இப்போது எதற்கு எடுத்தாலும் எழுத்துக்களை மடக்கிப் போட்டு எழுதி புதுக் கவிதை என்று பூரித்துப் போகிறோமே அது போல அந்த காலத்தில்
எழுத முடியாது. அதிலும் வெண்பா இருக்கிறதே ..அப்பப்பா கொஞ்சம் தப்பா போனாலும், 'என்ன கர்மமடா இது என்று நொந்து நூடில்ஸ் ஆகி,
தன் தலையில் புண் வருமாறு குட்டிக் கொள்வார் சாத்தனார்.
இவராவது பரவாயில்லை. வில்லிப் புத்தூரார் என்று ஒருவர் அவர்
வெண்பா தளை தட்டினால், எங்கிருந்தாலும் உடனே ஓடி வருவார்.' உன்
பாடல் கேட்டு என் காது என்ன துன்பம் அடைந்தது தெரியுமா ? அது போல்
நீயும் அனுபவிக்க வேண்டும் 'என சொல்லிக் கொண்டு , காது குரும்பையால்
நம் காதுகளை குத்திப் புண்ணாக்கி விடுவார்.
அப்பப்பா இந்த காலத்தில் அந்த கஷ்டங்கள் இல்லை ! யார் வேண்டுமானாலும் வெண்பா எழுதலாம். யாரும் அடிக்க வர மாட்டார்கள் !
ஏதாவது திட்டினால் காதை பொத்திக் கொண்டு நாம் ஓடி விடலாம் !
வெண்பாவிற்கு வக்காலத்து வாங்கி அடிக்க வரும் ஆட்கள் இல்லாத
தைரியத்தில் அடியேனும வெண்பா எழுதத துணிந்ததின் விளைவே இது !
ஒரு பெண் தன் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் மூன்று ஆண்களை
எதிர்கொள்கிறாள். தகப்பனாக ... கணவனாக ...மகனாக ...அவர்கள்
குறுக்கிடுகிறார்கள் !அவள் இந்த மூன்று ஆண்களைச் சார்ந்து தான் வாழ
வேண்டும் தன் வாழ்நாள் முழுவதும் என்பது எழுதப் படாத விதி !
அந்த கற்பனையில் வெண்பாவை பெண் பாலாக்கினேன்!
சாத்தன், வில்லி என்ற ஆண் துணை இல்லாத அழகிய வெண்பாவைக்
கண்டதும் கவிஞன் ஒருவன் மனத்துள் சின்னதாய் குறுகுறுப்பு !ஆசை தீர அவளுடன் பேச வேண்டும் . நேரம் காலம் தெரியாமல் அவளுடன் உரையாட வேண்டும் .துணைக்கு இலக்கிய ரசனை உள்ள நண்பன் ஒருவன் அருகில் இருந்தால் 'கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் ' போல அற்புதமாய் பொழுது போகுமே ..அதனை செயல் படுத்த விழைந்து உடனே ஆருயிர் நண்பனைக் கூப்பிடுகிறான்
'....வெண்பா என்கிற அழகிய பெண் பாவோடு பேசலாம் வா நண்பா ' என்று!
அந்த பாடல் இது தான் !
"' நன் பாவிலென்ன நஞ்சைக் கலந்தாயோ?' - என
முன் போல் கொக்கரிக்க வில்லியும் ஈங்கில்லை,
வெண்பா நிர்க்கதியாய்.. அவளுடன் உரையாட
நண்பா நீ வந்து விடு " - என்றான் களிப்புடனே !
-------

6 comments:
ஆஹா.. வெண்பாவில் பேசும் நண்பா.. சூப்பர்
அன்புடையீர்.வணக்கம்.
தங்களது பதிவுகளை எனது மெயிலுக்கு அனுப்பித் தர இயலுமா?
நன்றி வணக்கம்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
snrmani@rediffmail.com
நன் பாலில் தேன் கலந்த மாதிரி, நண்பா உங்கள் வெண்பா!
வெண்ணையாய் வழுக்கிச் செல்லும் இப்பா! அப்பப்பா!!
வெண்பா என்கிற பெண்பால்...
அட நல்லா இருக்கே...
அழகிய ரசனை.
வெண்பாவை ரசிக்க நண்பனை அழைப்பது-- தங்கமணி ஊருக்குப் போயிட்டா -- மாதிரி -- ரசிக்க வைத்தது.
Post a Comment