நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Thursday, February 9, 2012
மீண்டும் கல்யாணம்????????!!!!!!!!
(இந்த தலைப்பைப் பார்த்து யாரேனும் தப்பாக அர்த்தம் செய்து கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல..)
என் வாழ்க்கையில்.. நான் கடந்து வந்த அந்த பாதையில்..பாலு சித்தப்பா..குரு..கல்யாணம்...வினு...சீனு...போல், நம்ம ஃப்ரெண்ட் கல்யாண ராமன் வாழ்விலும் ஒருவர் தாக்கம் ஏற்படுத்தினார்..யார் தெரியுமா..
அவனோட தாத்தா!
இவர் சாதாரண தாத்தா அல்ல!
அந்த காலத்திலேயே, அதாவது பிரிட்டிஷ் காரன் காலத்தில, திருச்சி ரயில்வே ஆஃபீஸ்ல, ஹெட் கிளார்க்..ரொம்ப...ரொம்ப... பெரிய போஸ்ட்! எல்லா தாத்தாக்களும் குடுமி வைச்சுண்டு, பஞ்சகச்சம் கட்டிண்டு வைதீகத்துக்குப் போகும் போது,இவர் ஸ்டைலாக..‘க்ராப்’ வைத்து ஃபுல் பேண்ட் போட்டுக் கொண்டு ஆஃபீஸ் போவது வித்யாசமாய் இருக்குமாம்..சொல்லிக் கேள்வி!
அப்படிப் பட்ட தாத்தாவுக்கு ஒரு பழக்கம். பொடி போடுவார்..பொடின்னா..சாதாரண TAS ரத்தினம் பட்டணம் பொடி அல்ல ! OFFICER'S SNUFF னு நெய் பொடியாக்கும்!அப்பவே ரொம்ப காஸ்ட்லி! திருச்சினாப்பள்ளி பெரிய கடை வீதியில..ஒரே ஒரு கடையில் மட்டும் தான் இருக்கும்! அந்த பொடி வைக்க கண்டெய்னர் ஒரு வெள்ளி டப்பா..பார்க்கவே நல்ல வேலைப்பாடோட அழகா இருக்குமாம், அது.
சரி..விஷயத்துக்கு வருவோம்!
நம்ம புள்ளையாண்டான் எஸ்.எஸ்.எல்.சி யில், காலாண்டு தேர்வில், டன் மார்க்! நாம என்ன செய்வோம்..இரண்டு திட்டு..திட்டுவோம்..குடும்ப நிலையை சொல்லிப் புலம்புவோம்..அவன் தாத்தா என்ன செய்தார் தெரியுமா?
அடடா....என்ன ஒரு வில்லத் தனம்..பிரிட்டிஷ் காரனோட பழகிப் பழகி, அந்த குரூரத் தனமும் வந்திருக்கும் போல இருக்கு..இப்ப நினச்சாலும் உடம்பு பயத்துல துள்றது.. நானாயிருந்தா, நட்டுக்கிட்டு போயிருப்பேன்..அவனாக் கொண்டு அதை சமாளிச்சான்!
பீடிகை போதும்..விஷயத்துக்கு வான்னு சொல்றீங்களா...
வரேன்..
”...என் பேரன் காம்போஸிட் மேத்ஸ்ல என்ன மார்க் தெரியுமா...இருபத்தி நாலு மார்க் வாங்கியிருக்கான்.இருபத்தி நாலு மார்க்காக்கும்....” என்று பெருமையாய்...தாத்தா...
யாரிடம் சொல்வார் என்று நினக்கிறீர்கள்?
பக்கத்து வீடு..எதிர்த்த வீடு...இவனோடத்த வயசுப்........
பெண்களிடம் தான்!!!!!!!!!!!
என்ன ஒரு அவமானம்!
கேள்விப் பட்டவுடன் கல்யாணம் குதித்தான்!
அவன் : தாத்தாவ்.... நான் கணக்குல நிறைய மார்க் வாங்கிக் காட்டறேன்..ஒரு பெட்..
தாத்தா : இதப் பாரு.. நீ கணக்கில நல்ல மார்க் வாங்கினா, இந்த பொடி போடறதை அந்த வினாடியே நிறுத்திடறேன்...
அவன் : சேலஞ்ச்?
தாத்தா : சேலஞ்ச்?
சொல்லி விட்டானே ஒழிய, உள்ளூர பயம்..வெளியே தலை காட்ட முடியவில்லை..அந்த பெண்களெல்லாம் அவனைப் பார்த்து சிரிப்பது போல் ப்ரமை..பாவம்!
அகஸ்தியர் நோட்ஸ் வாங்கினான்.. நெட்டுருப் போட்டான்...திரும்ப..திரும்ப ...எழுதிப் பார்த்தான்...
அத்தனைப் பெண்களும் அவனைப் பார்த்து,சிரி..சிரி..என்று சிரித்தார்கள்..
கனவில் தான்!
அந்த DAY OF JUDGMENT நாளும் வந்தது!
ஸ்கூலில் மார்க் லிஸ்ட் கொடுத்தார்கள்..
விழுந்தடித்துக் கொண்டு, வீட்டிற்கு ஓடினான்...
தாத்தாவ்வ்............
என்ன மார்க்?
நூற்றுக்கு தொண்ணூறு!
தாத்தா மானஸ்தர்!
ஷர்ட் பாக்கெட்லிருந்து பொடி டப்பாவை எடுத்தார்....
ஆசை தீர...சர்ர்ர்.ர்.ர்...ர்ர்..........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஒரே உறிஞ்ச்!
தூக்கிப் போட்டார், அந்த பொடி டப்பாவை!
கொல்லைப் புறத்தில் இருந்த பாட்டி,அந்த பொடி டப்பாவை நம்ம பேட்ஸ்மேன் போல இல்லாமல் டக்கென்று காட்ச் பிடித்தாள்!
வெள்ளியாச்சே அது!
அதற்குப் பிறகு தாத்தா பொடியைத் தொடவே இல்லை என்பது வரலாறு உரைக்கும் உண்மை!
இது நடந்து ஒரு வருடம் கழித்து.....
தாத்தாவும், பாட்டியும் திண்ணையில் இருக்கும் போது..
அவரிடம் ஒரு பேப்பரை நீட்டினான்.. நம்ம கல்யாணம்!
PUC மார்க் லிஸ்ட்!
அல்ஜிப்ராவில் இருநூறுக்கு இருநூறு!
தாத்தா திண்ணையை விட்டு எழுந்தார்.பாட்டி அவரைப் பிடித்துக் கொண்டு எழுந்தாள்.பாட்டிக்கு தள்ளாமை! அடிக்கடி தாத்தாவையோ...திண்ணையையோ பிடித்துக் கொள்வாள்.
“ நம்மை பிடிச்சதை விடணுமோல்யோ, அதனால.......காசிக்குப் போய் உங்க பாட்டியை விட்டுட்டு வரப் போறேன்”ன்னு தாத்தா காலையில் பேத்திகளிடம் பேத்தியது,ஞாபகம் வரவே,பேராண்டி எக்கச்சக்கமாய் மார்க் வாங்கிய சந்தோஷத்தில்,தாத்தா ஏதாவது ஏடாகூடமாய் செய்து விடப் போகிறாரே என்கிற பயத்தில், பாட்டி தாத்தாவை இறுகப் பிடித்துக் கொண்டாள் ........
என்பது செவி வழிச் செய்தி!
*************************
இது கொஞ்சம் ஓவர் தான்!
ரொம்ப போர் அடிச்சதுன்னு ஒரு சைக்கியாரிஸ்ட்டைப் போய்ப் பார்த்தேன்!
சுமாராய் ஒரு மாட்னி ஷோ பார்க்கிற டைம் ஆச்சு அவர் தரிசனம் கிடைக்க..
அவர் : வாங்க..எனி ப்ராப்ளம்?
நான் : லைஃப் ரொம்ப stress ஆ இருக்கு..மெகானிகலா ஓடிட்டு இருக்கு..பைத்தியம்
பிடிச்சுடுமோன்னு இருக்கு.
அவர் : நான் இருக்கேன்..கவலைப் படாதீங்க..அது சரி எத்தனை நாளா இப்படி இருக்கு?
நான் : ஒரு ஆறு மாசமா இருக்கு சார்!
அவர் : நல்லா தூக்கம் வருதா?
நான் : தூக்கம் சரியா வரலே சார்..
அவர் :கவலைப் படாதீங்க..மாத்திரை எழுதி தரேன்..மாத்திரையால குணாமாறதது இல்ல..
மனசை ரிலாக்ஸா வைச்சுக்குங்க..யோகா பண்ணுங்க..இப்ப ஆரண்ய நிவாஸ் ஆர்
ராமமூர்த்தின்னு ஒருத்தர் இணையத்தில எழுதறார்..அவர் எழுத்தை படிச்சுப் பாருங்க
குபீர்னு சிரிப்பு பொத்துக்கும்..மனசு ரொம்ப லைட்டாயிடும்.
நான் : அந்த ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி நான் தான் சார்!
இது நடந்த அடுத்த நாள் அதே டாக்டர்ட்ட போனேன்..மெடிக்கல் ரீஇம்பர்ஸ்மெண்ட் ஃபாரத்தில கையெழுத்து வாங்க! நர்ஸ் வந்தாங்க..
நான் : டாக்டர் இன்னும் வல்லியே..
நர்ஸ் ; டாக்டர் பத்து நாள் வர மாட்டார்..
நான் : என்ன விஷயம்?
நர்ஸ் : நீங்க தான் சொல்லணும்...உங்களைப் பார்த்ததிலிருந்து அவர் வரல்லே..வீட்டில
கேட்டா, டாக்டரே ட்ரீட்மெண்டுக்கு போயிருக்காராம்..அவரை என்ன தான் சார்
பண்ணினீங்க? நீங்க தான் கடைசி பேஷண்ட்!
Labels:
நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
நல்லாயிருக்கு சார்! நெசமாவே உண்மைச் சம்பவமா?
//PUC மார்க் லிஸ்ட்!
அல்ஜிப்ராவில் இருநூறுக்கு இருநூறு!
தாத்தா திண்ணையை விட்டு எழுந்தார்.//
இந்த இடத்தில், தான் அன்று துறந்த மூக்குப்பொடியை மீண்டும் தொடரத்தான் எழுச்சியுடன் எழுந்தாராக்கும் என்று நினைத்தேன். கடைசியில் அது வேறுவிதமாக வ.வ.ஸ்ரீ பாக்ஷையில் வழுவட்டையாக முடிந்து விட்டதே! ;)))))
சம்பவத்தைச் தாங்கள் சித்தரித்த விதம், பேரெழுச்சியாகவும் பெருமகிழ்ச்சியாகவும் இருந்தது.
இரண்டுமே நல்ல தமாஷா இருதது...
ஆஹா.....தாத்தா.....
தாத்தாவோட அந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது!
இந்த மாதிரி தாத்தா எனக்கும் இருந்தார்....ஆனாலும் நான் அசரவில்லையே...!
நீங்க கதை சொல்ற லாவகத்துக்கு உங்க் பேரனா இல்லாமப் போய்ட்டோமேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு ஆர்.ஆர்.ஆர் சர்......சே...சார்.
தலைப்புக்கும் இந்த கமெண்ட்டுக்கும் யாதொரு சம்பந்த்முமில்லை.
அந்தப் பொடியை நானும் ட்ரை ப்ண்ணியிருக்கேன். சுகந்த ஸ்நஃப் என்று சொல்லிக் கேழ்வி. வக்கீல்களுக்கு ரொம்பவும் இஷ்டமாயிருமென்று கேஸ்ல ஜெயிக்கணும்னு எனக்குத் தெரிஞ்ச ஒரு ப்ரபல வக்கீலுக்கு (சிவாஜி கௌரவதுதுல இவரைத்தான் இமிடேட் பண்ணினார்) கேஸோட சுகந்த ஸஃபையும் வாங்கிண்டு போயிடுவாளாம்.
இடுகையோட வால் பகுதியும் ஜோர்.நான் விட்டுவிட்டு எப்படியோ அந்த குறிப்பிடப்பட்ட ப்ளாக்கையும் படிச்சுண்டுதான் வர்றேன். போறாததுக்கு அந்த ப்ளாக் எழுதரவரோடயும் சம்பாஷிச்சுண்டுதான் இருக்கேன்.ஒண்ணும் ஆகலையே? ஒங்களுக்கு ஏதாவது தெரியுமோ ஆர்.ஆர்.ஆர். சார்?
பேராண்டி நல்ல மார்க் வாங்கியவுடன் தாத்தா பொடியை விட்டு விட்டாரா!!!!!
சூப்பர் தாத்தா......
பாட்டி அந்த டப்பாவை அழகாக கேட்ச் பிடித்தது அதை விட சூப்பர்...
கெளதமனுக்கு
நான் : ஆமாம், சார்.. நெசமாத்தான்
நடந்தது,இது!..அதோ..
கல்யாணாம் வரானே..அவனை
கேளுங்க..
கல்யாணம் : நேத்திக்குத் தான் சார்
சொன்னேன்..அதுக்குள்ள
எழுதிட்டான்,,ஒண்ணு
நான் நல்லா தெரிஞ்சது
எழுதறவன்ட்ட பேசக்
கூடாது..ஏன்னா...
பேசறதையெல்லாம்
எழுதிடறாங்க...
வைகோவிற்கு
சார்... நீங்க வந்து ரொம்ப நாளாச்சு..
அதுக்காகத் தான் பொடி வைச்சு எழுதினேன்...
கே.பி.ஜனா
உங்க எழுத்து முன்னால இதெல்லாம்
ஜுஜுபி
:))))
ரசித்துச் சிரித்தேன்
கம்பாசிட் மேத் என்றால் என்ன?
உங்களுக்காக ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில் - வாருங்களேன்....
http://www.venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_14.html
தங்களுக்கு ஒரு விருது காத்துள்ளது. பெற்றுக்கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்.
http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html
அன்புடன் vgk
உங்களுக்கு என் இன்றைய பதிவில் விருதினை அளித்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
ஸ்ரீராம்க்கு:
தாத்தாவோட டீலிங்கா?
என்ன டீலிங் சார்..கேட்கவே சூப்பரா இருக்கே!
அவர் பொடி போடற விஷயத்தை பாட்டிட்ட போட்டுக் கொடுக்காட்டா, நிக்கர் பாக்கெட் நிறைய அரு நெல்லிக்காய் தரேன்னாரா?
சுந்தர்ஜிக்கு:
(1) நீங்க நிச்சயம் பேரன் தான் சுந்தர்ஜி! எனக்கில்ல உங்க தாத்தாக்கு...
நான் உங்களை விட இரண்டு வயசு சின்னவனாப் போய்ட்டேனே?
(2) நீங்க பொடி வைச்சு எழுதறதைப் பார்த்திருக்கேன்..பொடியும் போடுவீங்களா? உம்ம பசங்களிடம் சொல்லட்டுமா...
(3) அந்த சம்பந்தப் பட்ட நபர் ப்ளாக்கைப் பார்க்கிறதினாலும்..அவரோட பேசறதினாலும் உங்களுக்கு நிச்சயம் பாதிப்பு இருக்காது..ஏனென்றால், சிங்கம் சிங்கக் குட்டியை ஒண்ணும் செய்யாது!
கோவை 2 தில்லிக்கு:
அன்னிக்கு அவா கல்யாணத்திலே, பாட்டிட்டேர்ந்து தாத்தாவால, நலங்குல தேங்காய எடுக்க முடியலையாம்..விட்டுக் கொடுத்துட்டேன் பாட்டிக்குன்னு தாத்தா சால்ஜாப் சொன்னதாய் செவி வழிச் செய்தி ஒண்ணு இருக்கு!
அப்பாதுரைக்கு:
காம்போசிட் மேத்ஸ்னா..
அட.. நானும் மறந்துட்டேன்!
வெங்கட்!
வைகோ சார்!!
மனோ மேடம்!!!!
”..........விருதா எனக்கா..அட என்னடா இந்த மருதைக்கு வந்த சோதனை?
விருதோட குருதையும் கொடுப்பாங்களா?
தோ..தோ...வந்துட்டேன்!!
அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றியுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
Post a Comment