நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Sunday, April 1, 2012
இறந்து போன இன்வெர்ட்டர்கள்!!!
ஆயிரம் வாட்ஸ்,ஐநூறு வாட்ஸ் என்று
அழகிய பெண்களை அலகிட்டு வாய்ப்பாடு கூறிய,
அத்தனை ‘ரோட் சைட் ரோமியோக்களும்,
ஆஃப் ஆகி விட்டார்கள்..
காரணம்,
கரெண்ட் கட்!!!
*********************************************
வீடு வரை விளக்கு,
வீதி வரை லாந்தர்,
காடு வரை கொள்ளி,
கடைசி வரை எதுவோ??
**********************************************
தொடரும் மின்வெட்டு..
உற்பத்தி பெருகியது,
குழந்தைகள்?????!!!!
**********************************************
மின் மயானத் திடலில்,
காத்திருக்கும் பிணம்
ஒன்று சொன்னது:
“விட்டு விட்டுப் போகுது கரெண்ட்,அது
வந்தவுடனே, என்னை
சுட்டு விடப் போகின்றார்,
சுற்றத்தார்!!!!”
************************************************
வளி மூலம்,
புனல் மூலம்,
அனல் மூலம்,
மின்சாரம் வராததால்,
அடங்கியது,
ஐம்புலன்ஸும்!!
*************************************************
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
மின்சாரம் இல்லாக் குறையை இப்படி கவிதை எழுதித் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்..... :(
கவிதைகள் நன்றாக இருக்கிறது.
//“விட்டு விட்டுப் போகுது கரெண்ட்,அது
வந்தவுடனே, என்னை
சுட்டு விடப் போகின்றார்,
சுற்றத்தார்!!!!” //
செத்தபிறகும்
செத்தவன்
செத்தநாழியும்
சும்மா இல்லாமல் புலம்புவது அருமை ;))))
================
//வளி மூலம்,
புனல் மூலம்,
அனல் மூலம்,
மின்சாரம் வராததால்,
அடங்கியது,
ஐம்புலன்ஸும்!!//
அடங்கவில்லை ஸ்வாமி
என் சிரிப்பு! அது தான் உம் சிறப்பு!!
ஷாக் அடிக்கும் கரண்ட் கவிதைகள்.
சார் தலைப்பை சம்பந்தபடுதுற வரிகளை தேடினேன். கிடைக்கலையே !
எனக்கு இன்னும் பயிற்சி தேவை போலிருக்கு
ஆமாம் வெங்கட்..இதை எழுதும் போது,
மருந்துக்குக் கூட கரெண்ட் இல்ல...
கடைசி வரை எதுவோ... ஷாக்கிங்... பட் ஷேக்கிங்... :-)
கோபு மாமா ..அது பட்டணத்து அடிகளோட வரிகளை உல்டா..புல்டா பண்ணினதாக்கும்!!!
சார் ரிஷபன்..கரெண்ட் மட்டுமா ஷாக் அடிக்கும்? இப்ப பாருங்க.. இன்னிலேர்ந்து அதாங்க ஏப்ரல் ஒன்று (முட்டாள் தினம்)
கரெண்ட் பில்லே ஷாக் அடிக்கப் போகுது!
சார் மோகன் குமார்..இவ்வளவு அப்பாவியா நீங்க இருப்பீங்கன்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கவில்லை..
எத்தனை மலையாளப் படங்கள போஸ்டரைப் பார்த்து..தலைப்புப் பார்த்து ஏமாந்து போயிருக்கோம்?
சும்மா உங்கள உள்ளே வரவழைக்க நான் போட்ட டெக்னிக்..
அவ்ளோவ் தான்!!
சார் RVS வாங்க..தலைய ரொம்ப ஷேக் பண்ணாதீங்க..இந்த கரெண்ட போன காலத்துல, விசிறியை ஷேக் பண்ணுங்க..காத்து வரும்..விசிறியை கையில வைச்சுகிட்டு தலையை ஷேக் பண்ணினீங்கன்னா..தலைவலி தான் வரும்!! காத்து வராது!!!!
//மின் மயானத் திடலில்,
காத்திருக்கும் பிணம்
ஒன்று சொன்னது:
“விட்டு விட்டுப் போகுது கரெண்ட்,அது
வந்தவுடனே, என்னை
சுட்டு விடப் போகின்றார்,
சுற்றத்தார்!!!!” //
இதைப் படித்ததும் தான்...அட! ஆமா இதற்குக் கூட மின்சாரம் தேவையில்லையா.....என்று தோன்றியது.
அத்தனை ‘ரோட் சைட் ரோமியோக்களும்,
ஆஃப் ஆகி விட்டார்கள்..//
ரொம்பவே சிரிக்க வைத்து விட்டது...
Post a Comment