Friday, July 20, 2012

ஜட்ஜ்மெண்ட் டே !!


ஜட்ஜ்மெண்ட்  டே !
பூஉலகில் ஜனத் தொகை பெருத்து விட்டது !
சனி பகவானால் எல்லாரையும் 'பிடிக்க' முடியவில்லை. அதனால்  வேலைப் பளு தாங்காமல் அவர் விஆர் எஸ் கொடுத்து விட்டு ஓடி விட
அந்த பொறுப்பும்  எமதர்மன் தலையில் விழுந்தது !
அவர் என்ன செய்வார் பாவம் ! என்ன தான்   எமலோகத்தில் ERP இருந்தாலும்,
அவரும்,சித்ரகுப்தனும் அவருடன் கூட ஏழெட்டு எக்ஸிக்யூட்டிவ் ட்ரைனிக்களும் 
சிரமப் பட்டுக் கொண்டு இருந்தார்கள் .
மாதம் ஒரு நாள் அந்த  ஜட்ஜ்மெண்ட்  டே வரும்!
அன்று மட்டும் பாக்கி வேலைகளை எல்லாம் 'அவுட்சோர்ஸ்' செய்து விட்டு
எமதர்மனும்,சித்திரகுப்தனும் அதனை அட்டெண்ட்  செய்வார்கள்.
அந்த மாதிரியான ஒரு சுபயோக சுபதினத்தில் ..........
சித்ரகுப்தன்  : சார் ..இந்த ஆள்  மாதம் ஒரு தடவை கட்சி தாவிக் கொண்டிருந்தான் .
எமதர்மன்  : இவனை ஒரு ஆறு மாசம் குரங்காக 'டிப்ரம்மோட்' பண்ணுங்க !
 சி.கு : சார் ..இவன் பூமியில் கலப்படம் செய்து கொண்டு இருந்தான் ..
 எ.ம.  : இவனை திரும்பவும் அங்கே அனுப்பவும் ..நம்ம ஊரை இவன் கெடுத்து விடுவான் ..
சி.கு.: இவன் பூமியில் கோள் மூட்டிக் கொண்டு இருந்தான் .
எ.ம. : இயற்கைக் கோளா ? செயற்கைக் கோளா ?
சி.கு. : சுபாவத்தில் அது அவன் குணம் கிடையாது. நண்பர்களைப்  பார்த்து கற்றுக் கொண்டான் .  செயற்கைக் கோள் தான் !
எ.ம. : அப்ப  ஒரு ஆறு வருஷம் ஏதாவது சாட்டிலைட்ல அந்தரத்தில தொங்க விடு !
சி.கு.: எமதர்மரே இவன் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று எல்லா இடமும்  வம்பு பேசிக் கொண்டு இருந்தான்.
எ.ம. :  யார் அங்கே? இவனிடம் ஒரு லேப் டாப் கொடு..அதில் பேஸ் புக் லோட் செய்து
விடுங்கள்.
அந்த ஆள் : எனக்கு எத்தனை வருஷம் எசமான்?
எ.ம. : உனக்கு மட்டும்   ஒரு மிலியன் வருஷம் தண்டனை !
            இவனுக்கு மட்டுமல்ல.. இவனைப் போல ஒரு முப்பத்து முக்கோடி நரன்களும் இதைத் தான் பூமியில் செய்கிறார்கள் ..அவர்கள் அத்தனை பேர்களுக்கும்
  இது தான் தண்டனை !
     ஹஹ்ஹா 
    பூமியில் உள்ள அத்தனை மனிதர்களும் பேஸ் புக் கட்டிக் கொண்டு அழும் ரகசியம் இது தான் !
       ( எமதர்மன் செல்ல, அவனைத் தொடர்ந்து சித்ரகுப்தன், மற்றும் அவனு டன் கூட ஏழெட்டு எக்ஸிக்யூட்டிவ் ட்ரைனிக்களும்  செல்லவே    சபை கலைகிறது )

8 comments:

ரிஷபன் said...

இவனைப் போல ஒரு முப்பத்து முக்கோடி நரன்களும் இதைத் தான் பூமியில் செய்கிறார்கள் ..அவர்கள் அத்தனை பேர்களுக்கும்
இது தான் தண்டனை !


Ha haa..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு நகைச்சுவை விருந்து.
பாராட்டுக்கள்.

VRS, OUTSOURCING, ERP, SATELLITE, FACEBOOK, EXECUTIVES, TRAINEES என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் கொண்டு வந்து நிறுத்தி, என்னையும் எங்கேயோ அழைத்துக்கொண்டு சென்று விட்டீர்களே ஸ்வாமீ!

ஹா ஹா ஹா ஹா!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா...ஹா... நல்ல பகிர்வு ... நல்ல தண்டனை...

ஸ்ரீராம். said...

:)))))))))

நிலாமகள் said...

இயற்கைக் கோளா ? செயற்கைக் கோளா ?
:))))))))))

நீங்க‌ளும் ஃபேஸ் புக் மாயையில் சிக்காத‌வ‌ரா?!

dlakshmibaskaran said...

ரொம்ப பிடித்த தண்டனை,தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

dhanalakshmibaskaran,
trichy

dlakshmibaskaran said...

பிடித்த தண்டனை தான். தலைவணங்கி ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள் பூவுலக மனிதர்கள்..interesting imagination..!
dhanalakshmi
trichy

வெங்கட் நாகராஜ் said...

என்னே உமது கற்பனை! :)