அது ஒரு அத்தாணி மண்டபம்..பக்கத்தில் பெரிய, தாமரை பூத்த தடாகம் ஏதோ விசேடம் போலும்! மக்கள் அங்குமிங்கும் பரபரப்பாய் போய்க் கொண்டிருக்க,
வாசலில் அருமையான இன்னிசை..லவ,குசர்களைப் போல் இரு சிறார்கள்
ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள்..
உள்ளே கமகமவென சமையல் மணம்..அந்த தவசிப் பிள்ளையைப் பார்த்தால், ராஜகுமாரிக்கு எங்கோ பார்த்த ஞாபகம்! தன் செல்வங்களான அந்த ‘லவ,குசர்களை’ சமையல் கட்டில் கொண்டு போகச் சொல்கிறாள், மந்திரியிடம்..அவனும் அச்சிறார்களை அங்கு கொண்டு போய் விடுகிறான்..சமையல் செய்யும் அந்த தலைமை சமையல் காரனுக்கு இச்சிறார்களைப் பார்த்ததும் என்னவோ தெரியவில்லை..அவர்களுடன் பாசத்துடன் பேச விழைகிறான்..அவன் ஏதோ சொல்ல, அவர்கள் அதற்கு தங்கள் குஞ்சு கைகளை ஆட்டிக் கொண்டு....
என்ன தான் நடக்கிறது..போய்ப் பார்ப்போமா?
அந்த தவசிப் பிள்ளை சொல்கிறான்,’ மக்காள் நீவிர் என் மக்கள் போல்கின்றீர் .. நீர் யார் மக்கள் ?”
குழந்தைகளுக்கோ படு கோபம்! இவன் யார் இவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டு இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறான்..இந்த சமையல் தொழில் செய்பவனின் பிள்ளைகள் போலவா நாம் இருக்கிறோம்? தாத்தா பெரிய சாம்ராஜயபதி..வீம மகராசன்..தாய் ராஜகுமாரி.. நாம் நள மகராஜன் பெற்றெடுத்த செல்வங்கள்... நம் தந்தை நம்மிடம் இருந்தால், இவன் இப்படி ஒரு கேள்வி கேட்கத் துணிவானா?’ என்று ஏங்கின அந்த பிஞ்சு நெஞ்சங்கள்..
அது ஒரு பாடலாக உருவெடுக்க..
அந்த காட்சியை கவிஞர் நம் கண் முன்னே நிறுத்துகிறார் பாருங்கள்..
யாராலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை!
அந்த வெண்பா இதோ!
நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லோ
தஞ்சாரோ மன்னர்...அடு மடையா....
எஞ்சாது தீமையே கொண்ட சிறு தொழிலாய்,
எம் கோமான் வாய்மையே கண்டாய் வலி!
அதைக் கேட்ட அந்த தவசிப் பிள்ளையின் கண்களில் தான் என்ன ஒரு கண்ணீர்..மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த தமயந்தியின் நெஞ்சம் வெடித்து விடுமோ என்று ஒரு சோகம்..
நளனிடமே நாங்கள் நளனின் குழந்தைகள் என்று சொல்லும் அந்த உணர்வு பூர்வமான காட்சியை ஒரு யுட்யூபில் பார்ப்பது போல உள்ளதா?
புகழேந்தி ஒருவரால் தான் இவ்வாறு காட்சியை வடிவமைக்க முடியும்!

11 comments:
வியத்தகு காட்சி. வியக்க வைக்கிற புலமை.நன்றி சார்.
பாட்டின் பொருளையும் வரிக்கு வரி கொடுத்தால் நல்லது. 'நினைந்துரைக்க நீயால்லா'என்றிருக்குமோ?
காட்சியை நன்றாக விவரித்து கூறியுள்ளீர்கள். பாட்டின் பொருளையும் சற்று விளக்கியிருந்தால் நன்றாக இருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.
என்னுடைய தளத்தில்
தன்னம்பிக்கை -3
தன்னம்பிக்கை -2
பாசக்காட்சியை உணர்வுப்பூர்வமாய் துல்லியமாய் "வெண்பாவிற் புகழேந்தி!வடித்த கவிதையை பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..
அருமையாய் அழகாய் விவரித்திருக்கிறீர்கள்!
வெண்பாவிற்கொரு புகழேந்தி !
நயமான பாடல்.அதை கவினுற காட்சிபடுத்திய மூவார் முத்தரே! தெண்டனிட்டேன் உம் தமிழுக்கே!
அருமையானதொரு காட்சியை எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள், ஸ்வாமீ !
அருமையான உணர்வுகள்.. அவ்வப்போது இப்படி பகிரலாமே..
அழகு, அருமை.
நல்ல உணர்வுகள்... அருமை... நன்றி...
பதிவிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...
ஜனா சார் ’......நினைந்துரைக்க’ என்று மாற்றி விட்டேன்..
மிக்க நன்றி!
கண்களுக்கு முன்னே விரிந்த காட்சி... சிறப்பான பகிர்வு...
Post a Comment