ஹே அக்னி............
வத்திப் பெட்டிக்குள்
உறங்கிக் கொண்டிருக்கையில்,
எத்தனை அழகாய் இருந்தாய் ?
விழித்து எழுந்தவுடன்.....
ரயில் பெட்டியை
எரிக்கும் அளவிற்கு
ஏனிந்த கொடூரம்?
யாகம் வளர்க்கும்
வேதியர் உன் துதி
பாடுகையில்
உரக்க உச்சரிப்பார்கள் ..
காரணம், நீ செவிடாம் ..
செவிடா நீ ?
குஞ்சென்றும், மூப்பென்றும்
பாராமல்,
அத்தனை பேரையும்
கொளுத்திய நீ
குருடல்லவா !
பஞ்ச பூதங்களில் ,
நீருக்கு இருக்கும்
பஞ்சம் ...
நெருப்பிற்கில்லையா ?
வெறுப்பாய் தான்
இருக்கிறது ....
உன்னை
நினைத்தால்....!!
5 comments:
என் மனதை மிகவும் கலங்கச் செய்த நிகழ்ச்சி. நினைக்க நினைக்க மிகவும் வருத்தமாக உள்ளது. ;(((((
உயிரோடு தீயில் கருகிப்போவது என்பது எவ்வளவு ஒரு கொடுமை!
நெஞ்சு பொறுக்குதில்லையே!
செவிடென்று உரக்கச் சொன்னோம்... குருடோ என்று குமுறித் தீர்த்தோம்... ஆவதும் அழிவதும் அக்னியால் எனும் ஆணவமோ... நன்றாக விளாசியிருக்கிறீர்கள் கவிதையால்!
வேதனை தரும் சம்பவம்.....
மனதைக் கலங்கடித்த நிகழ்வு....
எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இத்தனை பெரிய விபத்து!
எப்போது தான் திருந்துவார்கள் இவர்கள்.
மனதை மிகவும் வேதனைப்படுத்திய நிகழ்வை, அதன் வலியை உங்கள் கவிதையும் பிரதிபலிக்கிறது!
Post a Comment