Wednesday, October 31, 2012

எழுத்து ஒரு தவம்



   
. எழுத்து ஒரு வலிமையான ஆயுதம். அதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் .கூரிய வாளிற்காவது இரண்டு பக்க முனைகளில் தான் ஆபத்து ..
ஆனால் எழுதுகின்ற எழுத்துக்களுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபத்து வரும்...வரலாம். 
       நகைச்சுவையாக பேசுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம் ..நகைச்சுவையாகப் பேசுகிறோம் என்று யார் மனத்தையும் காயப் படுத்தி விடக் கூடாது.அதற்கு அந்த மாதிரி பேசுகிறவனுக்கு எந்த வித மான தார்மீக
உரிமையும் கிடையாது . .அது போலத் தான் எழுதுவதும். இது ஒரு வேள்வி .
இதனால் பயன் தான் கிடைக்க வேண்டும் எல்லாருக்கும்.
      எழுதுவதில் ஒரு  சிரத்தை இருக்க வேண்டும் எழுதுகிறவனிடத்தில்!
இங்கு நாம் எழுதுவது யாராவது ஒருவருக்காவது  பலன் அளிக்க வேண்டும் ..ஆயிரத்தில் ஒருவராவது நம் எழுத்தில் பலனடைந்தால் அந்த எழுத்தாளனுக்கு அதை விட வேறு மகிழ்ச்சி கிடையாது . உதாரணமாக,
குடியினால், தன் குடும்பத்தையே வீதிக்குக் கொண்டு வந்த ஒருவன் ஒரு எழுத்தாளனிடம் " சார் உங்க எழுத்து என் கண்ணத் திறந்து விட்டது . நானும் பாழும் கிணற்றிலிருந்து மீண்டு விட்டேன் ..இனி என் மனைவி, மக்கள் தான் என் உலகம் ..இனி ஒழுங்காய் இருப்பேன் சார் " என்று சொன்னால் அந்த எழுத்தாளனுக்கு ஞான பீட விருதினை விட ..ஒரு சாகித்ய அகாடமி விருதை விட ..இதுவன்றோ ஒரு பெரிய விருதாக இருக்க  முடியும்!
     எல்லா ப்ரோபஷனல்களையும் விட எழுத்தை தொழிலாக வைத்துக் கொள் பவனுக்கு  ETHICS அதிகமாக இருந்தால் தான் அந்த எழுத்தாளன் வாழ்கின்ற சமுதாயம் ஒரு மேன்பட்ட ..ஒரு நாகரீகமான சமுதாயமாக இருக்க முடியும்
என்பதை நம்புகிறவன் நான் ..
    கடைசியாக  ஒரு வார்த்தை ..
    உங்கள் எழுத்தினை உங்கள் மனைவி மற்றும் உங்கள் பெண்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால் போதும் ..
உங்கள் எழுத்தில் மெருகு தானாக் கூடி விடும் !
    நீங்களும் உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு சமுதாய சிற்பி ஆகி விடுவீர்கள் !!
     வாஸ்தவமாகவே !!!    
              

8 comments:

ரிஷபன் said...

எழுதுவதில் ஒரு சிரத்தை இருக்க வேண்டும் எழுதுகிறவனிடத்தில்!

வாஸ்தவமான பேச்சு.

தி.தமிழ் இளங்கோ said...

// உங்கள் எழுத்தினை உங்கள் மனைவி மற்றும் உங்கள் பெண்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால் போதும் ..உங்கள் எழுத்தில் மெருகு தானாக் கூடி விடும் ! நீங்களும் உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு சமுதாய சிற்பி ஆகி விடுவீர்கள் !! //

வலைப் பதிவு எழுத்தாளர்களுக்கு காலத்திற்கேற்ற அறிவுரை.

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வு.

ஜீவி said...

கொடுத்திருந்த தலைப்பும் சரி, சொல்லிய பாங்கும் சரி அழகு.

ஸ்ரீராம். said...

மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய கருத்துகள்.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல கருத்துகள்.பகிர்வுக்கு நன்றி.

அப்பாதுரை said...

//எழுதுவதில் ஒரு சிரத்தை இருக்க வேண்டும்

உண்மை. பலனளிக்க வேண்டும் என்பதை ஏற்கமுடியவில்லை. பலன் என்பது என்னவென்று தீர்மானிக்க இயலாத நிலையில்.

திண்டுக்கல் தனபாலன் said...

கடைசியாக சொன்னீர்களே ஒரு வார்த்தை... அது தங்க வார்த்தை...

நன்றி...