Monday, October 17, 2011

மறுபடியும்.......


இன்று ஒரு தேர்தல்!
நாம் நம் உள்ளாட்சி
கவுன்சிலர்களையும்,
மேயர்களையும்..
தேர்ந்தெடுக்கப் போகும்,
நன்னாள்...
இவ்வளவு சதவீதம்
வாக்குப் பதிவு..
வன்முறை இல்லை..
கள்ள ஓட் இல்லை..
சகஜ நிலை..
என்று,
ஊடகங்கள் மார் தட்ட,
நம் கையில் ஊற்றிய,
மை நம் கண்ணை
மறைப்பது தெரியாமலேயே,
மறுபடியும்...
நாம்
ஏமாறப் போகிறோம்!?!?!?

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நம் கையில் ஊற்றிய,
மை நம் கண்ணை
மறைப்பது தெரியாமலேயே,
மறுபடியும்...
நாம்
ஏமாறப் போகிறோம்!?!?!? //

ஏமாறாமல் இருக்க என்ன வழியோ?
கூறுங்கள் ஸ்வாமி!

வெங்கட் நாகராஜ் said...

வை.கோ. சார் சொன்ன மாதிரி என்ன வழி என்றும் கூறுங்களேன்...

நல்ல கவிதை. ஒவ்வொரு முறையும் ஏமாந்து கொண்டு தானே இருக்கிறோம்..

Thenammai Lakshmanan said...

சரிதான். ஒவ்வொருமுறையும் ஓட்டுப் போட்டு ஏமாறுகிறோம்.

ரிஷபன் said...

ஏமாந்துட்டேன்..

நாலு நாளா என்னோட பிளாக் காணாமல் போச்சு..
Your blog has been removed னு வருது..

என்ன செய்யணும்னு புரியல.. அவங்க கொடுக்கற லிங்கை வச்சுகிட்டு உள்ளே போனா.. திருப்பதில மொட்டை தாத்தாவை தேடாறாப்ல அவ்வளவு கன்ப்யூஷன்..

என்னங்க செய்யட்டும்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடப் பாவமே! ப்ளாக் போனா...அந்த துக்கத்தை தாங்கற சக்தியே இல்லை எனக்கு..திரும்பவும் கிடைக்குணும்னு ப்ரார்த்தனை பண்றேன்.. நீங்க வணங்கற ஆஞசனேயர் நிச்சயம் கை கொடுப்பார்,சார்!