நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Thursday, February 16, 2012
வேண்டாம் விருது (1) ?????
கணிணியை வழக்கம் போல் திறந்தேன்!
கணிணி பக்கம் வந்து இரண்டு நாட்களாகிறது..
என்ன ஒரு ஆச்சர்யம்?
ஒன்று!
இரண்டு!!
மூன்று !!!
இதில் இரண்டும்,மூன்றும் ஒன்று!!
அடடா..முத்தான விருதுகள்!
எனக்கு?
யாரிடமிருந்து?
முதல் விருது, பிரபல எழுத்தாளர் திரு வெங்கட் நாகராஜ்ஜிடமிருந்து?
சாதாரண விருதா, அது? “THE VERSATILE BLOGGER AWARD" என்று பெயர்!
அடுத்த விருதின் பெயர் :”LIEBSTER BLOG AWARD"
இந்த விருதினை அளித்தவர்கள் யார் தெரியுமா?
இரண்டு ஜாம்பவான்கள்
என்னையும் மதித்து கெளரவப் படுத்தி இருக்கிறார்கள்!
முதல் நபர் வை.கோ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படும் திரு வை.கோபால கிருஷ்ணன்! இரண்டாம் நபர் நம் அன்பிற்குரிய சகோ திருமதி மனோ சாமினாதன்! இவர் ஒரு versatile personality..ஓவியம்,சமையல்,கதை என்று பல துறைகளிலும் தடம் பதித்துக் கொண்டு இருப்பவர்..சூரியனுக்கு முன்னால், ஒரு சின்னூண்டு மெழுகுவர்த்தியை காட்டுவது போல் தோன்றியதால் இவர்களின் BLOGS ஐ இங்கு எழுதவில்லை!
இந்த மூவர்க்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
AT A TIME த்தில் இரண்டு விருதுகள்! அதுவும் மூன்று மிகப் பிரபல நபர்களிடமிருந்து!!
ஒவ்வொரு நாள் நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது,” நீ என்ன நேற்று பெரிசா எழுதி கிழிச்சிட்டே? என்னை கிழிக்க வரே?” என்று கேட்பது போல் பிரமை எனக்கு இருப்பதால், ஒரு வித குற்ற உணர்வுடன் தான் இத்தனை நாட்களும் நாட்காட்டி தாள்களைக் கிழித்துக் கொண்டிருந்தேன்!இனி எனக்கு அந்த பயமில்லை! என் எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது!என்னுடைய self esteem ego வை இவர்கள் தூண்டி விட்டு விட்டார்கள்..
இதோ நான் எழப் போகிறேன்?
ஜிவ்வென்று வானில் பறக்கப் போகிறேன்!!
ஒரு அபரிமிதமான கற்பனை என்னுள்!
இனி மிக மிகப் பிரமாதமாய் எழுதி, தமிழ் நாட்டிலே பிரபலமான ஆளாய் ஆகி, எலக்ஷனில் நின்று, வென்று..மிகப் பெரிய VVIP ஆகி, குண்டு துளைக்காத காரில் பயணம்..இஸெட் பாதுகாப்பு வளையம்.. சுற்றிலும்.. உடன் பிறப்புகள்..ரத்தத்தின் ரத்தங்கள்! வட்டங்கள்..சதுரங்கள்...துதி பாடும் காக்கை கூட்டங்கள்... உறவுக் காரர்களுக்கு பெரிய..பெரிய காண்ட்ராக்ட்கள்...மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்தாகி விட்டது! பஸிபிக் பெருங்கடலில் சின்னதாய் ஒரு தீவும் வாங்கிப் போட்டாகி விட்டது?
இனி என்ன கவலை?
எழுந்தது ஒரு வெண்பா!
*************************************************
சொற்றாடல் பல புரிந்து,சொத்து பல சேர்த்து,
கற்றாரைப் புறம் தள்ளி, அரியணையில் நானமர்ந்து,
உற்றாரைப் பேணி, ஊர் மெச்ச வாழ்ந்திட்டு,
நற்றாமரை இலை நீர் போல் வாழ்தலினி எளிதாமோ?
**************************************************
அது சரி,விஸ்ராந்தியாய் ஒரு கால் கிலோ கத்திரிக்காய் பேரம் பேசி வாங்க முடியுமா என்னால்? ஊஹூம்...போச்...எல்லாமே போச்!!! இன்று நான் ஒரு பெரிய ஆள்!
என்னுடைய ’ஐடெண்ட்டிட்டி’...ப்ரைவஸி எல்லாமே எங்கே? எங்கே???
சட்டென நிதர்சனம் நெற்றிப் பொட்டை தாக்கியது!
“...டேய் ஃபூல்....ஒன்றும் ஆகவில்லை கவலைப் படாதே” என்றது ஆழ் மனம்!
அப்பாடா ..தப்பித்தேன்! நல்ல வேளை நான் நானாகத் தான் இருக்கிறேன்!
எந்த வித வாய்ப்பும் எனக்கு கிடைக்காததினால் தான் நான் யோக்யனாய் இருக்கிறேன்!
அது போதும்! எந்த விலை கொடுத்தாவது, நிம்மதியை வாங்கலாம்..அதற்காக, எந்த ஒரு விலைக்கும் நிம்மதியை கொடுக்க முடியுமா, என்ன?
’..சினம் கொண்ட குரங்கு, சிறிது கள்ளினை அருந்தியது போல்..’ என்னை என்ன பாடு படுத்தி விட்டது இந்த விருதுகள்?
போதும்டா சாமி!
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//இதோ நான் எழப் போகிறேன்?. ..............சின்னதாய் ஒரு தீவும் வாங்கிப் போட்டாகி விட்டது?//
எங்கேயோ போய்டீங்களே!!!
// எந்த விலை கொடுத்தாவது, நிம்மதியை வாங்கலாம்..அதற்காக, எந்த ஒரு விலைக்கும் நிம்மதியை கொடுக்க முடியுமா, என்ன?//
அருமை..
விருதுகள் வென்றதற்கு வாழ்த்துகள்...
//நல்ல வேளை நான் நானாகத் தான் இருக்கிறேன்!
எந்த வித வாய்ப்பும் எனக்கு கிடைக்காததினால் தான் நான் யோக்யனாய் இருக்கிறேன்!
அது போதும்! எந்த விலை கொடுத்தாவது, நிம்மதியை வாங்கலாம்..அதற்காக, எந்த ஒரு விலைக்கும் நிம்மதியை கொடுக்க முடியுமா, என்ன?//
ஆஹா! இந்த ஒரு தத்துவத்தை உதிர்த்ததற்காகவே மேலும் பல விருதுகள் உங்களுக்கு வழங்கப்படலாம்.
வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
மூன்று விருதுகளை பெற்றதற்கு வாழ்த்துகள் சார்.
இந்த மாதிரி எல்லாம் ஸடைர் எழுதினால் . பிள்ளையார் பிடிக்க... ஆன கதை தான். படிப்பவர்கள் எல்லோருமே ஒரு விருது கொடுக்க தயாராக உள்ளார்கள்.;-)
அருமை.
வணக்கம்.
ப்ரமாதம்... ப்ரமாதம்!!
RAMVI க்கு : வாஸ்தவம் தானே?
இராஜராஜேஸ்வரிக்கு : மிக்க நன்றி!
வை.கோ.விற்கு: வாய்ப்பு எனக்கு கிடைக்காததினால் தானே நான் நல்லவனாக இருக்கிறேன்..உண்மை தானே அது?
கோவை 2 தில்லிக்கு:
மூன்று விருதல்ல..மேடம்..இரண்டு தான்..மூன்று கொடுத்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
Vetrimagal க்கு: விருதை விருதா கொடுக்காதீங்க..விருந்தோட கொடுங்க..இனி அடுத்த விருது ஏதாவது STAR HOTELலில் தான்!
நிலா மகளுக்கு: தேங்க் யூ..தேங்க் யூ...
Post a Comment