Saturday, June 2, 2012

விளிம்பு நிலை மனிதன்!






படிப்பு முடிந்து வரும்போது,
வானத்தை உரச வேண்டும்
என்று வெறியுடன்




வந்தவர்கள்
ஒன்றும் நடக்காமல்,
முப்பது வருடம்




முழுசாய் தொலைத்து ,
அவரவர் வீட்டு




ஜன்னல் கம்பிகளில்
கன்னத்தை தேய்த்துக் கொண்டு



நிற்கின்றோம்,
வாழ்வின் விளிம்பில்!


*************************


திருவாசகம் புஸ்தகம்


புரட்டினால்


பிரச்னை தீரும்


ஆம்....


வேலை தேடி


சென்னை செல்லுமுன்


மாமா கொடுத்தார் ஒரு


திருவாசகம் புஸ்தகம் !


கையில் உள்ள


இருப்பு தீர்ந்த நிலையில்


எடைக்குப் போட அந்த


புஸ்தகத்தை எடுத்தேன்!

ஒவ்வொரு ஐம்பது 
பக்கத்தில் இருந்த  
நூறு ருபாய் நோட்டுகள் 
என்னை காப்பாற்றின !/


படித்துப் பார்


பிரச்னை தீரும் !


மாமா நினைவு வர


பிரித்தேன்,


ஒவ்வொரு ஐம்பது


பக்கத்தில்


நுறு ருபாய் நோட்டுகள்


என்னை காப்பாற்றின !

13 comments:

ஸ்ரீராம். said...

திருவாசகத்தை எடை போட யாரால் முடியும்?! :))

ரிஷபன் said...

ஒன்றும் நடக்காமல்,
முப்பது வருடம்
முழுசாய் தொலைத்து


விரக்தியின் விளிம்பில் வந்து விழுந்த வரிகளா.. ??

vasan said...

காத‌லும், ஏக‌ந்த‌மும்,ஏக்க‌மும், துக்க‌மும்
க‌டைசியில் வ‌லையில் க‌சிகிற‌து க‌விதையாய்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

'விளிம்பு நிலை மனிதர்’க்கு என் சொல்ல ? வாழ நினைத்தால் வாழலாம்...வழியா இல்லை பூமியில்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஸ்ரீராம். said...
திருவாசகத்தை எடை போட யாரால் முடியும்?! :))

WELL SAID SRIRAM !

//ஒவ்வொரு ஐம்பது
பக்கத்தில்
நூறு ருபாய் நோட்டுகள்
என்னை காப்பாற்றின !/

நோட்டை வைத்துத்தந்த மாமா வாழ்க!

இவ்வளவு நாளாக நோட்டை நோட்டமிடாமல் கோட்டைவிட்டு விட்டீரே ஸ்வாமீ!

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வின் விளிம்பில்! தொக்கி நிற்கும் விளிம்பு நிலை மனிதன்!"

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதைகள்....

கவிதையில் ஒரு சோகம்.. ஏனோ?

அப்பாதுரை said...

முதல் கவிதை அபாரம். இரண்டாவது புரியவில்லை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வருகைக்கு வணக்கம்
ஸ்ரீராம், ரிஷபன்,வாஸன்,எல்லென்,
வைகோ சார்,இராஜராஜேஸ்வரி, & வெங்கட்.
அப்பாதுரை சார்....
சரி செய்து விட்டேன்..இப்போது பார்க்கவும்..

கே. பி. ஜனா... said...

//முழுசாய் தொலைத்து ,
அவரவர் வீட்டு
ஜன்னல் கம்பிகளில்
கன்னத்தை தேய்த்துக் கொண்டு//
பாவம் தான்! வரிகள் இயல்பாக...

ஸ்ரீராம். said...

//ஒவ்வொரு ஐம்பது
பக்கத்தில் இருந்த
நூறு ருபாய் நோட்டுகள்
என்னை காப்பாற்றின !///

நான் முதலில் பார்த்த போது இந்த வரிகள் இல்லை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஜனாவின் வருகைக்கு வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆமாம்..ஸ்ரீராம்....முதலிலேயே போட்டது தான்..என்ன ப்ராப்ளமோ வரவில்லை..மறுபடியும் annex செய்தேன்!
மிக்க நன்றி தங்கள் OBSERVATIONக்கு!