Sunday, April 22, 2012

அடுத்த ஜன்மத்தில் .......


”தமிழ் தெரியுமா?” என்ற என் கேள்விக்கு, “ஐ நொ டமிள்” என்று சொன்னவர்களைத் தான் எனக்குத் தெரியும்.. ஆனால், நீயோ ”நான் தமிழ் பெண் தான் சார்” என்று சொல்லி என்னை வியக்க வைத்தாய்... ” நீங்க செங்கிப் பட்டியிலிருந்தா வர்ரீங்க, நான் பார்த்தேன்.. பாவம் சார் நீங்க... எவ்ளோவ் தூரம்?” என்று வலிய அறிமுகம் ஆனாய்.. என் கவிதையை ரசிக்க வந்து என்னுள் சுனாமியாய் சுற்றிக் கொண்டாய் பாழும் மனம் தடுக்கிறதே.. கோட்,சூட் போட்டுக் கொண்டு, கலர் கலராய் பஞ்சு மிட்டாய், கம்மர் கட், இலந்த வடை எல்லாம் சாப்பிட முடியுமா? உன் அணுக்கம் தேவை தான்.. என்ன செய்வது? அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால், உன் மடியில் குழந்தையாக வாவது!........

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

//கோட்,சூட் போட்டுக் கொண்டு, கலர் கலராய் பஞ்சு மிட்டாய், கம்மர் கட், இலந்த வடை எல்லாம் சாப்பிட முடியுமா?// நல்ல ஆசை.... :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் கவிதையை ரசிக்க வந்து என்னுள் சுனாமியாய் சுற்றிக் கொண்டாய் பாழும் மனம் தடுக்கிறதே.. //

யார் சார் அவங்க? அது தெரியாமல் என் தலை வெடித்து விடும் போல் உள்ளதே!
இன்னிக்கும் ராத்திரியும் தூக்கம் வராதே!

என்ன இப்படி மொட்டையாய் முடித்து விட்டீர்கள்.

//உன் அணுக்கம் தேவை தான்.. என்ன செய்வது? அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால், உன் மடியில் குழந்தையாக வாவது!.//

அடடா! என்னைப்போலவே ஓர் எண்ணம் உங்களுக்கும்; சபாஷ்!

ஸ்ரீராம். said...

ருசிகள் உண்மையாய் இருந்தால் உடைகளால் தடையில்லையே....!!!

கே. பி. ஜனா... said...

நல்ல விஷயம் தான்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//கோட்,சூட் போட்டுக் கொண்டு, கலர் கலராய் பஞ்சு மிட்டாய், கம்மர் கட், இலந்த வடை எல்லாம் சாப்பிட முடியுமா?//

முடியும். துணைக்கு வேணுமானால் நான் வர்றேன்.

ADHI VENKAT said...

கம்மர் கட், இலந்த வடை, பஞ்சு மிட்டாய்.....என்ன சார் இப்படி பழசயெல்லாம் ஞாபகப்படுத்தறீங்க. டெல்லியில் இதெல்லாம் கிடைக்குமா.....

தேன் மிட்டாய் மட்டும் ஏன் விட்டுட்டீங்க.....

அப்பாதுரை said...

what ? :)