுபிடிச்சு நோட்டீஸ் விட்டாரு ??
இருந்தாலும் பாருங்க.. இந்த 7 அப்படிங்கற நம்பர் கீதே ரொம்ப விவகாரமான நம்பருங்க...
கொஞ்சம் அசந்து மறந்து போனாலும் வம்புலே மாட்டி விட்டுடும்ங்க..
ஆரண்ய நிவாஸ்.. எண்ணிப்பாருங்க... 4 + 3 = 7 எழுத்து.
ஆர். இராம மூர்த்தி. எண்ணிப்பாருங்க.. 1 + 2 + 4 = 7 எழுத்து.
ஏழு உலகத்திலே சுத்தினாலும் இந்த 7 ஏழு நம்பர் வாய்ச்சவன் அதிலே இருந்து தப்ப முடியாதுங்க...
ஒண்ணு ஆகாசத்திலே பறப்பாங்க.. இல்ல.. கீழே யே படுத்துண்டு அல்லாக்க ஆகாசத்தை பாத்துண்டு கனா கண்டுண்டு இருப்பானுக..
ஆனா ஒண்ணு சொல்லணும்க.. அவுக நல்லவங்க...
ஆமா. பதில் நோட்டிஸ் கொடுக்கணும்னா.. எங்கிட்டே சொல்லுங்க.. பிச்சு போட்டுடுவோம்.
ஃபீஸ் முன்னாடியே காஷா கொடுத்தனும். எத்தனையா ?
ரூ 7777777
என்னது பணமில்லையா ? டோன்ட் ஒர்ரி. மாசம் ரூபாய் 7 வீதம் 777 வருசத்துக்கு அனுப்புங்க..
சுப்பு தாத்தா.
ஆஹா!
நல்ல வேளை, __லைக்கு வந்தது, காம்போடு போயிற்று ! ;)))))
ஸாரி தூக்கக்கலக்கம். ஏதோ ஞாபகம் ஸ்வாமீ! தவறாகிவிட்டது.
மடியாகவேறு இருந்தேனா? அதனால் தான்.
மன்னிக்கவும்.
நல்ல வேளை ..தலைக்கு வந்தது, கொம்போடு போயிற்று !
சூப்பர்! ;)
ஹஹஹஹஹஹஹா...[சூரி சார்... 7 'ஹ'போட்டுட்டேன்:)]
ஐயா, நீங்க சொல்றது CRIMINAL PROCEDURE CODE! நான் சொல்றது எருமைகள் பீனல் கோட் (எ.பி.கோ) செக்ஷன் 777 க்கு மேல இருக்காம் ...
நான் சொல்லலை எம தர்ம ராஜன் MA BL சொன்னது ! அவர் சொன்னா
சரியாகத் தான் இருக்கும் .....
வை.கோ. விற்கு .......
சார்.....சார்........சார்.........ப்ளீஸ் .....சார் !!!!!!!!!!
நிலாமகள் மேம் ....
உங்க கணக்குல ஒரு சின்ன மிஸ்டேக் ....
ஆறு ஹ தான் போட்டீங்க !
அந்த ஏழாவது ஹ இல்ல ஹா !
ஹஹ் ஹ் ஹ் ஹ் ஹா.......
// பிரித்துப் பார்த்தால் அந்த வக்கீல் நோட்டீஸ் வேறொரு வலைத்தள சொந்தக் காரருக்காம் !தவறிப் போய் எனக்கு அனுப்பி விட் டார்களாம்.//
அந்த வேறொரு பதிவாளர் பதிவையும் அதில் உங்கள் வக்கீல் நோட்டீசையும் பார்த்து விட்டேன்! எல்லாம் பெரியவர்கள் செய்யும் ஒரு தமாஷ்தான்!
அந்த வேறொரு வலைத்தளக்காரர் யார் என்று ....... வேண்டாம். எனக்கேன் வம்பு.
அவர் யார்னு எனக்கும் தெரியும் சார்...:))
நடத்துங்க...நடத்துங்க...
அட..பார்த்துடீங்களா இளங்கோ சார்!
அடிக்கடி நம்ம வலைப்பக்கம் வந்துட்டுப் போங்க!
நல்ல வேளை ..தலைக்கு வந்தது, கொம்போடு போயிற்று !
எருமையோடு ரொம்ப வம்பு ..!
// நல்ல வேளை ..தலைக்கு வந்தது, கொம்போடு போயிற்று ! //
ஹா...ஹா...
எருமை...
உங்களுக்கு வந்த நோட்டீஸ் தான் அங்கே அனுப்பிச்சிட்டீங்களா!
நான் அவருக்காகவே அனுப்பிய நோட்டீஸ்னு அங்கே படிச்சப்ப நினைச்சேன்!
இருக்கட்டும்.... நடக்கட்டும்! :)
நான் கூட எருமை பத்தி இரண்டு மூணு பதிவு எழுதி இருக்கிறேன்... அதான் கவலையா இருக்கு!
சும்மா தைரியமா ...பயப்படாம சொல்லுங்க பாலு சார்....நான் இருக்கேன் !
தங்கள் FEMALE ஆன ...... மன்னிக்கவும்.... மேலான வருகைக்கு நன்றி
1. கோவை 2 டில்லி
2. இராஜ இராஜேஸ்வரி
3. RAMVI
கவலையேப் படாதீங்க வெங்கட் !
நான் இருக்கிறேன் ..எம தர்ம ராஜன் எம். ஏ. பி. எல் .
நம்ம க்ளோஸ் பிரெண்ட் தான் ! ..பிளாக்குல
என்னருமை எருமையைப் பற்றி எழுதினதை
எல்லாத்தையும் அவிழ்த்து .. ........சாரி .
எடுத்து விடுங்க
ஏய்! நம்மாளு .....
இங்கே எருமையைப்பற்றி அருமையாக இலக்கியச் சர்ச்சைகள் நடக்கும் போது நீ எங்கேய்யா எஸ்கேப் ஆகிப் போகிவிட்டாய்?
நீ இங்கே வாய்யா!! உன்னிடம் நான் கொஞ்சம் தனியாகப்பேசணும்.
வரவர உங்க சார் சரியில்லைய்யா.
எது சொன்னாலும் தப்புத்தப்பவே ஏதாவது புரிஞ்சுக்கிறாருய்யா.
நான் ’டேஷ்’ போட்ட இடத்தில் என்ன எழுத்துவரணும்ன்னு உன்னைக்கேட்டிருக்கலாம் அல்லது என்னையே கேட்டிருக்கலாம்.
நாம் அழகாக அந்த இடத்தில் ‘இ’ என்று போட்டுப் படிக்கச் சொல்லியிருப்போம்.
பிரச்சனை அத்தோடு முடிந்திருக்கும்.
இவராகவே ‘மு’ போட்டு விட்டு நம்மைப் பார்த்து முறைக்கிறாரேய்யா!
இது நியாயமான்னு நீயே சொல்லுய்யா .... நம்மாளு.
அது ஏன அங்கு ‘இ’ போடணும்னு கேட்கிறாயா? சொல்றேன்.
அது ஒரு சின்ன கதை. இப்போதே சொல்லிடறேன்.
அப்போ எனக்கு ஒரு ஆறு அல்லது ஏழு வயசு தான் இருக்கும். என் அப்பா தினமும் பூஜை செய்பவர்.
“மடியாகக் குளிச்சிட்டு பின்னாலே தோட்டத்துப்பக்கம் போய் பூஜைக்கு துளஸி பறிச்சுட்டு வாடா”ன்னார்
நானும் குளிச்சிட்டு மடியாகப்போய் நிறைய துளஸி இலைகளைப் பறிச்சிட்டு ஒரு புது மூங்கில் தட்டில் போட்டு எடுத்து வந்தேன்.
அதைப்பார்த்த என் அப்பாவுக்கு ஒரேயடியாக் கோபம் வந்திடுச்சு.
”டேய் ஏண்டா இப்படி துளஸி இலைகளைத்தனித்தனியா பிச்சிட்டு வந்திருக்கே; மூன்று மூன்று துளஸி இதழ்களாகக் காம்போடு பறிச்சிட்டு வரணும்டா, மக்கூஊஊஊ ”
என்று சொல்லி என்னைத் திட்டினாரு.
அப்போ நினைச்சுக்கிட்டேன்
”நல்லவேளை .. இலைக்கு வந்தது காம்போடு போச்சுன்னு”
அதை மனசுலே நினைச்சுக்கிட்டுத்தான் பின்னூட்டமும் கொடுத்தேன்.
அது என்ன ’மடியா என்றால்’ என்று தானே கேட்கிறாய்.
அதைப்பற்றியும் நானே சொல்லிடறேன்.
மடி என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன.
பசுவின் மடி, தாயின் மடி என்பதுபோல, குளித்த பின் ஸ்நானம் செய்த பின், நம் உடம்பும் உடைகளும் சுத்தமாக இருத்தலுக்கும் ‘மடி’ என்ற அர்த்தம் உண்டு.
அந்தக்காலத்தில் மடி விழுப்பு பார்ப்பார்கள். மிகுந்த ஆச்சாரமாக இருப்பார்கள்.
இப்போது இந்தக்காலத்தில், துணிகளை மடித்து வைத்தால் “மடி” விழுத்துப்போட்டால் “விழுப்பு” என்று ஆகிவிட்டது.
இருப்பினும் ‘மடி’ என்பது வேறு ’மகுடி’ என்பது வேறு.
இரண்டையும் போட்டுக்குழப்பிக்காதே நீ!!
’நான் மடியாக வேறு இருந்தேனா’
என என் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டதால், இந்த என் விளக்கமும் நானே தர வேண்டியதாக்ப் போயிடுச்சு.
.
இல்லாவிட்டால் அதையும் உங்க சார் ஏதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக்கொள்வார்.
‘மடியில் சாய்ந்து மகுடி ஊதினேன்’ என்று கூட்ச் சொல்லிவிடுவார். மோசமான ஆளப்பா!
அவர்தான் இசை மேதை .... புல்லாங்குழல் ஊதுபவர் ஆச்சே!
அதனால், நாம் மகுடி ஊதுவதாக ஏதாவது புரளியைக் கிளப்பி விடுவார்.
நம்மாளு! அப்புறம் எனக்கு இந்த மகுடி பற்றி பேசினாலே பாம்பு பயம் வந்திடும்.
அது ஏதாவது படம் எடுத்துடப்போவுது.
அதனால் நான் இப்போ இத்துடன் எஸ்கேப் ;)
ஓஹோ ....கதை அப்படி போவுதா...நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன் போல !
என்ன பண்றது ?
என் வயசு அப்படி!!
மார்கழி மாசம் பனியில 'ஷட்டில் காக்' விளையாடினதுல உடம்புக்கு முடியாம போயிடுத்தா ..டாக்டர்கிட்ட
போனேன் ...அவரு கையைப் புடிச்சு நாடி பார்த்தாரு ..பக்கத்தில வெண்ணிற
ஆடை தேவதையா இருபது இருபத்தைந்து வயசுல ஒரு நர்சு ...நர்சைப் பார்த்தவுடனேயே, இந்த ஆஸ்பத்திரியில டாக்டர் ஒரு அஞ்சாறு நாள் நம்மை அட்மிட் பண்ணச் சொல்ல மாட்டாரான்னு மனசுக்குள்ள சின்னதா ஒரு சபலம் ! அந்த சமயம் பார்த்து டாக்டர் என்னை 'இருமலா ன்னு கேட்க "என்னது, நர்ஸ் பேரு நிர்மலாவா?"ன்னு நான் பதிலுக்கு கேட்டுத் தொலைக்க , ஒரே ரகளை தான் போங்க !
நிற்க ....(வாணாம்... உட்காருங்க , உங்க வயசுல நீங்க நின்னா உங்களுக்கு கால் வலிக்கும் ! அதை பார்த்துட்டு இருக்கிற எனக்கும் கண்ணு வலிக்கும்!)
விஷயத்துக்கு வரேன் ..நம்மாளு இப்ப என் கிட்ட இல்லை ..கொஞ்ச நாள்
முன்னாடி மன்னார்குடி பக்கம் போனாரு ... அப்புறம் திரும்ப என் கிட்ட வந்தாரு...
அப்புறம் எங்கே போனார்னு தெரியலே ..ஆனா போகும் போது ஒரு வார்த்தை
சொல்லிக் கிட்டு போனார் ....
" இந்த ராமமூர்த்தியோட குப்பை கொட்டறதுக்கு, ராவல் பிண்டி போய்
தீவிர வாதிங்க கிட்ட குண்டடி பட்டே சாவலாம்! "
வை.கோ சார்..நீங்க பாம்புன்னு சொன்னவுடனே எனக்கு ஞாபகம் வருது ..
நிஜம்மாவே ஒரு பாம்பு ஆரண்ய நிவாஸ் தோட்டத்தில ரொம்ப நாளா இருக்கு ..அதுக்கு அழகா "ஸ்னேஹா" ன்னு பேர் சூட்டி ரேஷன் கார்ட்ல
பதியலாம்னு இருக்கேன் ....
சர்க்கரையாவது கொஞ்சம் கூட கிடைக்குமே !
:)))))))))))))
இந்த 7777777 ... பற்றிய ரொம்ப முக்கியமான சமாசாரம் ஒன்று
நேற்றுத்தான் என்னுடைய ஆன்மீக நண்பர் பெங்களூரிலிருந்து சொன்னார்.
அதை உடனே சொல்லவேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை.
எனவே கொஞ்சம் டிலே ஆகிப்போயிற்று.
இந்த 777777 லே முதல் இரண்டு டிஜிட் ஐ எடுத்துக்கொள்க.
அதற்கு 77 வது வயது முடிந்தபின் என்று பொருள் கொள்க.
கொண்டீர்களா ?
ம் சொல்லுங்க... அப்பத்தான் அடுத்த ஸ்டப் போகமுடியும்.
அடுத்து மூன்றாவது டிஜிட் 7 என்பது 7 வது மாதத்தைக் குறிக்கும்.
உடனே ஜூலை என்று அதிகப்பிரசிங்கத்தனமாக சொல்லக்கூடாது.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ....
ஆகவே இந்த ஐப்பசி மாதம் 7 வது மாதம்.
அடுத்த டிஜிட் 7 .. அது திதி யைக் குறிக்கும். ஸப்தமி.
அந்த நல் நாளில் 7 வது மணிக்கு.. கொஞ்சம் முன்னே பின்னே போகக்கூடாது.
திரும்பவும் சொல்றேன். 77 வயது முடிந்தபின்னே 7 வது மாதம் ஐப்பசி மாசம் எப்பன்னு பார்த்து, அந்த மாசத்துலே ஸப்தமி
அன்று
ஒரு ஹோமம் செய்யவேண்டும். அதற்கு பெயர் விஜய ரத சாந்தி. இந்த சாந்தியன்று ஒரு ஹோமம் செய்வார்கள். அது கால பைரவனுக்கு.
அந்த கால பைரவனின் வாகனம் கழுதை.
இந்த கால பைரவனை அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்தால் யம பயம் அதாகப்பட்டது யம தர்மராஜன் எருமை வாகனத்தில்
வர்றானே அந்த சாக்ஷாத் யம பயம் நீங்குமென்று....
அந்த ஹோமம் முடிஞ்ச உடன், 7 பேருக்கு தலா ரூபாய் 77 தக்ஷிணையாக தரணும். 7 விதமான அன்னம் பரிமாறணும்.
நான் சொல்ல்ல்லே...
விஷயம் தெரிஞ்சவா சொல்றா...
ஞாபகம் வச்சுக்கோங்க... இதுதான் 77777777 ஸிக்னிஃபிகன்ஸ்.
சுப்பு தாத்தா.
Note: this is not joke. This is serious matter.
Please convey this to 77 people within 7 hours.
Post a Comment