Saturday, June 30, 2012

வாழை அடி வாழை!


” என்னப்பா..எப்படி இருக்கே?”
“செளகர்யமா இருக்கேன்.. நீ?”
“ நானும் தான்..அது சரி பாரேன்..இன்னும் அஞ்சு வருஷம் தான் இருக்கு சர்வீஸ்..உனக்கு?”
“எனக்கும் தான்?..  நேற்று தான் வேலைக்கு சேர்ந்தார் போல இருக்கு அதுக்குள்ள கிடுகிடுன்னு ஓடிப் போச்சு காலம்..”
“ அந்த கால ஜெய்சங்கர் படத்தில விறுவிறுன்னு ஓடிப் போகுமே காலண்டர் தேதி..அது மாதிரில்ல இருக்கு..
“ஆமாம்ப்பா ...ஆமா...அது சரி..உன் பையன் என்ன பண்றான்?”
“அவன் B.E. படிச்சான்..அப்படியே எங்க கம்பெனியில ஜாயின் பண்ணிட்டான்
  இஞ்சினீயரா..”
“அப்ப  நீ ரிடய்ர்ட் ஆனாலும் அந்த B3/303 வீட்டை உனக்கு அப்புறம் உன் பையனுக்குத் தான்னு சொல்லு..”
“ அட உனக்கு இன்னும் அதெல்லாம் ஞாபகம் இருக்கா?”
“ இல்லாமலா .. நான் அப்ப வேலையில்லாம இருந்தேன்..  நான் தான் வந்து  ட்யூப் லைட் ..ஃபேன்லாம் ஃபிட் பண்ணிக் கொடுத்தேன்..”
அது சரி..உன் பையன் என்ன பண்றான்?”
“ அவன் ஒரு பெரிய MNC ல டில்லில இருக்கான்..இப்பத் தான் கல்யாணம் ஆச்சு..அவன் WIFE இங்க விஜய வாடால பேங்க்ல வேல ..’
“ட்ரான்ஸ்ஃபர்க்கு ட்ரை பண்ண வேண்டியது தானே?”
“இரண்டு பேருமே ட்ரை பண்ணிக்கிட்டுத் தான் இருக்காங்க..உனக்கு தெரியுமா.. எனக்குக் கல்யாணம் ஆன போது எனக்கு நாகர்கோவிலில் வேலை..என் மிஸஸ்க்கு சென்னையில வேலை.இரண்டு பேருமே ரொம்ப தீவிரமா ட்ரான்ஸ்பருக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தோம்..இப்ப மாதிரி அப்ப செல்லெல்லாம் ஏது.. நான் என் ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை எடுத்துக் கிட்டு சென்னைக்கு ரயில் ஏறினேன்..அவங்களுக்கும் ட்ரான்ஸ்பர் ஆச்சு..அவங்களும் அந்த ட்ரான்ஸ்பர் ஆர்டரை எடுத்துக்கிட்டு சந்தோஷமா ரயில்ல வராங்க..இரண்டு பேருமே ஒருத்தொருக்குஒருத்தர் ஆர்டர் வந்த விஷயத்தை சொல்லாம போய்க்கிட்டிருக்கோம்....”
“அப்புறம்?”
“அப்புறமென்ன..விழுப்புரம் ஜங்ஷன்ல ரயில் நின்னது..அவங்க எதிர்த்த ட்ரெயின்ல..”
“ சினிமா மாதிரி இருக்கே.”
“சினிமா மாதிரி தான்..அவங்க சந்தோஷமா நாகர்கோவில்லுக்கு ட்ரான்ஸ்ப்ர் ஆன அவங்க ஆர்டரைக் காண்பிக்க.. நான் பெருமையா எனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆன ஆர்டரைக் காண்பித்தேன்..”
“போச்சுடா..”
“அது போல இவங்க இரண்டு பேரும்  நாக்பூர் ஜங்ஷன்ல இறங்கி அவங்கவங்க ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரைக் காண்பிப்பாங்களோ என்னவோ..”
          

11 comments:

ரிஷபன் said...

அட பாவமே !

எல் கே said...

ஹஹஹா

கௌதமன் said...

இனிமே இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தம்பதியினர் இருவருமே
விழுப்புரம் அல்லது நாக்பூருக்குத்தான் மாற்றல் கோர வேண்டும்!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

அதெல்லாம் சரி...யாரு எங்கே ட்ரான்ஸ்ஃபர் கேக்கறதுன்னு மின்னாடியே பேசி வெச்சுக்காதுங்களோ அபிஷ்டுகள்!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா! அருமை.

விசு படம் ஒன்றில் இதே டயலாக் கேட்ட ஞாபகம் வந்தது.

இருவருமே வேலை பார்ப்பதால் இதுபோன்ற பல சங்கடங்கள் தான், இன்று .. பாவம்.

என்ன செய்வது?

பொருளாதாரப் பிரச்சனைகள், மற்ற எல்லா சுகங்களையும் பின்னுக்குத் தள்ளி, தான் மட்டும் முன்னனியில் நிற்கிறதே!

சுவையான பகிர்வு. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

வாழை அடி வாழை!

History Repeats !

ஸ்ரீராம். said...

:))))
தீபாவளிப் புருஷன், பொங்கல் மனைவி என்றே வாழ்க்கை ஓடி விடும்!

வெங்கட் நாகராஜ் said...

விசு படத்தில் வரும் ”பனுமாதி” கேரக்டர் தான் நினைவுக்கு வந்தது....

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

என்னுடைய கீழ்க்கண்ட பதிவுக்கு
தயவுசெய்து வருகை தாருங்கள்.

http://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html

தங்களுக்கான விருது ஒன்று காத்துள்ள்து.

அன்புடன்
vgk

VijiParthiban said...

உங்களது கதை இன்னும் உங்களுடைய பிள்ளையையும் தொடருதா சகோ ... அட பாவமே முன்பெல்லாம் எந்த வசதியும் இல்லை... இப்பதான் கைபேசி, இணையதளம் எல்லாம் இருக்கே கவலை வேண்டாம் ......

நிலாமகள் said...

ந‌ல்ல‌ க‌தைதான் போங்கோ!