
கந்த மணம் கமழ,காய் கனிகள் புடை சூழ,
விந்தைகள் செய்விக்க, வந்துதித்த மாமணியே,
வந்தனமென வாய் மணக்கக் கூவுகிறோம்,
நந்தனமே வருக, வருகவே..!
*
வந்த உறவும்,வருகின்ற புது உறவும், சொந்த
பந்தமெல்லாம் ஆல் போல தழைத்தோங்க,
எந்த நாளும் இன்று போல் இன்புற்றிருக்க,
நந்தனமே வருக, வருகவே..!
*
எந்தையும், யாயும் மகிழ்ந்துலாவிட, பிணி
கந்தையும், வறுமையும் வெகுண்டிங்கு ஓடிட,
மந்தை,மந்தையாய் வளத்தினை நல்கிடும்,
நந்தனமே வருக,வருகவே..!
*
முந்தை வருடம் முழுதாய்ச் சென்றிட,
வந்த குழப்பமும் பனி போல் மறைந்திட,,
சிந்தையை இறை பால் வைத்திட,,
நந்தனமே வருக, வருகவே..!
7 comments:
//கந்த மணம் கமழ,காய் கனிகள் புடை சூழ,
விந்தைகள் செய்விக்க, வந்துதித்த மாமணியே,
வந்தனமென வாய் மணக்கக் கூவுகிறோம்,
நந்தனமே வருக, வருகவே..!//
'நல்வரவாகுகவே' என்று நந்தனத்தை வரவேற்ற கவிதையின் சிறப்பு அழகு!
"நந்தனமே வருக..வருகவே..."
அருமையான வரவேற்பு கவிதை.
பாராட்டுக்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
சிந்தனை கவர்ந்தது நந்தன வாழ்த்துக் கவிதை.
Ungalukkum vaazhthukkal!
நந்தனத்திற்கு வந்தனம் சொல்லும் கவிதை அருமை....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நந்தன ஆண்டின் கவிதை அருமை சார்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
Post a Comment