(இதன் முதல் பகுதி 24.12.12 ல் வெளி வந்தது..படிக்கவும் )
அது ஒரு அக்ரஹாரம் ....
அந்த அக்ரஹாரத்தின் கிழக்கில் சிவன் கோவில் ..சிவனே என்று இருப்பவர் அவர் .. ஒரு .ஈ ..காக்காய் அவரை அண்டாது !
அந்த மருதாந்த நாத ஈசனுக்கு துணையாக சுந்தர காஞ்சனையும் ...
இருவருக்கும் துணையாய் குருக்கள் விசுவும் ......
மேற்கில் பெருமாள் கோவில்.......
ராதா கல்யாணம் ..சீதா கல்யாணம் என்று எப்போதும் பிசியாக
இருக்கும் இடம் ....
பஜனை ...உறியடி ... என்று எப்போதும் கொண்டாட்டம் தான் !
கொல்லைப் புறத்தில் ஹனுமத் நதி ஓடிக் கொண்டிருக்க .....
அங்கே ஒரு கும்பல் சங்கீத சாதஹம் பண்ணிக் கொண்டிருக்கும் ...
குளித்து விட்டு சந்தியாவந்தனம் செய்து கொண்டிருப்பார்கள் சிலர்..
அக்ரஹாரத்தின் வாசலில் பஸ் சர்வீஸ்!
கொல்லைப் புறத்தில் படகு சர்வீஸ் !!
மேற்கே மூன்றாவது வீடு ....
கோதண்ட ராமஸ்வாமி கோவிலை ஒட்டி .....
எப்போது பார்த்தாலும் சுநாதமாய் சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கும் வீடு .....ஒரு பத்து, பதினைந்து மாணவர்கள் ப்ளூட் ....வயலின் என்று அப்பியாசம் செய்து கொண்டே இருப்பார்கள் ....சிலர் சிரத்தை எடுத்துக் கொண்டு பாடுவார்கள் ..சிலர் வெகு அனாயாசமாய் பாடுவார்கள் ..
பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக வந்து போய்க் கொண்டு இருந்தவர்களும் அங்கு உண்டு....
ஒரு நாள் ....
திருவிடைமருதூரிலிருந்து ஒருவர் அந்த வீட்டிற்கு வந்தார்...கூடவே
ஒரு சிறுவன் ...
" ....மாமா இந்த பையன் என்னோட அக்கா பையன் .....இந்த பையனோட
தோப்பனார் சமீபத்தில காலம் ஆயிட்டார் ...பையனை பள்ளிக்கூடம் அனுப்ப தோதுப் படலை .. எனக்கும் பெரிய சம்சாரம் ..அதனால நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ........."
" அதனாலென்ன பேஷா விட்டுட்டு போங்கோ....பத்தோட பதினொண்ணா
அவன் இங்க இருக்கட்டும் ..."
'பத்தோடு பதினொன்று' இவன் இல்லை என்பது வந்த கொஞ்ச நாட்களிலேயே அந்த வித்வானுக்குத் தெரிந்து விட்டது. சரளி,
ஜண்டை, வரிசைகள் முடிந்து அலங்காரம் வரை வந்து விட்டான் பத்து பதினைந்து
நாட்களிலேயே.
கற்பூர புத்தி உள்ள மாணாக்கனைக் கண்டால் எந்த குருவிற்குத் தான்
பிடிக்காமல் இருக்காது?
தனக்குத் தெரிந்த அத்தனை விஷயங்களையும் வஞ்சனை இல்லாமல்
சொல்லிக் கொடுத்தார் குரு. அத்தனையையுமே சிக்கெனப் பிடித்துக் கொண்டான் தண்டபாணி ! ப்ளூட்
வாசிப்பில் கஷ்டமான 'கமகம்' அவனுக்கு வெகு சுலபமாக வந்து விட்டது!
எந்த இடத்தில் கமகம் போட்டால் பரிமளிக்கும் என்பதும் புரிந்து விட்டது .
ஆனால் குறையே இல்லாத மனிதன் யார்? அவனிடம் உள்ள பெரிய குறையே அவனுடைய முரட்டுத் தனம் தான் !
சிறு வயதில் அன்புக்கு ஏங்கிய அந்த
பிஞ்சு குழந்தை உள்ளம் அது கிடைக்காமல் போகவே
நாளாவட்டத்தில் முரட்டுத் தனமாக ஆகி விட்டது போலும் !
சந்திரனின் களங்கம்
போல் .....ஒரு கருமையான நிழல் போல்........... அவனிடமே தங்கி விட்டது அந்த நீச குணம் !
இல்லாவிட்டால் இப்படி ஒரு கொடூரமான காரியம் செய்யத் துணிவானா
அவன்?
கிரிக்கெட் விளையாடும் போது, வேண்டுமென்றே பந்தை, கேசவன் தலையை குறி பார்த்து அடிக்க அதனால் அவன் மண்டை உடைந்து சரியாக மருத்துவம் செய்ய
முடியாததினால்
புத்தி பேதலித்து ... அவன் எங்கோ ஓடிப் போய் விட.....
இது எதற்காக?
கேசவன் தலையை இவன் எதற்கு குறி வைக்க வேண்டும்?
ரொம்ப சிம்ப்பிள் !
கேசவன் அவனை விட நன்றாக ப்ளூட் வாசிப்பான் !!
அது பொறாமையாய் இவனுள் கொழுந்து விட்டெறிய .....
விளையாட்டு போல பத்து, பதினைந்து வருடங்களாகி விட்டது !!
எல்லாருமே தற்செயலாக நடந்தது இது என்று நினைத்துக் கொண்டிரு
க்கிறார்கள் ...
.................
* * * * * *
" யாரது?"
சாளேஸ்வரம் அவருக்கு .....
கண்களை குவித்துக் கொண்டு பார்த்தார்.
" நான் தான் "
"வா கண்ணா வா ...ஒவ்வொரு நாளா நான் பார்த்துண்டே இருக்கேன் '
"உங்கள பார்க்காம என்னால மட்டும் இருக்க முடியுமா ? இந்தாங்கோ
ஸ்வீட் ...மாமிக்கு போன வருஷமே குளிர்னு நடுங்கிண்டு இருந்தாளே ..
ஸ்வெட்டர் இந்தாங்கோ ..மாமா உங்களுக்கும் தான் !"
"தீர்க்காயுசா நீ இருக்கணும்பா .....சொந்த புள்ள இருந்தா கூட இப்படி
எங்கள கவனிக்க மாட்டான் ..கேசவன் இல்லாத குறையை நீ போக்கிட்டே"
"பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்கோ.....எனக்கும் உங்கள
விட்டா வேற யார் இருக்கா ..இந்த குளிர் காலத்துல நீங்க சிரமப் படுவேளே ன்னு தான் நான் ஓடி வரேன் ..இந்த மார்கழி மாசம் பூரா உங்களோட தான் ...."
"ஒவ்வொரு மார்கழியும் இப்படி வந்துடறியே ...உன் கச்சேரி எல்லாம்
என்ன ஆகிறது?"
"அதை விட சந்தோசம் எனக்கு இங்கே .....உங்களப் பார்க்கறதில தானே
கிடைக்கிறது "
வெகு பிரியத்துடன் அந்த கிழவரின் கால்களை வலி போக ஹிதமாகப் பிடித்துக் கொண்டு தண்டபாணி இருக்க ..அவனையும் அறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் அந்த கிழவரின் பாதங்களை
நனைக்க ..... !
ஆகவே, இனிமேல் .............
மார்கழி மாத கச்சேரிகளில் தண்டபாணியைத் தேடி யாரும்
போகாதீர்கள் ... ...
தான் செய்த பாவத்தை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் கழுவிக் கொண்டிருக்கிறான்
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவனை அப்படியே விட்டு விட்டு வந்து விடுவது தான் ....

23 comments:
வித்தியாசமான கதை
அடடா, கதை நல்லாவே இருக்கு. ஏன் இந்த சோக முடிவோ?
சிவனே என்று இருக்கும் சிவன் கோயில் அம்பாள் பெயரிலிருந்து அது நம் ஆங்கரை அக்ரஹாரம் தான் எனத் தெரிய வந்தது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
VGK
கேசவனின் மண்டையை உடைத்தகாலம், கச்சேரி வேண்டாம் என்று முடிவெடுத்த காலம், கேசவனின் தந்தைக்குப் பணிவிடை செய்யப் போன காலம் இவை இன்னும் சிறிது க்ளியராக இருந்திருக்கலாமோ.?செய்த குற்றத்துக்குப் பரிகாரம்.? வித்தியாசமாய்த்தான் இருக்கிறது.
கதை அருமையாக இருக்கு சார்.
//அக்ரஹாரத்தின் வாசலில் பஸ் சர்வீஸ்!
கொல்லைப் புறத்தில் படகு சர்வீஸ் !!//
முதலில் அக்ரஹரத்தைப்பற்றி நீங்க விவரித்திருப்பதை படிக்கவே சுகமாக இருக்கு.
கதை ரொம்ப நல்லா இருக்குங்க.
மிக்க நன்றி ரிஷபன் சார் !
அது ஆங்கரை அல்ல!
பாலு சார் ....
என்னிடம் உள்ள பெரிய குறையே வாசகருக்கு முழுக் கதையையும்
கொடுக்க மாட்டேன்....பாதி நான் எழுதுவேன்..மீதி அவர் புரிந்து
கொள்ள வேண்டும். நான் எழுதும் சிறுகதைகள் வாசகருடன் பகிர்தலுக்கு
மட்டுமே ...படிப்பதற்கு அல்ல !
ராம்வி, கேரளா அம்பலப்புழை அப்படித் தான் இருக்கும்.
ஒரு சின்ன சந்தேகம்......
புல்லாங்குழல் ஊதும் ஒயிட் ஷர்ட் நம்ம ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சார் என்றால் அருகில் கட்டம் போட்ட சட்டை “நம்மாளு” தானே?
>>>>>>
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
//அது ஆங்கரை அல்ல!//
*கொல்லைப் புறத்தில் படகு சர்வீஸ்*
என்ற ஒன்றைத்தவிர மீதியெல்லாமே
நம் ஆங்கரை அக்ரஹாரத்துடன் ஒத்துப் போகுது பார்த்தீங்களா?
கிழக்கே சிவன் கோயில், அந்த அம்பாள் பெயர் “சுந்தர காஞ்சனா”, மேற்கே அக்ரஹாரத்தைப்பார்த்தபடி பெருமாள் கோயில், அக்ரஹாரத்தின் அருகிலேயே பஸ் நிறுத்தம்.
அதனால் தான் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்தது.
அன்புடன்
VGK
வை. கோ. said :
"ஒரு சின்ன சந்தேகம்......
புல்லாங்குழல் ஊதும் ஒயிட் ஷர்ட் நம்ம ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சார் என்றால் அருகில் கட்டம் போட்ட சட்டை “நம்மாளு” தானே?"
சார்...சார் .....அது நம்ம ப்ரெண்ட் ரவீந்திரன் சார்.....(வசந்த முல்லை) ஏதோ நட்புக்காக மைக் பிடிச்சுட்டு இருக்கார் ...அப்பவே அதாவது 2007 வாக்கில் "வாளை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" என்கிற
அந்த காலத்து பேமஸ் பாடலை பாடி எங்கள் நட்பை குலைக்கப்
பார்த்தனர் நண்பர்கள் ..நம்ம ரவி அதை பெரிசா எடுத்துக்கல ...
நீங்க அவரை நம்மாளு ரேஞ்ச்க்கு இறக்கினா, கோச்சுக்கப் போறாரு இதைப்
பார்த்தால் .....
வை.கோ said:
*கொல்லைப் புறத்தில் படகு சர்வீஸ்*
என்ற ஒன்றைத்தவிர மீதியெல்லாமே
நம் ஆங்கரை அக்ரஹாரத்துடன் ஒத்துப் போகுது பார்த்தீங்களா?
கிழக்கே சிவன் கோயில், அந்த அம்பாள் பெயர் “சுந்தர காஞ்சனா”, மேற்கே அக்ரஹாரத்தைப்பார்த்தபடி பெருமாள் கோயில், அக்ரஹாரத்தின் அருகிலேயே பஸ் நிறுத்தம்.
அதனால் தான் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்தது.
அன்புடன்
VGK
உங்க சந்தேகம் நியாயம் தான் சார். சிவன் பெயரும் மருதாந்தநாத ஸ்வாமி தான் ..ஆங்கரை தான் அது ..ஆனா பின்னாடி படகு சர்வீஸ் ..
வாசலில் பஸ் சர்வீஸ் எனபது அம்பலப்புழை என்கிற கேரளாவில் உள்ள இடம்
வை.கோ . சார் ..
நம்மாளு வேற யாரும் இல்லை .....என் மனசாட்சி தான் அது !
அன்புடன் ,
ஆர்.ஆர்.ஆர்.
இசைக்கு வசமானவர்களுள் பொறாமை வன்மம் போன்ற கசடுகளும் உண்டா?!
எத்தனை மார்கழி வேண்டியிருக்கோ அவர் பிராயசித்தத்துக்கு...!
டிராமாடிக்கா போயிடுத்தோ முடிவு?!
இசையைக் கேட்பவர்களுக்கு நோய் தீரும் என்பார்கள். அதை வாழ்க்கையாகக் கொண்டவருக்கு அது உதவாதோ?
கதை எங்கேயோ இடிக்கிறது.
வருகைக்கு நன்றி நிலா மகள் மேம்...
சமயத்தில் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களும் ‘சினிமாட்டிக்’ ஆகத் தான் இருக்கு..இல்லையா?
எந்த ஜோஸ்யருக்கு அவர் ஜோஸ்யம் பலித்தத்து? எந்த டாக்டர் தன் நோய்க்கு தானே வைத்யம் செய்ய விரும்புவார்?
வருகைக்கு நன்றி ரஞ்சனி மேம்...
ஒரு சிறுகதை என் வலையில். படித்துப் பார்க்கிறீர்களா. ?
BALU SIR,
IT IS REALLY WONDERFUL. THANKS FOR SHARING.
முடிவு - நிறைய சிந்திக்கவைக்கிறது ..
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com
கதை அருமையாக இருக்கிறது.
Post a Comment