Wednesday, January 11, 2012

கல்யாண ராமன் பிரதாபங்கள்......


அடுத்து வருபவர் கல்யாண ராமன். அவர் நம் ஸ்டோர் வாசி இல்லை..பக்கத்தில் உள்ள மூக்கப் பிள்ளை சந்து..எனக்கு பதினொன்றாம் வகுப்புத் தோழன்!அந்த கால SSLC!
கல்யாணம் பரோபகாரி..பழகுவதற்க்கு இனிய நண்பன்.போன வாரம் கூட பேசிக் கொண்டிருந்தோம்..திரும்பவும் அந்த பழைய லைஃப் வராதா என்கிற ஏக்கம் எங்கள் இருவருள்ளும் எதிரொலித்தது..
லூட்டின்னா லூட்டி ..அவ்வளவு லூட்டி அடித்தோம்..இரண்டு பேருக்கும் ALGEBRA என்றால் காப்ரா தான்!அது வேறு எங்கள் இருவரையும் இணைத்து தொலைத்தது! ARITHMETICS ஐ ஆழ்ந்து படித்தோமானால், அல்ஜிப்ரா காலை வாரி விடும்..அல்ஜிப்ராவை ஊன்றி..ஊன்றி படித்தோமானால், ARITHMETICS ஊத்திக் கொண்டு விடும்..இரண்டு பெண்டாட்டிக் காரன் கதை தான்! ..
SSLC FINAL பரிட்சைக்கு படிக்கிறோம் என்று அவன் அம்மா எங்களுக்கு டீ போட்டு கொடுப்பார்..ராத்திரி பதினொன்று மணிக்கு மேல் தான் எங்களுக்கு மூட் கிளம்பும்..அது வரை படிப்பது போல் பாசாங்கு பண்ணும் நாங்கள் எல்லாரும் தூங்கியவுடன் அரட்டை அடிக்க ஆரம்பிப்போம்! கல்யாண ராமனிடம் என் வாழ் நாளிலேயே இரண்டே இரண்டு கதைகள் சொல்லியுள்ளேன்..ஒன்று ஸ்கூல் ஃபைனல் படிக்கும் போது..மற்றோன்று, நாங்கள் B.COM முடித்து விட்டு, திருச்சி நாளிதழ் ஒன்றில் வேலை பார்க்கும் போது!
இந்த கதைக்கு வருவோம்! நான் எட்டாவது படிக்கும் போது, ஒரு கடுகடு ஹெட் மாஸ்டர். அவர் மத்யானம் டாய்லெட் போகும் போது விஷமக்காரப் பயல்கள் கதவை மூடி விட்டனர்.திறந்து பார்க்கிறார்..முடியவில்லை..யாரடா அது என்று பயங்கரமாய் கத்துகிறார்..உறுமுகிறார்..படபடவென்று கதவை தட்டிப் பார்த்தார்..ஊஹூம்..கடைசியில் அவருக்கு பயம் வந்து விட்டது..ஃப்ரண்ட்ஸ்..ஃப்ரண்ட்ஸ்.....கதவைத் திறங்க பிரண்ட்ஸ் என்று கெஞ்சும் போது,டக் என்று ஒரு சப்தம்!
“என்ன?” என்றான், கல்யாணம்.
”என்னமோ சத்தம் டக்னு கேட்டது”- நான்.
இரண்டு பேரும் புஸ்தகத்தை மூடி விட்டு, சமையல் உள்ளில் பார்த்தால்...
ஒரு எலி பொறியில் மாட்டிக் கொண்டது..அந்த சத்தம் தான் அது!
கொஞ்சம் நூலை எடுத்து, அதை எலியின் காலில் கட்டி, மற்றொரு நுனியை கதவில் கட்டி, எலிப் பொறியை திறந்து விட்டோம்..ஆசையொடு ஓடி வந்த எலி,ஒரு ஸ்டேஜ்க்கு மேல் ஓடமுடியாமல், காலில் நூல் கட்டியதால்,பெண்டுலம் போல் ஆடியது..இப்படியும்..அப்படியும் அது ஆட, நாங்கள் இருவரும் அதனருகில் சென்று ’ஃப்ரெண்ட்ஸ்..ஃப்ரெண்ட்ஸ் காலை அவுத்து விடுங்க ஃப்ரெண்ட்ஸ்’ என்று கெஞ்ச...
அந்த வருடம் நாங்கள் SSLC யில் வாங்கிய மார்க்
நான் 396/600.
கல்யாணம் 408/600.

(பி.கு.: ஜாக்கிரதை!! கல்யாண ராமன் பிரதாபங்கள் 20.1.2012 அன்றும் தொடரும்!)

15 comments:

RAMA RAVI (RAMVI) said...

//இரண்டு பெண்டாட்டிக் காரன் கதை தான்! ..//

நல்ல வேடிக்கை.

சிறு வயது அனுபவங்களை அருமையாக பகிர்ந்து இருக்கீங்க.

அப்பறமா அந்த கடுகடு ஹெட் மாஸ்டர் எப்படி வெளியே வந்தார்??

அப்பாதுரை said...

ouch!
பிரதாபங்கள் படிகக் சுவையாக இருக்கின்றன.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாங்க ராம்வி!
சிறு வயது அனுபவங்களை அசை போடுவது ஒரு இன்பம் அல்லவா?
குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் ஆசையை விட, பெரியவர்கள் மறுபடியும் குழந்தையாக மாட்டோமா என்கிற ஏக்கம் அதிகம் தானே?
ஆரவாரம்..அதிகாரம்..பலம் ..கோபம்..எல்லாவற்றையும் ஒரு நொடியில் விட்டார் அந்த கடுகடு ஹெச்.எம்.
அடுத்த நொடி கதவு திறந்தது!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாருங்கள் அப்பாதுரை ..அது சரி அந்த ouch!க்கு என்ன அர்த்தம்?

ரிஷபன் said...

உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்ப ’மேத்ஸ்’ ஒர்க் அவுட் ஆகவில்லை என்கிறீர்களா,ரிஷபன்?

ADHI VENKAT said...

எலியோட காலில் நூலை கட்டினீர்களா...செம தைரியம் தான் சார்.

எலி என்ற பேரைக் கேட்டாலே கட்டிலின் மீதோ அல்லது சேரின் மீதோ ஏறி விடுவேன்....:)))

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்களைப் போல் தான் மேம் நானும்!
எலிஃபெண்ட் என்றால் கூட பயப் பட மாட்டேன்..எலி என்றால் தான் பயம் ..மேலும் அன்று எலி காலில் கயிறு கட்டியவன் கல்யாணம்!
நான் என் வாழ் நாளில் ஒரு தரம்..ஒரே தரம் தான், கயிறு கட்டி, அந்த கஷ்டத்தை வாழ் நாள் முழுவதும் அனுபவித்துக் கொண்டு இருப்பவன்!!

அன்புடன் நான் said...

வணக்கம் ,
தங்களுக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வணக்கம் கருணாகரசு..தங்களுக்கும், தங்களை சேர்ந்தவர்களுக்கும், சார்ந்தவர்களுக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன்,


ஆர்.ஆர்.ஆர்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
This comment has been removed by the author.
வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, எலி கதை நல்லாத்தான் இருக்கு... உங்களை மாதிரி நாங்க எலிக்கெல்லாம் கயிறு கட்டல...

நாங்க ஓணான் வேலில இருக்கும் போது வாலில் சுருக்குப் போட்டு அதோடு விளையாடி இருக்கிறோம்... இப்போது நினைத்தால் வேதனையாக இருக்கிறது. சிறு வயதில் என்ன செய்தோம் என்று தெரியாமல் செய்துவிட்டோம்....

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//நான் என் வாழ் நாளில் ஒரு தரம்..ஒரே தரம் தான், கயிறு கட்டி, அந்த கஷ்டத்தை வாழ் நாள் முழுவதும் அனுபவித்துக் கொண்டு இருப்பவன்!!//

ஒய் திஸ் ......?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கொல வெறி தானே?

aarvie88 said...

//நான் என் வாழ் நாளில் ஒரு தரம்..ஒரே தரம் தான், கயிறு கட்டி, அந்த கஷ்டத்தை வாழ் நாள் முழுவதும் அனுபவித்துக் கொண்டு இருப்பவன்!!//

ஒய் திஸ் ......?


Y this kolavern???