Saturday, May 5, 2012

முதல் பாடல் இது !

பட்டத்தை பறக்க விட்டு
பரதேசி போல் முடி வளர்த்து
பக்கவாட்டில் கிருதாவை
பாங்குடனே வளர்த்து விட்டு
இஞ்சி தின்ற குரங்கு போல்
எப்போதும் முகம் தொங்கி
நண்பர்கள் புடை சூழ
கடை வீதி நடந்து சென்றால்,
ஜவுளிக்கடை பொம்மை கூட
சட்டென்று திரும்பிக் கொள்ளும்!


( இது ஒரு மீள் பதிவு )

7 comments:

ரிஷபன் said...

ஜவுளிக்கடை பொம்மை கூட
சட்டென்று திரும்பிக் கொள்ளும் ...

முடித்த விதம் நல்ல நகைச்சுவை..

இராஜராஜேஸ்வரி said...

முதல் பாடல் இது !
முத்தான பாடல் இது !

மனோ சாமிநாதன் said...

முதல் பாடலில்கூட நகைச்சுவை மிளிர்கிறது!!

கே. பி. ஜனா... said...

கடைசி வரி டாப்!

Unknown said...

பாடல் சூப்பர்

RAMA RAVI (RAMVI) said...

கடைசி வரிகள் மிக அருமை. உங்க முதல் பாடலுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.

வெங்கட் நாகராஜ் said...

ஜவுளிக்கடை பொம்மை கூட
சட்டென்று திரும்பிக்கொள்ளும்....

நகைச்சுவையோடு முடிந்த கவிதை அருமை....