ரிடய்ர்டான பிறகு என்ன பண்ணப் போகிறோமோ என்று பயந்து
கொண்டிருந்தேன். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால்
ரிடயர்ட் ஆவதற்கு ஆறு மாதம் முன்னாலிருந்து ரிடயர்ட் ஆகும் மாதம் வரை தொடர்ச்சியாக மாதம் இருமுறை லேடீஸ் காலேஜ்களில் GUEST
LECTURES என்று அழைப்புகள் வந்து அது வேறு ஒரு விதமான சோகத்தால் என்னைப் பிழிந்து எடுத்துக் கொண்டு இருந்தது.
நான் பயந்து கொண்டிருந்த அந்த ரிடயர்ட்மென்ட் நாளும் வந்தே விட்டது ஒரு நாள் !
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் எனக்குத் தான் ரிடயர்ட்மென்ட்டே தவிர , என் சகதர்மிணிக்கு அல்ல !
அவளுக்கு இன்னும் ஐந்து வருடம் சர்வீஸ் இருக்கிறது . வீட்டு வாசல்
வரை வரும் வேனில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து ஆபிஸ் போய் விடுவாள் .
பத்து மணிக்கு கிளம்பினால், மாலை ஆறு மணிக்குத் தான் வருவாள். அது வரை இந்த வீட்டை புதையலைக் காக்கும் பூதம் போல் நான் தான்
பாதுகாக்க வேண்டும் !
அந்த எரிச்சல் வேறு !
எப்படித் தான் பொழுதுப் போகப் போகிறதோ ! ஆனால் நடந்ததென்னவோ நான் பயந்ததிற்கு 'உல்டாவா'கப் போய் விட்டது!
இப்போதெல்லாம் மனது அவங்களுக்கு இன்னும் அஞ்சு வருடம் EXTENSION
கிடைத்தால் கூடத் தேவலை என்று எண்ண ஆரம்பித்து விட்டது என்றால்
பார்த்துக் கொள்ளுங்கள் !
ஆபீஸ் போவது போல குளித்து விட்டு சக தர்மிணியுடன் டைனிங் டேபிளில் டிபன்
சாப்பிட வேண்டியது ..பிறகு வாசல் வரை வந்து டாடா காண்பித்து
வழி அனுப்பி விட்டு கிடுகிடுவென
மாடிக்கு ஓட வேண்டியது ..அங்கு இருக்கும் சிஸ்டத்தில், 'நெட்' டை மேய
வேண்டியது..
இது தான் என் நித்ய கர்மானுஷ்டகம்!
காலையில் ட்விட்டர் .....நடுப்பகல் பேஸ் புக் ...மாலையில் ..பிளாக் ..
என்று மண்டலம் மண்டலமாக பொழுதும் ஜாலியாகப் போய்க்
கொண்டிருந்தது.
அப்படித் தான் ஒரு நாள் நான் நெட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கீழே, வீட்டு வாசல் கதவை பூனை ஒன்று பிறாண்டுகிறார் போல ஒரு சத்தம் !
கதவைத் திறந்தால் ..... ஒரு அழகான பெண் ..... எதிர்த்த வீடு ...
"அங்க்கிள் ...நான் ஷகிலா ..ப்ளஸ் டூ போகப் போறேன் ..நீங்க CHEMISTRY PROFESSOR னு எங்கம்மா சொன்னா .. நான் CHEMISTRYல வீக் ...இப்ப இந்த ANNUAL LEAVE ல எனக்கு கொஞ்சம் சொல்லித் தந்தீங்கன்னா ... "
" அதுக்கென்ன பேஷா சொல்லித் தரேனே .. சும்மாத் தான் இருக்கேன்..பத்தரைக்கு DAILY
வந்துடு...ஒரு மணி வரை சொல்லித் தரேன் "
இப்படியாகத் தானே எங்கள் நட்பு தொடர்ந்தது ..
அந்த ஷகிலாவின் அப்பாவும் அம்மாவும் OFFICE GOERS.
அதைத் தவிர என்னுடைய ஏழரை கழுதை வயசு எனக்கு ஒரு பெரிய
ப்ளஸ் பாயிண்ட் !
வயதானால் என்ன ஒரு செளகர்யம்!
அந்த பெண் என்னிடம் CHEMISRTY கற்றுக்கொள்ளத் தான் வந்து
கொண்டிருக்கிறாள் என்று நான் சொன்னால் அதை அப்படியே நம்பி விட நீங்கள் என்ன சின்ன பாப்பாவா ?.
"பாவை உந்தன்
கடைக் கண்
பார்வையில்,
சாவை எதிர்
கொள்பவனும்,
சட்டென எழுவான் !'
என்று புதுக்கவிதை ஒன்றை ஒரு நாள் நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டது .
ஆத்திரத்துடன் கதவை படாரென்று திறந்தால் ... ....
சாட்சாத் என் சகதர்மிணி !
"என்ன நடக்கிறது இங்கே ?"
பயத்தில் என்னுடைய ....பல் செட் கழண்டு விழ, ஷகிலாவிற்குத் தெரியாமல் அதை எடுக்க நான் முயல , படபடப்பில் தலையில் இருந்த 'விக்'கும் திடீரென கீழே விழுந்து தொலைக்க, அந்த
குழந்தை திக்ப்ரமையுடன் என்னைப் பார்த்து லுக் விட..விக்...திக்...லுக்...மிக்ஸ் ஆகி, சட்டென்று அந்த ஷகிலா சிரித்து வைக்க,
ஆண்களுக்கு விக்கும், பல்செட்டும் பறி போனால், பெண்களுக்கு 'வஸ்த்ராபரணம்' என்கிற அவமானத்தை விட, எத்தகைய அவமானம் ?
அதுவும் வேன் ரிப்பேர் ஆனதால் ஆபீசுக்கு லீவ் போட்டு விட்டு, வீட்டுக்கு வந்து பத்ரகாளி போஸில் சகதர்மிணி எதிர்த்தாற் போல் வேறு நிற்கும் போது !
இது நாள் வரை அந்த ப்ளஸ் டூ பைங்கிளியிடம் நான் பில்டப் பண்ணி வைத்திருந்த CHEMISTRY போய் விட ....
அதாவது தேவலை என்றாகி விட்டது .....
அதற்குப் பின் நடந்த
அடுக்கடுக்கான துயரச் சம்பவங்கள் ... .
எனக்கும், சகதர்மிணிக்கும் நடந்த உரையாடல்களும் ..
அதனைத் தொடர்ந்து நடந்த விஷயங்களும் அவ்வளவு சுவாரஸ்யமாய் எழுத்தில் வடிக்க இயலாமல் போய் விட ................
வேண்டாம் பாஸ் கிளறாதீங்க ....
அதற்குப் பிறகு என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
1. வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு வந்து விட்டாள், என் சகதர்மிணி !
2. வீட்டிலிருந்த இன்டர்நெட் கனெக்ஷனும் போய் விட்டது !!

32 comments:
சுவாரஸ்யமாய் CHEMISRTY WORK OUT ..OK OK ...
என் பேத்தி ட்யூஷன் சொல்லிக் கொள்ளும் வாத்தியாரை நான் பார்க்கணுமே. பட்டதாரியா வேஷதாரியா...?
இந்த மனசுன்னு ஒண்ணு இருக்கே அதுக்கு கூச்ச நாச்சமே கிடையாது.
இந்த சினிமாவுக்கு எல்லாம் இருக்கறது போல ஒரு சென்சார் போர்டு இந்த வலைப்பக்கத்துக்கும்
வேண்டும் போல இருக்கு.
சுப்பு தாத்தா.
பின் குறிப்பு: அடுத்த காட்சி எப்போ வரும் ?
சிரிச்சு சிரிச்சு பல் சுளுக்கிக்கிச்சு..
மனைவி வி.ஆர்.எஸ் வாங்கி விடுவார் என்று நான் ஆரம்பத்திலேயே ஊகித்து விட்டேன்!
அந்த குட்டிக் கவிதை பிரமாதம்!
இராஜராஜேஸ்வரி மேம்..
இது சும்மா கற்பனை தான்..சுபாவத்தில நான் ரொம்ப நல்ல பையனாக்கும்!
சுப்பு தாத்தாட்ட வேணா கேட்டுப் பாருங்கோ!
GMB சார்,
நான் பரவாயில்லையே..என் பேத்திக்கு ட்யூஷன் சொல்லி கொடுக்க மிஸ் தான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.
ஒரு இருபது வருடம் முன்னால பிறந்து தொலச்சு, அநியாயத்திற்கு அந்த மிஸ்ஸை மிஸ் பண்ணிட்டேனேன்னு,
வருத்தப் பட்டேன், அவங்கள முதன் முதலாகப் பார்க்கும் போது!
சென்சார் போர்ட் இந்த என் வலைப் பக்கத்துக்கு வைச்சீங்கன்னா, எல்லாமே
BLANK ஆகத் தான் இருக்கும் பரவாயில்லையா?
ஓ..ரிஷபன்..பல் ஆஸ்பத்திரியில இருந்தது நீங்க தானா?
இந்தத் தொடர் முடியவரைக்கும் சென்சார் போர்டு வேண்டாம்னு ஸ்பெஷலா சொல்லியிருக்கேன்.
சீக்கிரமா அடுத்த காட்சியைப் போடுங்கோ....
சுப்பு தாத்தா.
//ஆத்திரத்துடன் கதவை படாரென்று திறந்தால் ... ....//
அப்பைக்குன்னு பார்த்து கரன்ட் கட்.
// "என்ன நடக்கிறது இங்கே ?"//
சுப்பு தாத்தா.
அடடா! இப்படி ஆயிடுத்தே....:))
பாவம் சார் நீங்க, net loss ரொம்பவே!
சூரி சார்..
இது தொடர் அல்ல..
மனைவிகிட்ட வாங்கிக் கட்டிக்கிறது தொடர் காட்சி தான்!அது IMPLIED!
அதனால, உங்க INFLUENCE வைச்சு ஒரு EXEMPTION CERTIFICATE வாங்கித் தாங்கோ!
இந்த கதை நடந்த காலத்தில கரெண்ட் கட் இல்ல..கரெண்ட் கட் மட்டும் இருந்தா என் கதை கந்தலாயிருக்கும் சூரி சார்!
என்ன பண்றது..கோவை 2 டில்லி மேம்! இப்ப நெட் இல்லாம அவஸ்தை பட்டுண்டு இருக்கேன்!
கவிதைன்னு போடக் கூடாதா மனோ மேடம்! அதுக்கு ஒரு ADJECTIVE கொடுத்ததைனால, வூட்ல ஒரு புதுக் குழப்பம் உருவாயிடுச்சு!
ஜனா சார் கரீட்டா சொன்னீங்க..
நமக்கு நெட் லாஸ் நெட் லாஸ் தான்!
CHEMISTRY யும் போய் கணக்கும் போச்சா?
எல்லாமே போச்......ஸ்ரீராம் !
இப்பவும் ஒண்ணும் குடி முழுகுப்போய் விடவில்லை.
இன்னொரு ட்யூஷன் கிடைக்காமலேயா போயிடப்போறது !!
யூ நோ மான் லிவ்ஸ் ஆன் ஹோப்ஸ்.
பட் சேஞ்ச் த வென்யூ
சுப்பு தாத்தா.
ரொம்ப சரி ..சூரி சார்,
ஆனா முதுகு என்னுது ஆச்சே !
அதனால தான் பயமாயிருக்கு !!
'பட்டதெல்லாம் போதும் பட்டினத்தாரெ'ன்னு
ஒரு ஓரமாய் உட்கார்ந்து பாடத் தான்
முடியும் நாம இருக்கிற இருப்பில
ஆஹா.... இப்படி போகுதா கணக்கும் கெமிஸ்ட்ரியும்...
ரிஷபன் சார் கூட இன்னொருத்தரும் பல் ஆஸ்பத்திரியில இருந்தாரே உயரமா, நீங்க பாக்கலையா? :)
அட... நீங்க தானா வெங்கட் அது!
இப்படி எல்லாரும் பல் டாக்டர்ட்ட போனா என் பையனை பல் மருத்துவம் படிக்க வைக்காம போனோமேன்னு வருத்தமா இருக்கு எனக்கு!
"அந்தப் புதுக்கவிதை" தான்
பதிவைக் கற்பனையா
கன்பெஷனா எனச் சந்தேகிக்க......!!
//ஆண்களுக்கு விக்கும், பல்செட்டும் பறி போனால், பெண்களுக்கு 'வஸ்த்ராபரணம்' என்கிற அவமானத்தை விட, எத்தகைய அவமானம் ?
அதுவும் வேன் ரிப்பேர் ஆனதால் ஆபீசுக்கு லீவ் போட்டு விட்டு, வீட்டுக்கு வந்து பத்ரகாளி போஸில் சகதர்மிணி எதிர்த்தாற் போல் வேறு நிற்கும் போது !
இது நாள் வரை அந்த ப்ளஸ் டூ பைங்கிளியிடம் நான் பில்டப் பண்ணி வைத்திருந்த CHEMISTRY போய் விட .... //
SUPERB ! ;)))))
என்ன ஆச்சு உங்களுக்கு ?
ஏழெட்டு நாளா இல்ல பதினஞ்சு நாளா பதிவே புதுசா ஒண்னுமே இல்லயே?
பயமா இருக்கே ?
சக தர்மிணி த்வம்சம் செஞ்சு ஐ.ஸி.யூ வில் அட்மிட் ஆனவர் நீங்க ..
டிஸ்சார்ஜ் ஆகி, வெளிலே வந்துட்டேளா இல்லயா ?
என்னதான் ரோடு சரியா இருந்தாலும்,
அப்பப்ப ஒரு பை பாஸ் ரோடு இருந்தாத்தானே கொஞ்சம் த்ரில் இருக்கும் !
சுப்பு தாத்தா.
வாசன் சாரே..ஆனாலும், இவ்ளவ் கெட்டிக்காரத் தனம் கூடாது..கரீட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே!
என்ன போங்கோ வைகோ சார்..மஞ்சு மேம் மாதிரி முழ நீள கமெண்ட்டை உங்க பாணியில எதிர்பார்த்தேன்..ம்...
சூரி சார்..ICU வை விட்டு வந்தாச்சு! பத்து நாள் சேர்ந்தாற்போல் ஆஸ்பத்திரியில இருந்ததுல ஒரு புது பயம் வந்திருக்கு..
கிட்னியை பாக்கெட் அடிச்சிருப்பாங்களோ?
//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
என்ன போங்கோ வைகோ சார்..மஞ்சு மேம் மாதிரி முழ நீள கமெண்ட்டை உங்க பாணியில எதிர்பார்த்தேன்..ம்...//
என் அன்புத்தங்கச்சி மஞ்சுவுக்கு கடந்த 10 நாட்களாக உடல்நலம் சரியில்லை.
அதனால் நானும் UPSET ஆகியுள்ளேன் என நினைக்கிறேன்.
அவங்க நல்லபடியாக திரும்பி வரட்டும். இரண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு எழுதித் தள்ளுகிறோம்.
அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ.
மேலும் இது ஒரு வில்லங்கமான பதிவாக உள்ளது. நான் ஏதாவது எழுதப்போய் அதுவே மிகப் பெரிய பிரச்சனையாகி விடும் ஸ்வாமி.
அன்புடன்
VGK
அதுவும் சரி தான்!விளையாட்டை இத்தோட நிறுத்திட்டு, அடுத்த பதிவு different ஆ எழுத ட்ரை பண்ணுகிறேன்..
Post a Comment