நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Wednesday, February 1, 2012
E = mc2
இந்த உலகில் எல்லாமே ஒன்றை ஒன்று ஒப்பிட்டு பார்க்கும் படியாகத் தான் இருக்கிறது..எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து தான் இருக்கிறது..
ஒரு சாதாரண காஃபியை எடுத்துக் கொள்ளுங்கள்...!
அந்த காஃபியையே..கொடுப்பவர்கள் கொடுத்தால் ....?
அம்மா கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்...அதில் சர்க்கரையை விட பாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்!அதையே ’பெட்டர் ஹாஃப்’ கொடுத்தால்,அந்த டம்ளரின் விளிம்பில் ஆசை ததும்பி இருக்கும்!
ஒரு உதாரணத்திற்கு இப்படி வைத்துக் கொள்ளலாமா?..அதாவது நீங்கள் சாயங்காலம் ஆஃபீஸ் முடிந்து ஐந்தரைக்கு வந்தவுடன்,ஸினிமா போகலாம் என்று காலையில் ‘கமிட்’ செய்து விட்டு,அதனை சுத்தமாய் மறந்து தொலைத்து, ஃப்ரெண்ட்ஸ்களுடன் ப்ரிட்ஜ் விளையாடி...,ஆற அமர ஏழரை மணி சுமாருக்கு வீட்டிற்கு வந்தீர்களானால், அந்த ’பிட்டர் ஹாஃப்’ ஸாரி..ஸாரி..அந்த’பெட்டர் ஹாஃப்’ கொடுக்கும் காஃபி எப்படி இருக்கும்? அந்த ஆறி அவலாய்ப் போன ’வஸ்து’வை ஆற்றுகிற ஆற்றலில் என்ன ஒரு வேகம் இருக்கும்?
வேகம் என்றவுடன் ஞாபகம் வருகிறது..இந்த வேகமும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் இருக்கிறது..இதையும் ஒன்றை ஒன்று ஒப்பிட்டுத் தான் பார்க்க முடியும்..
மூன்று ரூபாய் முப்பத்து மூன்று பைசா வைத்துள்ள பர்ஸை பறி கொடுத்தவன்,அதனை எடுத்தவனைப் பிடிக்கின்ற ஓட்டத்தை விட அந்த பாடாவதி பர்ஸை உள்ளிருக்கும் ‘விஷயம்’தெரியாமல் ‘பாக்கெட்’ அடித்தவன் ஓடுகின்ற ஓட்டம் அபாரமாக இருக்கும்..
தெரு நாய் துரத்தும் போது, நாம் ஓடுகிற ஓட்டம் .....அடாடா..ஒரு சத்தியத்திற்குக் கட்டுப் பட்டு, அதன் எல்லையை தாண்டி வரக் கூடாது என்கிற ஒரு சுயக் கட்டுப்பாடு அந்த நாய்க்கு இருப்பதால் தானே அதன் வேகம் துரத்தப் படுவனின் வேகத்தை விட சற்று கம்மியாக இருக்கிறது..
..பூனை தன்னை பட்சணமாக்கத் துடிக்கிறது என்பது எலிக்கு தெரிவதால் அல்லவா அது தன்னைக் காத்துக் கொள்ள அந்த பூனையின் ஓட்டத்தை விட இப்படி தலை தெறிக்க ஓடுகிறது...
திங்கட்கிழமை காலை ’பீக் அவரி’ல் ஒழுகுகின்ற மூக்கைத் துடைத்துக் கொள்ளக் கூட நேரமில்லாமல், எலெக்ட்ரிக் டரையினைப் பிடிக்க எத்தனை இளம் பெண்கள் ஓடுகிறார்கள்?அவர்களின் வேகம் அந்த எலக்ட்ரிக் ட்ரைய்னின் வேகத்தை விட சற்று அதிகம் தானே!
ஒன்றை கவனித்துப் பார்த்தால் தெரியும்..இவை எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது!
ஆனால், இந்த ஐன்ஸ்டீன் இருக்கிறாரே..அவருடைய புகழ் பெற்ற E = mc2 என்கிற சமன்பாடு உலகிலேயே பிறவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கமுடியாத அதிக பட்ச வேகத்தை உடையது ஒளியின் திசை வேகம் என்கிற ’கான்செப்டை’அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்டது. ஒளியின் வேகம் சார்பற்றது..ஒப்பிட முடியாதது என்பது தான் அவருடைய அசைக்க முடியாத ’ஸ்பெஷல் ரிலேடிவிட்டி தியரி’யின் சாரம்!
இதற்கும் வைத்தான் வேட்டு!
ஜெனிவாவில் உள்ள CERN என்கிற அணு ஆராய்ச்சி நிறுவனம்,பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஒளியை விட திசை வேகம் உள்ள பொருளாக நியூட்ரினோ என்னும் மிக..மிக எடை குறைந்த அணுத்துகளைக் குறிப்பிட்டது.
இந்த நியூட்ரினோ அணுத் துகள்கள் அதிக வெப்ப நிலயில் உருவாகிறது.உதாரணமாக நாலாயிரம் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், சூரியனில் ஹைட்ரஜனும், நைட்ரஜனும் சேரும் போது.ஹீலியமும், நியூட்ரினோவும் வெளிப்படுகின்றன.இந்த நியூட்ரினோ ஒளியை விட அதி வேகமாக செல்லக் கூடியது.
அதாவது,
ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 29,97,92,458 மீட்டர்!என்றால்,
நியூட்ரினோவின் வேகம் ஒரு வினாடிக்கு 29,97,98,454 மீட்டர்!!
நம்மூர் ஜாம்பஜார் ஜக்கு க்வார்ட்டர் அடிச்சுட்டு ச்சொய்ய்ய்ய்ய்ய்........ங்ங்ங்ங்னு..வீசறானே,அந்த பிச்சுவா கத்தியோட வேகம் என்ன தெரியுமா?
வினாடிக்கு 29,97,98,455 மீட்டர்!!!
நாளைக்கே,இந்த ஜாம்பஜார் ஜக்குவின் அருமைந்தன் சைதாப்பேட்டை கொக்கு இதை விட வேகமாக கத்தி வீசலாம்!
ஆக,
‘எல்லாமே’
மாறுதலுக்கு உட்பட்டது தான்!
(பின் குறிப்பு: ப்ளஸ் டூ தேர்வில் BIOLOGY ல் 200/200; MATHS ல் 200/200; CHEMISTRYல் 200/200; ஆனால் PHYSICS ல் மட்டும் 190...192 மார்க் வாங்கி... PHYSICS என்றாலே ஏதோ பூச்சாண்டி..பிசாசு என்று பயப்படும் நம் குழந்தைகளின் பயத்தைப் போக்கி, அது ஒரு பிலாஸபி..அது ஒரு இண்ட்ரஸ்டிங் சப்ஜெக்ட் என்று அவர்களை குஷிப் படுத்துவதற்காக எழுதப் பட்டது)
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
ஹ ஹ ஹ ஹா...! புண்ணான வயிறு எப்போ சார் மாறும்?!
பதிவின் பாதியிலேயே நினைத்தேன். நீங்க ஒரு 'நல்லாசிரியர்' என்று! முடிப்பில் நிரூபித்து விட்டீர்கள். நியூட்ரினோ பற்றி சமீபத்தில் படித்தறிந்தேன். (வல்லவனுக்கு வல்லவன்!) உங்க பெண் கட்டாயம் நோபல் பரிசு வாங்கிடுவாங்க!
ஆசை, பாசம் வேகம், ஓட்டம் இப்படி எல்லாம் போட்டு கலந்த மாறுபட்ட அறிவியல் காபி சுவையா இருக்கு, சார்.....
மூன்று ரூபாய் முப்பத்து மூன்று பைசா வைத்துள்ள பர்ஸை பறி கொடுத்தவன்,அதனை எடுத்தவனைப் பிடிக்கின்ற ஓட்டத்தை விட அந்த பாடாவதி பர்ஸை உள்ளிருக்கும் ‘விஷயம்’தெரியாமல் ‘பாக்கெட்’ அடித்தவன் ஓடுகின்ற ஓட்டம் அபாரமாக இருக்கும்..
நியூட்ரினோ புரிந்ததோ இல்லியோ மத்தது எல்லாம் நல்லா புரிஞ்சுது!
அப்பாடி என்ன ஒரு விளக்கம்.....
பதிவு செய்ததன் நோக்கமும் அருமை....
நிலாமகளுக்கு :
மிக்க நன்றி,மேம்! எனக்கு வாஸ்தவத்தில் பிஸிக்ஸ் தெரியாதாக்கும்...
RAMVIக்கு :
இன்னொரு டோஸ் காஃபி ????
ரிஷபனுக்கு :
இது..இது தான் வேணும் எனக்கு!
இதுவும் வேணும்..இன்னமும் வேணும்னு சொல்வேன்னு எதிர்பார்த்தீர்களா....மாட்டேனே......
வெங்கட் நாகராஜுக்கு:
ஆம்..வெங்கட்..பிஸிக்ஸ் படித்தவன் சோடை போனதில்லை....
ஞாயிற்றுக் கிழமை தினமணியில் படித்த போது பதியாதது இப்போது பதிந்துவிட்டது உங்கள் பதிவின் மூலம் நன்றி
மணிச்சுடருக்கு:
நன்றி மேம்!
asaththalaana pathivu....
மிக்க நன்றி, எல்லன்!
புரியாதவர்களுக்கும் புரியவைக்கும் உங்களது பதிவு
ஜிஜிக்கு நான்:
வருகைக்கு நன்றி!
நல்ல பதிவு. இத்தனை நாளா பார்க்காமப் போய்விட்டேன்.
வாங்க...கந்தசாமி சார்..ரொம்ப நாளாச்சு, நீங்க நம்ம வூட்டுக்கு வந்து...
எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது என்று தாங்கள் சொன்னது உண்மையே! நியூட்ரினோ பற்றி சொன்னவர்கள் தங்கள் கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார்களாம்! உலகத்தில் ஒளியை விட வேகமான வஸ்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதுதான் உண்மை!
அன்புடன்
நடராஜ்
அறிவியல் பற்றி நிறைய எழுதுங்கள் .உங்களிடம் பேச நிறைய விஷயம் இருக்கிறது.
வாங்க நடராஜ்..உங்க கமெண்ட்ஸ் சூப்பர்! மிக்க நன்றி!
நம் ரிஷபன் சார் சொல்வது போல
நியூட்ரினோ புரிந்ததோ இல்லியோ மத்தது எல்லாம் நல்லா புரிஞ்சுது!
பாராட்டுக்கள். வலைச்சரம் மூலம் இன்று தான் என்னால் இதைப் பார்க்க முடிந்தது.
அன்புடன்
vgk
அன்பின் ஆர் ஆர் ஆர்
வைகோ கூறியது போல பாதி நல்லாவெ புரிஞ்சுது - மீதி படிச்ச காலத்துலேயே புரியல - இப்ப .... வேணாம்
நலல் நகைச்சுவை நன்று நன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இண்ட்ரஸ்டிங் சப்ஜெக்ட்.....
அன்பு வணக்கங்கள் இராமமூர்த்தி சார்….
உங்க வலைத்தளம் வலைச்சரம் மூலம் பார்த்து தான் வந்தேன்.
வந்ததுமே இப்படி ஒரு தலைப்பை பார்த்ததும் இதோ இப்ப நீங்க கொடுத்திருக்கீங்களே தலை தெறிக்க பிக்பாக்கெட்காரன், பர்ஸை தவறவிட்டவன், துரத்தும் பூனை, துரத்தப்படும் எலி இது எல்லாத்தையும் விட வேகமா ஓடிட்டேன் பின்னங்கால் பிடரியில் பட அன்னிக்கு ஓடி வந்துட்டு பயத்தோடு ஐயோ ஐயோ இப்படி கால்குலேஷன் ஈக்வேஷன் எல்லாம் கொடுத்தால் யாரு படிப்பா அப்டின்னு ஓடிட்டேன்.
ஆனா அதன் பின் வலைச்சரத்துல நீங்க என்னை உங்க இதுவும் ஹாஸ்யஜோதியும் படிச்சு கருத்து போடச்சொல்லி சொன்னப்ப வந்து மறுபடி படிச்சேன்.
அடடா எத்தனை அருமையான விஷயத்தை இலகுவா சொல்லி இருக்கீங்க.. சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க. இதுக்கே உங்களுக்கு 200 மார்க்ஸ் தரலாம் தெரியுமோ? சரி வருவோமா விஷயத்துக்கு?
ஒரு வகுப்பில் பலதரப்பட்ட பிள்ளைகள் படிக்கும்… ஒன்னு ரொம்ப ஸ்மார்ட்டா சொல்லி கொடுக்காத முன்பே தானே படிச்சு டீச்சருக்கே எடுத்துச்சொல்லும் அறிவாளியா இருக்கும்.. இன்னும் சிலது சொன்னச்சொல் மீறாத தாண்டாத பிள்ளையா டீச்சர் சொல்லிக்கொடுப்பதை அப்டியே உள்வாங்கி அருமையா அதை படிச்சு எழுதி முழு மார்க்கும் வாங்கிரும்….
இன்னும் சிலது வகுப்பில் டீச்சர் சுவாரஸ்யமா சொல்லிக்கொடுப்பதை காதுகொடுத்து கேட்டு அதையே பரிட்சையில எழுதி இரண்டாம் இடம் பிடித்துவிடும்.. ஒருசிலது மக்கு மண்ணாந்தையா எத்தனை சொல்லிக்கொடுத்தாலும் புரியல மிஸ் புரியல மேம் அப்டின்னு தலை சொறியும்… ட்யூஷன் வெச்சுக்கிட்டு எப்டியாவும் முக்கி முனகி பாஸ் பண்ணிரும் வழி பார்க்கும்..
ஒரு சிலது இது எதிலயும் சேர்த்தி இல்லாதது என்னைப்போல திருதிருன்னு முழிக்கிறதும் டீச்சர் வந்து பாடம் நடத்த தொடங்கினாலே தூக்கம் கண்ணை சுழற்ற தூங்கி வழியும்…
இந்த கடைசியா சொன்ன மாதிரி பிள்ளைகளைக்கூட கவரும் விதமா பாடத்தை சுவாரஸ்யமா இதோ நீங்க சொல்லி இருப்பது போல் அழகிய உவமைகளும் உதாரணங்களும் குட்டி குட்டி கதைகளும் சொல்லி சொல்லி கொடுக்கும்போது பிள்ளை கண்டிப்பா முதலிடம் வரும்னு சொல்லவும் வேண்டுமோ?
உவமையா சொன்னாலும் உதாரணமா சொன்னாலும் சொன்ன விதம் ரொம்ப பிடிச்சிருந்தது இராமமூர்த்தி சார்….
E = mc2 என்கிற சமன்பாடு உலகிலேயே பிறவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கமுடியாத அதிக பட்ச வேகத்தை உடையது ஒளியின் திசை வேகம் என்கிற ’கான்செப்டை’அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்டது. ஒளியின் வேகம் சார்பற்றது..ஒப்பிட முடியாதது என்பது தான் அவருடைய அசைக்க முடியாத ’ஸ்பெஷல் ரிலேடிவிட்டி தியரி’யின் சாரம்!
இதை புரியவைக்க மிக அழகாக அம்மா கொடுத்தால் காஃபியில் பாசம் துளி சேர்த்து கொடுப்பதும்.... அதுவே சந்தோஷமா இருக்கும் பெட்டர் ஆஃப் ( நான் கூட நினைத்தேன் மனைவி பாரியா இப்படி சொல்லாம பெட்டர் ஆஃப் ஏன் சொல்றார்னு... பிட்டர் ஆஃப்னு படிக்கும்போது தான் விஷயமே புரிஞ்சுது...
ஜமாய்க்க ஆரம்பிச்சாச்சு... களம் உங்களது... கேட்கணுமா ராமமூர்த்தி சார்... சிக்ஸர் அடிக்கத்தொடங்கி.... கண்டின்யூசா சிக்ஸர் அடிச்சு ஒன் டே மேட்ச் ல மேன் ஆஃப் த மேட்ச் ஆயாச்சு நீங்க... ரசித்து வாசித்தேன்...
அம்மா தன் பிள்ளைகளிடம் எதையுமே எதிர்ப்பார்க்காம தன் அன்பை எப்போதும் ஒரே மாதிரியா கொடுப்பதால தான் அம்மாவின் கைமணம் ருசிப்பது..... வயிறு மட்டுமில்லாம மனசையும் அல்லவா நிறைக்குது....
ஆனா அம்மாவை விட ஒரு படி அதிகமா தாண்டும் மனைவி எப்போதும் ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடனே செயல்படுவதால் தான் புருஷா வெளியில் வேலைக்கு கிளம்பினா வாக்குறுதி தரத்தான் செய்வா...
மனைவி சந்தோஷப்படனும்னு சினிமாக்கு கூட்டிட்டு போறதும் புடவை நகை வாங்கி தருவதாக வாக்கு தருவதும்... ஆனால் ஒரு சில நேரத்தில் சூழ்நிலை ஒத்துவரலன்னா இல்லை மறந்து போனாலும் வீட்டில் வெடிக்க தொடங்கிடும் சரவெடி... சில மனைவியர் வார்த்தைகளாலும் சில மனைவியர் பாத்திரத்தை தூக்கி அடிப்பதாலும் ஒரு சிலர் அமைதியா இப்படி முகவாயை தோளில் இடித்துக்கொண்டு ஆறின காப்பியை வேகமா கோபத்தோடு ஆத்தி ( நல்ல வேளை கோபத்துல முகத்துல கொதிக்கும் காபி கொட்டாம இருக்கிறதுக்கு தாங்க்ஸ் சொல்லனும் மனைவிக்கு) கொடுப்பது....
அந்த வேகம் என்ற சொல்லுக்கு எத்தனை அழகிய உதாரணங்கள் தரீங்க அடேங்கப்பா...
பர்ஸ் தொலைத்தவன் பர்ஸில் இருக்கும் மூணு ரூபாய் முப்பத்தொன்பது பைசாவை பிக்பாக்கெட் பார்த்துட்டான்னா திரும்ப அதே வேகத்தில் ஓடிவந்து மூஞ்சியிலேயே ப்ளேடால் மாடர்ன் ஆர்ட் போட்ருவான்னு பயந்து தான் பிக்பாக்கெட்காரனை விட பர்ஸ் தொலைத்தவன் வேகமா ஓடுவான் தன் பர்ஸை அவனிடம் இருந்து மீட்க....
அதே போல எலியை பிடிக்க பூனையும்....பூனை நல்லா இருந்த இடத்துல இருந்தே நைசா மியாவ் மியாவ்னு நைஸ் பண்ணியே பாலும் வெண்ணையும் தின்று கொழுப்பதால் தான் எலியை விட அதிகமா ஓட முடியறதில்லை பூனையால்....
ஆஹா தெரு நாய் கிட்ட கடி வாங்காமல் நாம் ஓடும் ஓட்டம் ஒலிம்பிக்ல ஓடி இருந்தா தங்கப்பதக்கமே கிடைச்சிருக்கும்.. சோ எல்லாத்துக்குமே பிரதானம் வேகம்..
அந்த வேகத்தை எதற்கும் ஈடுசொல்லமுடியாது என்று சொன்ன ஐன்ஸ்டீனின் தியரியை எதிர்த்து ஒளியை விட திசை வேகம் உள்ள பொருளாக நியூட்ரினோ என்னும் மிக..மிக எடை குறைந்த அணுத்துகளைக் குறிப்பிட்டது.
இந்த நியூட்ரினோ அணுத் துகள்கள் அதிக வெப்ப நிலயில் உருவாகிறது.உதாரணமாக நாலாயிரம் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், சூரியனில் ஹைட்ரஜனும், நைட்ரஜனும் சேரும் போது.ஹீலியமும், நியூட்ரினோவும் வெளிப்படுகின்றன.இந்த நியூட்ரினோ ஒளியை விட அதி வேகமாக செல்லக் கூடியது. அப்டின்னு ஜெனிவாவில் உள்ள CERN என்கிற அணு ஆராய்ச்சி நிறுவனம்,பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு நிரூபிச்சிருக்கு....
அதையும் படிக்கும் வாசகர்கள் எளிதாய் புரிந்துக்கொள்ளும் விதமாக இருக்கவேண்டும் என்று
ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 29,97,92,458 மீட்டர்!என்றால், (இது ஐன்ஸ்டீன் தியரி)
நியூட்ரினோவின் வேகம் ஒரு வினாடிக்கு 29,97,98,454 மீட்டர்!! (இது ஜெனிவாவில் உள்ள CERN என்கிற அணு ஆராய்ச்சி நிறுவனம் நிரூபித்தது)
இதையும் ரசிக்கும் விதமா சினிமாவில் சோ எப்படி தெய்வீக படத்தில் கூட அரசியலை கலந்து அடிப்பாரோ அப்டி உவமைகளும் உதாரணங்களும் சொல்லி தெளிவா சிக்ஸர் அடிக்கமுடிகிறது உங்களால்...
அதாவது நம்மூர் ஜாம்பஜார் ஜக்கு க்வார்ட்டர் அடிச்சுட்டு ச்சொய்ய்ய்ய்ய்ய்........ங்ங்ங்ங்னு..வீசறானே,அந்த பிச்சுவா கத்தியோட வேகம் என்ன தெரியுமா?
வினாடிக்கு 29,97,98,455 மீட்டர்!!!
நாளைக்கே,இந்த ஜாம்பஜார் ஜக்குவின் அருமைந்தன் சைதாப்பேட்டை கொக்கு இதை விட வேகமாக கத்தி வீசலாம்!
வாவ் அப்டின்னு கைத்தட்ட தோணித்து... ஏன்னா தயிர் வடை அதை அப்டியே வடை சுட்டு தயிர்ல முக்கி எடுத்து வெச்சாலும் தயிர் வடை தான்.... ஆனால் அதையே மெதுவடை க்ரிஸ்பியா சுட்டு எடுத்து கெட்டித்தயிரை அதன்மேல் ஊற்றி கொஞ்சம் ஊறியும் ஊறாமலும் அதன்மேல் கொஞ்சம் ஓமப்பொடி, துருவின கேரட், மாதுளை முத்துக்கள், கொத்தமிரி கொஞ்சம், பச்சைமிளகாய் பொடியா நறுக்கி தூவி சீரகப்பொடி தூவி.... அட அட அட... தயிர்வடை பார்க்கவும் அழகா சாப்பிடவும் ருசியா....
அதாவது ப்ரசண்டேஷேன்.... ஒரு டீச்சர் பாடம் எடுக்கும் விதத்தை வைத்தே அவரை முன்னாடி நடக்கவுட்டு பின்னாடி கிண்டல் செய்யலாமா அல்லது அவர் அருமையா பாடம் எடுக்கும் விதம் வைத்து மரியாதையா அவரை பார்த்ததும் வாய்ல வைத்திருக்கும் சிகரெட்டை வேகமா அவர் பார்க்குமுன் கீழ போட்டு அணைத்துவிட்டு குட்மார்னிங் சார் அப்டின்னு கை தானா உயர்ந்து சல்யூட் வைக்குமா என்பது ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் விதத்தை பொறுத்தது...
அதன்படி பார்த்தால் நீங்க சொல்லவந்த கருத்தை.... பாடம் எடுக்க வந்த ஆசிரியராய் போர் அடிக்காமல் சுவாரஸ்யமாய் ரசிக்கவும் வைத்து ருசிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த ” எதுவுமே மாறுதலுக்கு உட்பட்டு தான் “ என்ற கருத்தை எங்க மனசுல ஆழ்மனசுல நினைப்பது போல நினைக்கவெச்சுட்டீங்க.. ஆமாம் உண்மையே..
இந்த தியரி கூட பின் தள்ளி வேறு எதுனா கூட வரலாம் இன்னும் வேகத்தைப்பற்றி எடுத்துச்சொல்ல.... ஆனால் சொல்லப்படும் சாராம்ஸம் எப்பவும் எல்லா பிள்ளைகளுமே ரசிக்கும் வண்ணம் எப்படி சொல்வது என்பது தான் இங்க உங்க டாபிக்.... அதை கனகச்சிதமா அட்டகாசமா சொல்லி அழகா தெளியவும் தெரியவும் வெச்சீங்கன்னு சொன்னால் அது மிகை இல்லை சார்... அதுக்கு உங்களுக்கு ஹாட்ஸ் ஆஃப்....
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்.... நீங்க பிசிக்ஸ் படிக்க முடியாம முழித்த மாணவரா இருக்கலாம்.. ஆனால் திறம்பட பாடம் நடத்தும் நல்லாசிரியரா திகழ்வீங்க என்பதில் எனக்கு ஐயமே இல்லை....
அட்டகாசமான மனம் தொட்ட பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சார்...
அடேங்கப்பா ........
என்ன ஒரு ஆழமான, நீ........................................ளமான விமர்சனம் !
இன்னும் நேர்த்தியாய், படிப்பவர் மனதினில் ஆவலைத் தூண்டும்
விதமாய் எழுத வேண்டும் என்கிற உந்தலை என்னுள்
எழுப்பியதற்கு மிக்க நன்றி மேடம் !
படித்து முடித்த வுடன் என் CAREER ஐ ஒரு HIGHER SECONDARY
SCHOOL TEACHER ஆகத் தான் ஆரம்பித்தேன் !
ஆசிரியர் பணி மீதான அளவிட முடியாத அளவிற்கு காதல்
இன்னமும் எனக்கு உண்டு என்பது மறக்கவோ/ மறுக்கவோ
முடியாத உண்மை !!
Post a Comment