கஃபூர் ஹார்ட்வேர்ஸ் முதலாளி அப்துல் கஃபூரைப் பார்க்க அவர் நண்பர் சாமினாதன் வந்திருந்தார்.
குசுகுசுவென என்னத் தான் பேசினார்களோ..அடுத்த அரைமணியில் அவர் கிளம்பினார், முகத்தில் ஏகப்பட்ட
பரபரப்புடன்!
பாய் ’கொஞ்ச நேரம் இருப்பா’ என்று சொல்ல,சொல்ல அந்த சாமினாதன் கிளம்பி விட்டார்.
‘என்னப்பா யாக்கோப்பு, இப்ப வந்துட்டுப் போனவரைத் தெரியுமா?’ என்றார் கஃபூர் முதலாளி.
‘நல்லாவே தெரியும், பாய்’
’ஆறுமுகம் உனக்கு?’
‘தெரியாது’
‘அப்ப சரி..இன்னிக்கி நீ பேங்க்குக்கு போற..போய் ஒரு லட்ச ரூபாய் ட்ரா பண்ணிட்டு, அதை அந்த
சாமினாதன் வூட்ல போய் கொடுத்துட்டு வா’
‘சரி’
’இந்தா இது தான் அவர் வூட்டு அட்ரசு’
எனக்கு புசுபுசுவெனக் கோ[பம் வந்தது..இருக்காதா பின்னே...இந்த கடையில இருபது வருஷமா நான்
வேலை பார்க்கிறேன்...டெய்லி பேங்க்குக்கு போய்ட்டு வரதும் நான் தான்..இன்னிக்கு ஒரு நாளும் இல்லாத
திருநாளா, ஆறுமுகத்தை பாய் பேங்குக்கு
அனுப்புறாரு...புத்தி ஏதாவது பிசகிடுச்சா..என்னை விட நேற்று
வந்த ஆறுமுகம் உசத்தியாய்ப் போய்ட்டானோ....இருக்கட்டும்......
தாங்க முடியவில்லை..மதியம் கேட்டே விட்டேன்.
’யாக்கோப்பு பாய்.. நம்ம சாமினாதன் வீடு ஏலத்துக்குப் போவுதாம்..லட்ச ரூபாய் இருந்தா சமாளிச்சுடலாமாம்..
கடன் கேட்கத் தான் வந்திருக்கார் மனுசன்..செக்கா கொடுத்தா பேங்குக்குப் போய் வாங்க டயம் இல்ல..அதுக்குள்ள
ஜப்தி பண்ண ஆளுங்க வந்துடுவாங்க.. நான் பேங்க் போய் பணம் எடுத்து, அவர் வீட்ல கொடுத்தா, நாலு பேர்
முன்னால சங்கடப் படுவாரு.. நீயும் என்னப் போலத் தான்..அதனாலத் தான் அவருக்கு முன்ன,பின்ன தெரியாத
ஆறுமுகத்தை அனுப்பினேன்..’
சொல்ல..சொல்ல..என் மனத்துள் ரொம்ப உயரத்துக்கு போய் விட்டார் முதலாளி.
7 comments:
வேற தலைப்பு வச்சிருக்கலாமோ?
நல்ல கதை.
எதார்த்தமான மனிதாபிமானம் மிளிரும் கதை சார். நடை விறுவிறுவென்று அந்த வீட்டை ஏலம் விடுவதற்குள் காப்பாற்றிவிடவேண்டும் எனகிற வேகத்தைப்போல இருந்தது. அருமையான கதை சார்.
நல்ல கதை....சொன்ன விதம் சூப்பர்!
மூவார்! நல்ல கதை! மனித நேயம் இன்னமும் ஒட்டிக்கிட்டு தான் இருக்குங்க உலகத்துல!
இன்னுமிருக்கிறார்கள் இப்படியானவர்களென அடையாளம் காட்டியாச்சு. மழை வந்தா தேவலை.
"வலதுகை கொடுப்பதை, இடதுகை அறியாது" என்ற சொலவாடையை கதையாய். நிகழவாகக் காட்சி படுத்திவிட்டீர்கள், அதுவும் இருவரின் மனநிலையில் இருந்து. அருமை.
நல்ல கதை ! முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். இனி தொடர்வேன். நன்றி !
Post a Comment