16.06.2012 இரவு பத்து மணி சுமாருக்கு ..................
"எங்கேப்பா ஜாலியா புள்ள குட்டிங்களோட போயிட்டு வரே?.....சினிமா?”
“இல்ல” “சர்க்கஸ்?”
“ஊஹூம்”
“எக்ஸிபிஷன்?”
“அதுவும் இல்ல”
”சொந்தக் காரங்க கல்யாணமா?”
“கல்யாணம் மாதிரி தான்..ஆனா, மாப்பிள்ளை அழைப்பு, நாதஸ்வரம் ,ரிஷப்ஷன், கெட்டி மேளம், முகூர்த்தப் பை..என்று எதுவும் இல்லாத கல்யாணம்..”
“என்னப்பா..புதிர் போடறே?”
“ஒரு ’கெட்-டு-கெதர்’ பா.. நம்ம சூப்பர் சிங்கர்ஸ் மாளவிகா,பூஜா,சந்தோஷ் அப்புறம் ‘அசத்தப் போவது யாரு’ மதுரை முத்து என்று எல்லாரையும் ஒரே மேடையில் பார்த்தோம்”
“எங்கேப்பா.. நான் இவங்கள டிவி பெட்டியில பார்த்ததோட சரி”
“தனுஷ் ஜுவல்லர்ஸ் ஒரு மீட் வைச்சிருந்தாங்கப்பா..அதுக்கு முன்னால, போன்..ஒரு மீட் வைச்சிருக்கோம்..இன்விடேஷன் அனுப்பறோம்..அவசியம் கலந்துக்கணும்’னு அன்பு கட்டளை.. அடுத்த வாரத்தில இன்விடேஷன் கூரியர்ல வந்தது..
அது வந்த ரெண்டாவது நாள், ‘ சார், இன்விடேஷன் வந்ததா....என்று ஒரு கேள்வி கேட்டு,” அவசியம் கலந்துக்கணும்னு” ஒரு அழைப்பு..கல்யாணத்துக்கு கூப்பிட்டாக் கூட ”பத்திரிகை அனுப்பறேன்..கல்யாணத்துக்கு வா என்று ஒரு தடவை கூப்பிடுவதோடு சரி..”என்னடா, பத்திரிகை அனுப்பிச்சோமே போய் சேர்ந்ததா” என்று கவலைப் படுவது இல்லை..”
“அது தான் பிஸினெஸ் டேக்டிக்ஸ்”
“இருக்கட்டுமே..யார் இப்படி செய்யறாங்க..? எத்தனை நகைக்கடை இருக்கு நம்மூரில..இவங்கள மாதிரி வாய் நிறைய வாங்க செளக்யமான்னு யார்அன்யோன்யமா கூப்பிடறாங்க?”
“அதுவும் சரிதான்...முன்னெல்லாம் மளிகைக் கடை நம்ம தெருக்கோடில இருக்கும்..அந்த முதலாளி..” என்ன சார்....பொண்ணு வந்திருக்கா மாதிரி இருக்கு..ஏதாவது விசேஷமா என்று கேட்பாங்க.. நாமளும் குட் நியூஸ்னு சொல்லவும், சந்தோஷம்னு சொல்லி மளிகை சாமானோட கொஞ்சம் கல்கண்டு, சீனி மிட்டாய் எல்லாம் ஃப்ரீயா..அதே சமயம் சந்தோஷமாவும் தருவார்..
இப்ப பெரிசா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் வந்துடுச்சு..ஆனா, அந்த கடைக்காரருக்கும் நமக்குமுள்ள அந்த பாசப் பிணைப்பு போயிடுச்சு”
” கரெக்டா சொன்னே..இவங்க இந்த விழாவை ரொம்ப சூப்பரா அமைச்சிருந்தாங்க..ஆரம்பத்தில ஒரு பெண் பரத நாட்டியம்..முடிவில ..இந்த பெண் நம் வாடிக்கையாளரின் பெண் என்று ஒரு சிறிய அறிமுகம்..அப்ப, அந்த அப்பா, அம்மா முகத்தை நீ பார்ககணுமே”
“ அட...”
“ அது மட்டுமா? சென்னையிலிருந்து மானாட, மயிலாட,அசத்தப் போவது யாரு போல நிறைய எண்டர்டையின்மெண்ட்..”
“அப்படியா..”
“ அது மட்டுமில்லப்பா..குட்டி..குட்டிக் குழந்தைங்க எல்லாம் மேடையில டான்ஸ் ஆட வைச்சாங்க..”
“சூப்பர் தான் போ”
“ அது மட்டுமில்ல..இப்ப காலம் இருக்கிற இருப்பில..ஏதாவது கல்யாணத்துக்குப் போனாக் கூட, கொஞ்சம் அசந்தா விருந்தை கோட்டை விட்டுடுவோம்..”
“ நல்லா சொன்னே..போ!போன வாரம் ஒரு ஃப்ரெண்ட் பையன் கல்யாணத்துக்குப் போனேன்.. நிறைய ப்ரெண்ட்ஸ்களைப் பார்த்த சந்தோஷத்திலே, அப்புறம் சாப்பிட்டுக்கலாம்னு விட்டுட்டேன்..பசிக்கும் போது போய்ப் பார்த்தா, எல்லாமே காலி”
” அதான் பந்திக்கு முந்து என்று சொல்றாங்க..இங்க அந்த பயம் இல்ல..எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு தான் சாப்பிடவே போனோம்.. எல்லாம் இருந்தது..அந்த கடையில வேலைப் பார்த்தவங்கள் எல்லாரும் ஃபேம்லியோட வந்து “ என்ன சார் வேணும்னு அன்போட கவனிச்சிட்டாங்க..”
“ எல்லாத்தையும் விட ஹைலைட் என்ன தெரியுமா?”
“என்ன?”
“ அவங்க கஸ்டமர்ஸை கஸ்டமர்ஸ்னு சொல்லவேயில்ல..”
“ பின்ன என்ன சொல்றாங்க?”
“ ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்றாங்க..அப்படி சொல்றதுல ஒரு அன்யோன்யம்..”
” அது சரி..கையில என்ன ஒரு படம் வைச்சிருக்கியே..ஒரு பெண் உடம்பு நிறைய நகைகளோட.”
“ ஆமாம்..அந்த பெண்ணுக்கு கஷ்டமாம்..ஏதாவது ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டது?”
“ நீ என்ன ஹெல்ப் பண்ணப் போற?”
“ அந்த இடுப்புல இருக்கிற ஒட்டியாணத்தையும், கைவளையைகளையும் கழட்டிடப் போறேன்... ஒரு பத்து, பதினைந்து கிலோ குறைஞ்சுடும் இல்லையா.?”
“ அது எப்படி ஹெல்ப் ஆகும்?”
“ அவங்க ஓவர் வைட்னு கஷ்டப் படறாங்க!
ஏதோ நம்மாலான உதவி” .
8 comments:
உங்க பதிவும் ரொம்பவே வெயிட் ஜாஸ்தி... - ஒரே பாராவா இருக்கே :))
புன்னகை அழகு.... பொன் நகை அதைவிட அழகு....
//ஆமாம்..அந்த பெண்ணுக்கு கஷ்டமாம்..ஏதாவது ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டது?” //
அது நிஜமாலுமே பெண்ணா ஸ்வாமி.
ஏதோ பொம்மையோன்னு பார்த்தேன். ஜுவல் ஸ்டாண்டோன்னு கூட நினைத்தேன்.
அது என்ன எல்லா இடத்தையும் விட்டுட்டு நேராக இடுப்புக்கே [அதாவது ஒட்டியாணத்துக்கே] போய்ட்டீங்க?
அது தான் மிகப்பெரிசோ?
அதாவது மிகப்பெரிய
நகையோன்னு கேட்டேன்.
மேலும் உதவி வேண்டும்னா ஒரு போன் போட்டுக் கூப்பிடுங்கோ.
படத்தில் இருக்கும் பெண்ணின் ஏழ்மை நிலை கண்ணில் நீரை வரவழைத்தது. பாவம்! கையிலும் முகத்திலும் இன்னும் எவ்வளவு இடம் தெரிகிறது.... ப்ளீஸ் பத்தி பிரித்துப் போடவும். சப்பாத்திக்கு மாவு பிசைந்தது போல ஒரே குவியலாய் இருக்கிறது! :))
உதவும் மனப்பான்மை அதிகம் தான் !
பதிவால் தனுஷ் ஜ்வல்லர்ஸ்க்கு ஏதோ உங்களாலான விளம்பரமும் ஆச்சு; இல்லையா...
பதிவு பள பள என்று மின்னியது..
:-))))
அது சரி..கையில என்ன ஒரு படம் வைச்சிருக்கியே..ஒரு பெண் உடம்பு நிறைய நகைகளோட.”
“ ஆமாம்..அந்த பெண்ணுக்கு கஷ்டமாம்..ஏதாவது ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டது?”
“ நீ என்ன ஹெல்ப் பண்ணப் போற?”
“ அந்த இடுப்புல இருக்கிற ஒட்டியாணத்தையும், கைவளையைகளையும் கழட்டிடப் போறேன்... ஒரு பத்து, பதினைந்து கிலோ குறைஞ்சுடும் இல்லையா.?”
“ அது எப்படி ஹெல்ப் ஆகும்?”
“ அவங்க ஓவர் வைட்னு கஷ்டப் படறாங்க!
ஏதோ நம்மாலான உதவி”
ஆசை அதிகமோ அதிகம் !!!!!!!!!!
ஆமாம் இந்த படம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!!!!!!!!!!!!!
அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட உங்களின் அதிர்ஷ்டம் அருமை!!!!!!!!!
Post a Comment