
அரக்கப் பரக்க அத்தனை வேலைகளும்
அந்த நாலு மணி நேரத்திற்க்குள் செய்து,
பஸ் பிடிக்க அவசரமாய்...
யாரோ ஒரு பயணி எழுந்திருக்க..
"சிஸ்டர் உட்காருங்க...'
பழகின கண்டக்டருக்கு
சகோதரி நான்..
மேடம்...அந்த ரிப்ளை ரெடியா..?
டெலக்ஸ் அனுப்பியாச்சா....
அலுவலக நண்பர்களுக்கு,
மேடம் நான்..
வெட்டியாய் பொழுதுப் போக்காமல்..
ஹோம் ஒர்க் எழுதி..
என்னைக் கண்டவுடன்..
களிப்புடன் ஓடி வந்து,
கால்களைக்கட்டிக் கொள்ளும்..
அந்த இரண்டு ஜீவன்களுக்கு,
அம்மா நான்..
ஹல்லோ.. அந்த ஹல்லோவில்
ஒரு அழுத்தம் கொடுத்து..
பாஸ் போர்ட்டுக்கு அப்ளைப்
பண்ண போட்டோ கேட்டேனே..
ரெடியா என்ற என்னவருக்கு..
ஹல்லோ நான்..
திடீரென்று, என்னுள்ளே..
ஒரு கேள்வி எழுந்தது..
ஆமாம்... நான் யார் ?
2 comments:
எத்தனை பரிமாணங்கள் பெண்ணுக்கு ?! ரசனையாய் பணியாற்றுகிற எவருக்கும் சுயம் போவதில்லை
super kavithai
Post a Comment