Saturday, February 25, 2012

நகரும் காடுகள்!!!!


ஏதாவது பிரச்னை என்றால், நாம் எல்லாருமே,யாரையாவது குறை சொல்வதிலேயே நம் பொழுதை...காலத்தை..விரயம் செய்து கொண்டு இருக்கிறோம்!..பாருங்களேன்..இன்றைய CURRENT TOPIC ‘மின்வெட்டு’ இது சம்பந்தமாய் நாம், ’நமக்குள்’ என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?
நேற்று மைத்துனர் வீட்டில் ஒரு விசேஷம்..அங்கு நான் சென்றிருந்தேன்.அவர் பையன் ..அரவிந்த் பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு தயார் செய்து கொண்டு இருக்கும் மாணவன்..என்னுடன் பேசிக் கொண்டு இருந்தான்..’கொஞ்ச நேரம் வெளியில் காற்று வருகிறது ..அங்கு போகலாமா’ என்று நான் கேட்டதிற்கு, ‘போகலாமே’ என்றவன், ஃபேன்,லைட் எல்லாவற்றையும் அணைத்தான்.இதே மாதிரி, அங்கு வெயில் என்றவுடன், ரூமுக்கு வர,உடனே சுவிட்ச் ஆன் செய்தான்.பிறகு, சாப்பிட போகும் போது, மறக்காமல், எல்லாவற்றையும் அணைத்தான்..செய்வதில் ஒரு நளினம்....அதுவும்.. விருந்தினர் மனம் புண்படாத மாதிரி செய்ததில் ஒரு நேர்த்தி.. கெட்டிக் காரன்! இதே நிலையில் என்னை கம்பேர் செய்து பார்த்தேன்..அந்த இடை வெளியில் நான் கரெண்ட் ஆஃப் செய்வதில்லை..இதில் என்ன பிரமாதமாய் வந்து விடப் போகிறது என்கிற எண்ணம்....மேலும் எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளி முன் நான் இதையெல்லாம் லட்சியம் செய்வதில்லை என்பதைக் காட்டிக் கொள்வதில் ஒரு ஆடம்பரம்..! கணக்கிட்டுப் பார்த்தேன், நாங்கள் அந்த ரூமில் இல்லாத நேரம் அரை மணி நேரம்! அந்த கெட்டிக் காரப்பிள்ளை, ஒரு அரை மணி நேர மின்சாரத்தை சேமித்தான், யாரும் சொல்லி கொடுக்காமலேயே!..
இப்படி நாம் எல்லாருமே, ஒரு நாளில் ஒரு அரை மணி நேரம் மின்சாரம் சேமித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது..இன்றிலிருந்து நானும் அதை கடைப் பிடிக்க ஆரம்பித்து விட்டேன்....
ஒரு பகலில் நம்மால் கரெண்ட் இல்லாமல் இருக்க முடியாதா..என்று என்னுள் ஒரு உந்தல்!
காஞ்சிப் பெரியவர் சொன்ன பிடி அரிசி திட்டம் போல் நாமும், தினம் ஒரு அரை மணி நேரம் மின்சாரம் சேமித்தால் என்ன என்று தோன்றியது..
எவ்வளவு வந்து விடப் போகிறது என்பவர்களுக்கு ஒரு வார்த்தை!
ஒரு ரூபாய் தானே என்று அலட்சியம் செய்யாதீர்கள்....ரூ 99,99,999/- வைத்துள்ள ஒரு லட்சாதிபதியை கோடீஸ்வரனாக்கும் சக்தி அந்த ஒரு ரூபாய்க்கு உண்டு!
ஏதோ, சமூகப் பிரக்ஞை கொண்டு எழுதும் எழுத்தாளன் என்று என்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக எழுதவில்லை இந்த பதிவு! ஒரு சின்னப் பையனிடம் நான் கற்றுக் கொண்ட பாடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவே!
ஷேக்ஸ்பியர் எழுதிய MACBETH என்கிற காவியத்தில், ஆயிரக் கணக்கான பேர் ஒரு மரத்துண்டு எடுத்துக் கொண்டு சென்றது, ஒரு காடு நகர்வது போல இருந்ததாம்..
அது போல், நாமும் ஒரு சிறிய மரத்துண்டை கையில் எடுத்துக் கொள்வோம்..பெரிய பெரிய காடுகளை நகர்த்திக் காட்டுவோம்!
என்ன வருகிறீர்களா?
இன்று முதல் அட்லீஸ்ட் ஒரு வாரம் தலா அரை மணி நேர மின்சாரத்தை சேமிக்கலாமா? விருப்பமுள்ளவர்கள் ’வருகிறேன்’என்று பின்னோட்டம் போட்டால், மிக்க மகிழ்ச்சி!!

13 comments:

Vetirmagal said...

கட்டாயம்! வந்தாச்சு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு ரூபாய் தானே என்று அலட்சியம் செய்யாதீர்கள்....ரூ 99,99,999/- வைத்துள்ள ஒரு லட்சாதிபதியை கோடீஸ்வரனாக்கும் சக்தி அந்த ஒரு ரூபாய்க்கு உண்டு!//

அதானே!

மிகச்சரியாகச் சொல்லி விட்டீர்கள்,

பிடியரிசித்திட்டம் போலவே இதையும் அனைவரும் செய்ய முயற்சிப்போம்.

வேறு வழியே இல்லையே!

விழிப்புணர்வுப் பதிவுக்கு நன்றிகள்.

ரிஷபன் said...

நாமும் ஒரு சிறிய மரத்துண்டை கையில் எடுத்துக் கொள்வோம்..பெரிய பெரிய காடுகளை நகர்த்திக் காட்டுவோம்

என் பங்கில் நானும் ஒரு துண்டுடன்..

ADHI VENKAT said...

நல்ல விஷயம். இதை செய்வதற்கு ஏன் யோசிக்க வேண்டும்? இதுவரை மின்சாரத்தை வீண் செய்யாவிட்டாலும், இனிமேல் கூடுதல் கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.

அரவிந்துக்கு என் பாராட்டுகளை தெரிவித்து விடுங்கள்.

Rekha raghavan said...

நானும் வருகிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் விழிப்புணர்வு பகிர்வு.... ஒவ்வொரு நாளும் நிறைய விரயம் செய்கிறோம்... நிச்சயம் தவிர்க்க வேண்டிய விஷயம்.

கே. பி. ஜனா... said...

எல்லாரும் பேசிக் கொண்டிருக்க சிலரே செய்து முடிக்கிறார்கள்! அந்தப் பையனுக்கு என் பாராட்டுக்கள்! உங்களுக்கும்!

middleclassmadhavi said...

DhaaraLama!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

க்ளாஸ்! இதுதான் விஷயம்.

வருமானம் பெருகாமல் செலவு கட்டுக்கடங்காமல் போகும் சமயங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சிக்கனம் மட்டுமே. ஆனால் அதை ஒரு தண்டனையாய் உண்ராமல் இயல்பாய் சகித்துக் கொள்ளும் மனோபாவம் இருந்தால் நிச்சயம் அவரவர் அளவில் பிரச்சினைகளைக் கடக்கலாம்.

நான் கிணற்றில் முழுக்க முழுக்க தண்ணீர் இறைத்து நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட தலைமுறையுடன் சைக்கிள் அல்லது நடை எனும் தலைமுறையுடன் வாழ்ந்தவன்.

பனை ஓலை விசிறியால் புழுக்கத்தைத் தணித்துக்கொண்டு வீட்டிலிருக்கும் ஒற்றை மின்விசிறியை மிக அத்தியாவசியமான நேரத்துக்கு மட்டும் உபயோகிக்கும் என் தாத்தாவிலிருந்து வந்தவன்.

ஆனால் இன்றைக்கு மின்சாரம் இல்லாத ஒரு அரை மணி நேரத்தை எத்தனை பேரால் பொறுமையாய் சகித்துக் கொள்ள முடிகிறது?

ஒரு நாட்டின் தேவையையும் இருப்பையும் உணர்ந்து தலை முதல் கால் வரை நேர்மையாய்த் திட்டமிட்டால் அதற்கு ஒத்துழைத்தால் பிரச்சினைகள் கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

RAMA RAVI (RAMVI) said...

அந்த சிறுவன் செய்யும் நல்ல விஷயத்தில் நாமும் பங்கு பெறலாம்,சார்.கட்டாயம் செய்கிறோம்.

ஸ்ரீராம். said...

ரெடி ஜூட்....

அப்பாதுரை said...

அவசியம்

பத்மா said...

sure