
... நான்,
மரங்களை நேசிப்பவன்,
சிறு வயதில்,
ஆசிரியர் அடித்தபோது,
பள்ளிக்கூட மரத்தைக்
கட்டிக் கொண்டு,
அழுதேன்...அது
அம்மா போல,
இலைகளை அசைத்து,
ஆறுதல் சொன்னது!
கடும் வெயிலில்,
வீட்டில் உள்ள,
வாழை மரத்தைக்
கட்டிக் கொள்வேன்,
அது இலவசமாய்,
எனக்கு ஏ.ஸி. தந்தது!
பெரிய ஆல மர நிழலில்,
கான்க்ரீட் பெஞ்ச்சில்,
பாடல் கேட்கப் பிடிக்கும்..
எல்லாவற்றையும் விட,
அகழ்வாரைத் தாங்கும்
நிலத்தை விட,
அதில் வளரும் மரங்கள்,
பெருமை...பொறுமை...
அதிகம் தான்!
அவை வெட்ட வருபவனிடம்
கூட கருணைக் காட்டும்,
கற்பக விருட்சங்கள்!
நிழல் கொடுக்கும்...
பசியாற கனி கொடுக்கும்..
அதனினும் மேலாய்..
அபிரிமிதமாய் ஆக்ஸிஜன்...
வெட்ட வருபவனுக்கு,
ப்ராணன் தரும் மரங்களே..
வள்ளுவனின் நிலத்தினை விட
மேலாய் இருப்பதினால்,
வானவளாவிய மரங்களே..
நம் வாழ்க்கைத் துணையாய்
இருக்கட்டும்!!!!
13 comments:
மரக் கவிதை எழுதிய மறத்தமிழன் நீங்கள்... ;-))))))))))
சார்! கொஞ்சநாள் முன்னாடி நீங்க வெட்டின மரம் வந்து எழுதச் சொன்னதா? ;-)
மரத்தமிழன்… :)
//ஆசிரியர் அடித்தபோது,
பள்ளிக்கூட மரத்தைக்
கட்டிக் கொண்டு,
அழுதேன்...அது
அம்மா போல,
இலைகளை அசைத்து,
ஆறுதல் சொன்னது!//
பசுமையான மரங்களைப் பார்த்தாலே ஆறுதல் தன்னால் வரும்! அருமையான பதிவு!
மரங்கள் உங்களைத் தொடர்கின்றன.அதன் மேல் உங்கள் நேசம் அசாதாரணமாயிருக்கிறது ஆர்.ஆர்.ஆர். சார்.
மரங்கள் மட்டும் இல்லாவிட்டால்?..
நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது..
அவற்றை நேசிப்பது சக மனிதரை நேசிப்பது போலவே இனிமைதான்..
மரக்கவிதை அருமை சார்.
கவிதை நன்று... மரங்களை நானும் நேசிப்பவன்.
அருமை.
[மரத்தைப்பத்தி மறக்காம வேறு ஏதாவது விரிவாக எழுதணும்ன்னு தான் நினைத்தேன். ஞாபகம் வர மாட்டேங்குது என் ’மர’மண்டைக்கு !]
பிரமாதம்
மூவார் முத்தே! என்ன ஒற்றுமை நமக்குள்? நானும் கொம்பாடும் குரங்குதான்! மரம் ஒன்று போல் ஒன்றில்லை. காணக் காண திகட்டாது.
அழகான கவிதை...
Joyce Kilmer எனும் கவிஞன் மரம் என்றொரு கவிதை எழுதினான். சட்டென நினைவுக்கு வந்த சில வரிகளைக் கீழே தமிழாக்கி தந்துள்ளேன்
மரம் போன்றே
அரும் கவிதை
காண்பேன் இல்லை.
இறையோடும் துதி பாடியே நாளும்
இலையாடும் கரமோ வானிற் நீளும்
கவிதை புனைய என்போல் மூடன்போதும்.
கடவுள் மட்டுமே மரத்தை படைக்கவியலும்
அவை வெட்ட வருபவனிடம்
கூட கருணைக் காட்டும்,
கற்பக விருட்சங்கள்!//
அருமையான பதிவு!
மரம், பூமியின் வாரிசு.
காற்றை சுத்திகரிக்கும், உயிரணங்களுக்கு உணவு, உடை, உரைவிடம் தரும். மழையை இழுத்து வரும், மலையையே சிலிர்க்க/சிரிக்க வைக்கும். படிச்சவன் பாட்டை கெடுக்க, எழுதுனவன் ஏட்டைக கெடுக்க, நீட்டோலை வாசியாது நின்றான்'நெடுமரமாய்' தன்னையே கொடுக்க.
வெட்ட வருபவனுக்கு ப்ராணன் தரும் மரங்கள்.. உண்மை ஆர் ஆர் ஆர் ..
Post a Comment