Saturday, September 29, 2012

என் விகடனில் நான் !



  ஒரு வாரம் முன்பு .......
  ஆபிசிலிருந்து வீடு வந்து கொண்டிருந்த போது ....
  "சார்....ராம மூர்த்தி  ..."
   எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம் ...என் செல்லில் அடிக்கடி WRONG CALL வரும் ..ஒரு நாளைக்கு குறைஞ்சது நாலு தடவையாவது WRONG NUMBER     சொல்லாம நான் தூங்கினது கிடையாது.முன்ன பின்ன தெரியாத
நம்பரிலிருந்து எனக்கு ஒரு கால் ....
   ஒருக்கால் வேற ஏதாவது  ராங் ராமமூர்த்தியோ ?
  " ஆமாம் ..நீங்க ?"
  " சார் ...நான் ஆனந்த விகடனிலிருந்து பேசுகிறேன் ..நீங்க என் விகடனுக்கு
அப்ளை பண்ணி இருக்கீங்க .. அதுல உங்க 'பிலாக்'கை  போடப் போறோம் ..
உங்க போட்டோவை என்னோட  email ID க்கு நாளைக்குள்ள அனுப்புங்க சார் "
    ஒரு நொடி ஆகாயத்தில் பறந்தேன் நான் ...
    நானா.... என் பிளாக் ... என் விகடனிலா .... 
   இப்போது கொஞ்ச நாட்களாக முற்றிலும் புதிதாய் வந்த விகடனில் அந்த
பழைய என் விகடன் காணாமல் போக .. அதை நெட்டில் தான் பார்க்க முடியும் என்பதை நண்பன் சொல்ல...
   அன்று சாயந்திரமே எனக்கு விகடனிலிருந்து போன் !
   என்ன ஒரு ஆச்சர்யம் ?
   ஒரு வாரத்தில் பப்ளிஷ் ஆகும் என்று மனதிலிருந்து ஒரு குரல் !
  அந்த ஏழு நாட்கள் .........
   பத்து மாத கர்ப்பிணி போல் பதைப்புடன் காத்திருந்தேன்
   இதோ ..என் பிலாக் பற்றிய அறிமுகம் ..........பாரம்பர்யமான
  ஆனந்த விகடனிலிருந்து.....
  அந்த லிங்க் இதோ .............
   http://en.vikatan.com/article.php?aid=24367&sid=686&mid=33
   ......
   விகடனுக்கு நன்றி !
   என் விகடன் 
  இனி
  'என்' விகடன்  !!!
   .
   

8 comments:

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.
முகம் தெரியுற மாதிரி ஒரு photo அனுப்பியிருக்கக்கூடாதோ?

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

வாழ்த்துகள் சார்.

வெங்கட் நாகராஜ் said...

என் விகடனில் நீங்கள்....

வாழ்த்துகள் ஆர்.ஆர்.ஆர்....

தொடரட்டும் உங்கள் வெற்றி!

Rekha raghavan said...

தூள் கிளப்பறீங்க.வாழ்த்துகள் சார்!

ரேகா ராகவன்.

CS. Mohan Kumar said...

மிக மகிழ்ச்சி Sir. வாழ்த்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழத்துகள், நண்பரே!

அன்புடன்
கோபு

ஜீவி said...

............... பொன் செய்யும் மருந்து தான். உங்கள் மனமேன்மைக்கு இன்னும் பல வாய்ப்புகள் கிட்டட்டும். வாழ்த்துக்கள் ஆர்.ஆர்.ஆர்.!