லாலாக்கடை பூந்தியை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போல் மொய்த்துக் கொண்டிருந்தார்கள், ஸபா காரர்கள் ..
எல்லார் முகத்திலும் ஏமாற்றம் அப்பிக் கிடந்தது ..
" கொஞ்சம் CONSIDER பண்ணுங்கோ சார்.."
" அடுத்த வருஷம் அந்த முடிவை எடுங்கோ !"
" உங்க ரஸிகாளை இப்படி ஏமாத்தக் கூடாது !"
"அவா அவா மதுரை, திருநெல்வேலிலேர்ந்தெல்லாம் வரா .."
" அவங்கவங்க ஆயிரம், ரெண்டாயிரம் செலவழிச்சுண்டு உங்க கச்சேரி கேட்க
வராங்க .."
“க்ளீவ் லேண்டிலிருந்து ரசிகாள்ளாம் வராளாம் ஒங்க கச்சேரி கேட்க”
எதற்கும் மசியவில்லை தண்டபாணி !
அவன் சொன்னால் சொன்னது தான் ..யாருக்காகவும் எதையும் மாற்றிக் கொள்ள மாட்டான் ! அவனுடைய இந்த முரட்டு பிடிவாதத்தை, அவனுடைய வித்வத் ஒன்றுக்காகவே எல்லாரும் சகித்துக் கொண்டிருந்தனர்.
"அப்ப இந்த ’சீஸன்’ ல அண்ணாவோட தர்பாரைக் கேட்க முடியாது ..இப்படியே போனா, OUT OF SIGHT OUT OF MIND னு ஆயிடப் போறது ...
அவ்ளவ் தான் சொல்லிட்டேன் ."
" போனாப் போகட்டும் "
தலையை சிலுப்பிக் கொண்டு சொன்னான் தண்டபாணி அலட்சியமாய் !.
"... உன்னோட சங்கீதம் அப்படி எல்லாரையும் கட்டிப் போட்டிருக்குங்கிற
மமதையில் பேசறே ..எப்பேர்பட்ட ஆளெல்லாம் எங்கேயோ போய்ட்டான் ...நீ
சுண்டைக்காய் ..சான்ஸ் கிடைச்சா ஒன்னை நசுக்கிப் போட்டுட மாட்டேன் நசுக்கி " என்று அவனிடம் கச்சேரி சான்சுக்காக வந்த அத்தனை சபா செகரட்டரிகளும் மனத்துள் கறுவியபடி சென்றனர் .
" அப்ப நாங்க "
" உங்களுக்கும் அதே பதில் தான் ..நீங்க மற்ற வித்வான்களுக்கு வாசியுங்கோளேன் ."
"என்ன இருந்தாலும் தண்டபாணிக்கு வாசிக்கிறா மாதிரி ஆகுமா" என்று இழுத்தார் வயலின் வித்வான்.
வேணு வீணா வயலின் கான்சர்டுகளுக்கு ஒரு ரெண்டு வருஷமாக இவர் தான் அவனுக்கு வயலின் ஜோடி ...அந்த ரெண்டு வருஷங்களும் அவர் காலட்சேபம் நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது.அந்த விசுவாசம்!
சுபாவத்தில் முரடனாகத் தோன்றினாலும் பக்க வாத்தியக் காரர்களுக்கு மிகவும் பிடித்த வித்வான் தண்டபாணி ..'தனி'க்கு சான்ஸ் தருவான் ..அவர்களை அரவணைத்துச் செல்வான் ..முக்கிய தருணங்களில் இவர்கள் வாசிப்பிற்கு ஆடியன்சை அப்ளாஸ் செய்யச் சொல்வான் ..சம்பாவனைகளையும் மனசுக்குத் திருப்தியாய் வாங்கித் தருவான். ஆகவே பக்க வாத்தியக் காரர்களுக்கு இவனை ரொம்பவே பிடிக்கும் .
அவனுடைய நவரசக் கன்னடாவில் அமைந்த "நானொரு விளையாட்டுப் பொம்மையா" வும், ஹிந்தோளத்தில் அமைந்த " மா ரமண" வும், கேட்க கேட்க திகட்டாது .அவனுடைய ககன குதூகலத்தையும் , ரவிச்சந்திரிகாவையும்
அவ்வளவு லேசில் மறக்க முடியாது ..
மதுரை மணி ஐயரே மறுபடியும் பிறந்து வந்து 'மா ஜானகி'யை ப்ளூட்டில் வாசிக்கிறாரோ என்று நினைக்கும் படி இருக்கிறது என்று எல்லா வித்வான்களையும் கிழி கிழியெனக் கிழிக்கும் பிரபல சங்கீத விமர்சகர் போன வார ஜன ரஞ்சக பத்திரிகை ஒன்றில் விமர்சனம் எழுதினார்.
ராகம் தானம் பல்லவியை யார் இப்போதெல்லாம் விஸ்தாரமாய் பாடுகிறார்கள், தண்டபாணியைத் தவிர!
அதுவும் ‘யோஜனா” என்று ஆரம்பித்தானென்றால் ஒத்தை கொட்டு அப்ளாஸ் .... .மூன்று நொடி சைலன்ஸ்..அதற்கு அப்புறம் ஆரம்பித்தானால் முழுசாய் ஒரு மணி நேரம் ஓடி விடும். தர்பார் தண்டபாணி என்று அவனுக்கு பெயரைக் கொடுத்த கீர்த்தனை அல்லவா அது!
எல்லாவற்றையும் விட அவன் செய்த காரியம் ‘கிளாசிக்கல் ம்யூசிக்’ என்பது ‘எலைட்’ மனிதர்களுக்கு மட்டும் தான் என்கிற சித்தாந்தத்தை உடைத்து, பாமரனும் அந்த சங்கீதத்தை ரசிக்கும் படியாக கொண்டு செல்லும் ரசவாதம் தெரிந்தவன் இன்றைய கால கட்டத்தில் அவன் ஒருவனாகத் தான் இருக்க முடியும்!
அவன் கச்சேரி கேட்க வந்தவர்கள் நடுவில் எழுந்து போக முடியாது. ஆட்டோவைக் கூப்பிட்டால் ‘என்ன அவசரம், தண்டபாணி ஃப்ளூட் முடிச்சுட்டு
வரேன்’ என்பார்கள் அத்தனை ஆட்டோக் காரர்களும் சொல்லி வைத்தாற் போல்!
( இதன் தொடர்ச்சி வருகிற ஞாயிறு 06.01.13 அன்று வெளி வரும்)

16 comments:
சுக ராகமாய் ஆரம்பித்து ‘தனி’க்கு இடைவெளி விட்ட மாதிரி இருக்கு
ரிஷபன் சார்! அந்த 'தனி'யும் மூவார் தானே?..
கச்சேரி நல்லாப்போகுது. பாதியிலே இப்படி இடைவேளை விட்டுட்டீங்கோ. ;)
கச்சேரி பாட ஆரம்பிக்கு முன்பே இடைச்வேளையா ???
பாமரனும் அந்த சங்கீதத்தை ரசிக்கும் படியாக கொண்டு செல்லும் ரசவாதம் தெரிந்தவன் //
அடடா... பவர் கட் மாதிரின்னா பட்டுன்னு நிறுத்திட்டேள்!
கச்சேரி ரொம்ப நல்லா இருக்கு. இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.
சிறப்பான பதிவு..
நல்ல ஒரு கச்சேரி! முழுவதும் கேட்க காத்திருக்கவும் தயார் தான்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஆம் ரிஷபன் ..'தனி'க்கு கொஞ்சம் இடைவெளி ஜாஸ்தி தான்!
என்ன ஜீவி சார்...இப்படி சட்னு ஒத்த வரியில முடிச்சுட்டீங்க ? கதையில
நீங்க எதிர்பார்க்கிற 'வெயிட்' இல்லையா ?
வைகோ சார் ...நீங்க இப்படி சொல்லணும் என்பதைத் தான் நான் எதிர்பார்த்தேன் ...'அட ...சட்னு இப்படி முடிச்சுட்டாங்களே'ன்னு ஒரு நல்ல கதை
வாசகனை சொல்ல வைக்கணும் என்று நீங்க தான் சொல்வீங்களே ?
ராஜி மேம் ....தயை செய்து வை.கோ. சாருக்கு நான் எழுதிய
பதிலைப் பாருங்களேன் ....
வாருங்கள் நிலா மகள் மேம்...இப்போது உங்களுக்கு மதுரை மணி ஐயர் ஞாபகம் வரணுமே?
புத்தாண்டு வாழ்த்துக்கள் பூந்தளிர் !
மிக்க நன்றி மாற்று பார்வை ....அடிக்கடி தாங்கள் வர வேண்டும் !
மிக்க நன்றி ரஞ்சனி மேம் ....ஒரு நல்ல கச்சேரி என்றால் இதெல்லாம் ஒரு குறையா என்ன ?
தங்கள் வருகைக்கு நன்றி !!
Post a Comment