Tuesday, March 6, 2012

நேர் நேர் பாமா....


மிருகக் காட்சி சாலையில்..
பட்ஜெட் வரப் போவதை,
ஞாபகப் படுத்தின,
வரிக் குதிரைகள்!
**************************
வரப் போகிறது தேர்தல்..
இதில்,
யாருக்குத் தேறுதல்?
யாருக்கு ஆறுதல்??
**************************
முற்பிறவியின் செயல்
இப்பிறவியில் தொடரும்
என்பது மூட நம்பிக்கை..
புத்தக மூட்டையை,
முதுகில் சுமக்கும், நம்
அத்தனை பிள்ளைகளுமா,
நத்தைகளாய் பிறந்திருப்பார்கள் ?
*****************************
# சித்திரை, வைகாசி
வீதி உலா வரும் சாமிகள்,
இப்பொழுது மாசியிலேயே,
வர ஆரம்பித்து விட்டன..
கர்ப்ப கிருகத்திலுமா
கரெண்ட் கட்?
******************************
அலகிட்டு வாய்ப்பாடு
கூறும் போது,
”நேர் நேர் பாமா”-என்றான்,
அந்த பாமாவைக் காதலித்தவன்!
*******************************
# “இனிப் பொறுப்பதில்லையண்ணே,
எரிதழல் கொண்டு வா”
விளக்கினை ஏற்றிடுவோம்!!
********************************
(பின் குறிப்பு: # “இறந்து போய் விட்ட இன்வெர்ட்டர்கள்” என்ற என் கவிதைத் தொகுப்பிலிருந்து..)

10 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

# “இனிப் பொறுப்பதில்லையண்ணே,
எரிதழல் கொண்டு வா”
விளக்கினை ஏற்றிடுவோம்!!

காலத்துக்கேற்ப நறுக்கென்று இருக்கிறது.

நன்று.

வெங்கட் நாகராஜ் said...

நேர் நேர் பாமா.... :) ரசித்தேன்....

பவர்கட்.... :(((

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மிருகக் காட்சி சாலையில்..
பட்ஜெட் வரப் போவதை,
ஞாபகப் படுத்தின,
வரிக் குதிரைகள்!//

சூப்பர் ’வரி’கள்.

RVS said...

நேர் நேர் பாமா... அட்டகாசம். தூள்.

நேர் நிறை கோமா வா?

ADHI VENKAT said...

//முற்பிறவியின் செயல்
இப்பிறவியில் தொடரும்
என்பது மூட நம்பிக்கை..
புத்தக மூட்டையை,
முதுகில் சுமக்கும், நம்
அத்தனை பிள்ளைகளுமா,
நத்தைகளாய் பிறந்திருப்பார்கள் ?//

இந்த வரிகளை ரசித்தேன்.

ரிஷபன் said...

புத்தக மூட்டையை,
முதுகில் சுமக்கும், நம்
அத்தனை பிள்ளைகளுமா,
நத்தைகளாய் பிறந்திருப்பார்கள் ?

super!

வசந்தமுல்லை said...

நறுக் கவிதைகள்! பாராட்டுக்கள்!!! ஆரண்யா!

ஸ்ரீராம். said...

எல்லாமே அருமை...ஆர் வி எஸ் கமெண்ட் உட்பட!

அப்பாதுரை said...

ஆகா! ஒவ்வொண்ணும் முத்து (பல்லைப் பார்த்துத் தெரிஞ்சுகிட்டது :)

Muttuvancheri S.Natarajan said...

கவிதைகள் பிரமாதம்.முழுத் தொகுதியையும் வெளியிட்டு அசத்துங்களேன் , பார்ப்போம்!