செல் போன் கிணுகிணுத்தது.
“பரத் ஹியர்”
“பரத் .. நான் தான் ’சுநாதபோதினி’ஆசிரியர் பேசறேம்ப்பா..இங்க , ஒரு கும்பல் நம்ம ஆஃபீஸை லூட் அடிச்சுட்டு இருக்கு..எல்லாரும் உம்மேல காட்டமா இருக்காங்க..போன வாரம் நீ எழுதின ’ஸ்கூப்’ அவங்க தலைவரை அவமானப் படிச்சிச்சாம்..அதனால, உன்னைத் தேடி எந்நேரமும் அந்த கும்பல் வரலாம்.. நாங்க யாரும் ஒன் அட்ரஸ் தரல்ல..எப்படியாவது கண்டுபிடிச்சுண்டு அந்த கொலை வெறி கும்பல் வரும்..தப்பிச்சுக்கோ..”
“சார்..”
ஃபோன் துண்டிக்கப் பட்டது..”வைடா ஃபோனை” என்ற காட்டமான குரல் இங்கு துல்லியமாகக் கேட்டது..
“என்ன பரத்?”
“ஒண்ணுமில்ல..”
“இல்ல ஏதோ?”
“ஆமாம்ப்பா..போன வாரம் எழுதினேனே..அது அவங்க தலைவரை ரொம்ப கோபமாக்கிடிச்சாம்..அதனால, தொண்டர் படைங்க, பத்திரிகை ஆஃபீசை
பீஸ்...பீஸாக்கிட்டு என்னைத் தேடி வராங்க”
“ பரத்..போலீசுக்கு ஃபோன் பண்ணு”
“போலீஸ் என்ன பண்ணும்?”
“இல்லாட்டி வா..ஓடிப் போயிடலாம்..அந்த கும்பல் வரதுக்குள்ள..”
“சேச்சே.ஓடறதா..எழுதறவன் ஓட ஆரம்பிச்சா, ஒவ்வொரு வார்த்தைக்குமில்ல ஓடணும்..”
“ பரத் பி சீரியஸ்..வரது ஒரு மாப் ..அது என்ன வேணா செய்யும்..உனக்குத் தான் தெரியுமே...’மாப் சைக்காலஜி’ என்னன்னு!”
அதற்குள் அந்த கும்பல் வந்தே விட்டது..
வாசலில் இருந்த கூர்க்காவை எட்டி உதைத்து...’எவண்டா அவன் பரத்..எங்க தலைவரைப் பற்றி எழுதினவன்..’ என்று ..ஒவ்வொருத்தன் கையிலும்..சவுக்கு கட்டை..அரிவாள் ..சைக்கிள் செயின் என்று ஆயுதங்கள்...
“டேய் இவன் தாண்டா..’
“விடாதே..பிடி..”
“இந்த கை தானே தலைவரைத் திட்டி எளுதினது..வெட்டுங்கடா..அதை..”
ஆத்திரம் தீருமட்டும் துவைத்து விட்டு ஆங்காரத்துடன் சென்றது அந்த காலிக் கும்பல்....
“ பரத் ..சொன்னேனே ..கேட்டியா..இப்படி அநியாயமாய் .......”
பேச முடியாமல் தவித்தார் அந்த நாளிதழ் ஆசிரியர்..
“ நான் கூட சொன்னேன் சார்..கேட்கலை..” விசும்பினாள், வினிதா..
” இப்ப எழுத முடியாம போச்சே. வலதுகையை இப்படி வெட்டிட்டானே..”
அந்த உயிர் போகும் வலியிலும் பரத் சைகை செய்தான்..ஆஸ்பத்திரி நர்ஸ் பேப்பர்..பேனா கொண்டு வந்தாள்...
உயிர் போகும் வலியையும் மீறிய முறுவலுடன் முகம்!
கை எழுதியது.......
“ I AM A LEFT HANDER"

8 comments:
கையை வெட்டிட்டாங்களேன்னு வருத்தப்படறதா.. ட்விஸ்ட்டைப் பார்த்து சிரிக்கிறதா..
அடப்பாவிபரத்.....! :))
வலக்கை போனாலும் என்ன ...
இடக்கை உள்ளதே என்ற
நம்பிக்’கை’ உள்ள மனிதர்;
தங்களைப்போன்ற தலை சிறந்த
எழுத்தாளர் அல்லவா! ;)
நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
நல்லதொரு சிறுகதை!
எதிர்பாரா முடிவு..... :))
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?!
மனோதிடமான கதை. இப்போது இந்த செயற்பாடுகள் அரிதாகிவிட்டன சார்.
எதிர்பாரா முடிவு! அருமை.
Post a Comment