’இருட்டில் வருவது யாரென’க் கேட்டேன்,
’திருட்டுப் பயல்’ எனத் திமிராய் சொன்னான்.
’திரட்டுப் பால் தினம் ஏதெ’னக் கேட்டேன்,
’திரிந்து போன பாலிது’ என்றாள்.
ஓரெட்டு மணித் துளி அரசு அறிவிப்பு..
ஈரெட்டு நேரமும் இருட்டிலே வாழ்க்கை!
’மாண்டவன் திடலில் காத்திருக்கும் கோரம்..
ஆண்டவனே ஏனிந்த அவலம்?’ என்றேன்
ஆண்டவன் சற்று அருகில் வரவே,
ஆயிரம் மெகா வாட் பவர் தனைக் கேட்டேன்.
’ஐம்பது பர்செண்ட் பவர் கட் எனக்கும்!’
அர்த்த நாரியான ஈஸ்வரன் சொன்னான்!!
ஈரெட்டு நேரமும் இருட்டிலே வாழ்க்கை!
’மாண்டவன் திடலில் காத்திருக்கும் கோரம்..
ஆண்டவனே ஏனிந்த அவலம்?’ என்றேன்
ஆண்டவன் சற்று அருகில் வரவே,
ஆயிரம் மெகா வாட் பவர் தனைக் கேட்டேன்.
’ஐம்பது பர்செண்ட் பவர் கட் எனக்கும்!’
அர்த்த நாரியான ஈஸ்வரன் சொன்னான்!!
11 comments:
ஆண்டவனுக்கும் பவர் கட்டா??!!
ஷாக் பா!!!
Nitharsanap paa. Varuththodu oru sabaash!
//’ஐம்பது பர்செண்ட் பவர் கட் எனக்கும்!’
அர்த்த நாரியான ஈஸ்வரன் சொன்னான்!!//
வெண்பா அல்ல மின் பா தான்.
பாராட்டுக்கள்.
நாளை 15 10 2012 முதல் தாங்கள் தான் ஒரு வார வலைச்சர ஆசிரியர் எனக் கேள்விப்பட்டேன்.
மிகவும் சந்தோஷம்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
க ல க் கு ங் கோ!
அன்புடன்
VGK
கடவுள் தான் ஒளிந்து கொண்டார் என்றால் கரண்டுமா?!
அன்பின் ராம்மூர்த்தி - கவிதை அருமை - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் ராம்மூர்த்தி - கவிதை அருமை - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஆரண்ய நிவாஸ் எனப்பெயர் வைத்தபின்
ஆத்துக்குள்ளே வெளிச்சம் வருமா ?
ஆரண்யம் என்றால் காடல்லாவா ?
அந்த ஆரண்யத்துக்குள்ளே
ஆண்டவனைத் தேட அல்லவா பிருஹத்
ஆரண்யகத்தில் வழி சொல்லியிருக்கிறது !!
அது சரி.
சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும் என்பர்.
சரத்திற்கு வருகிறீர்கள். வாணங்களும் வெடிகளும் வைத்திருப்பீர்கள்.
வணங்குகிறேன்.
வரவேற்கிறேன்.
எடுத்துக் காட்டும் ஒவ்வொரு வலையும்
அடுத்து வரும் தலைமுறைக்கு
அறிஉரையாய் இருக்கவேண்டும்.
வருக.
சுப்பு தாத்தா.
அருமை சார். ஆண்டவனுக்குமா பவர்கட்!!!!
தலைப்பே தனி கவிதைங்க அருமை.
வணக்கம்.ஆரண்ய நவாஸ்(அண்ணா)
உங்களின் வலைப்பக்கம் நான் முதல் முதலாக பார்தேன் அனைத்துப்படைப்புக்களும் அருமை அருமை.இந்த எழுத்துலகில் வெற்றி நடைபோட எனது வாழ்த்துக்கள் கடந்தவாரம் எனது படைப்பு (ரஞ்ஜனியம்மாவினால் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனது வலைப்பதிவு பக்கம் சென்று எனது படைப்புக்கும் ஒரு அங்கிகாரம் கொடுத்து அறிமுகப்படுத்துமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றேன்.
நல்லமுடிவை எதிர்பாக்கும்(ஈமெயில்முகவரி)Rupanvani@yahoo.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சரியான நேரத்தில் சரியான கவிதை. வாழ்த்துக்கள்.
என் வலைப்பூ 'manammanamviisum.blogspot.in' க்கும் வருகை தாருங்கள் சார்.
Post a Comment