Wednesday, July 13, 2011

மூன்று...மூன்று....மூன்று...


( நான் பாட்டுக்கு ‘தேமே’ன்னு தான் இருந்தேன்..இந்த ரிஷபன் இருக்காருங்களே..அவுரு தான் என்ன உசுப்பேத்தி விட்டிட்டாருங்கோ..பாவம் ... நானில்லே!!! நீங்க தான்!)

1)விரும்பும் மூன்று விஷயங்கள்?
அ) டிரஸ் ஆ) சிட்ரஸ் ஃப்ரூட்ஸ் இ) க்ளாஸிகல் ம்யூஸிக்.

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?
அப்படி எதுவும் இல்லை.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
அ) பொய் ஆ)புறம் கூறுதல் இ) நரஸ்துதி

4) புரியாத மூன்று விஷயங்கள்:
அ) ஒன்றுக்கும் உதவாதவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவது !
ஆ) திறமைசாலிகளை மட்டம் தட்டுவது !!
இ) முன்னேற்றத்திற்கும், உழைப்பிற்கும் உள்ள தொடர்பின்மை!!!

5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
அ) கைப் பேசி;
ஆ) SOFTWARE ENGINEERING BY ROGER PRESSMAN;
இ) MAGIC JACK.

6)சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?
அ) நான் ! ஆ) நானே !!இ) நானே தான் !!!

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?அ) AICWA FINAL படிக்க ஆயத்தம் செய்து கொண்டு இருக்கிறேன்;
ஆ) நச்சென்று எல்லாரும் திரும்பி பார்க்கும் விதமாய் நான்கே நான்கு வார்த்தைகளில் ஒரு ஹைகூவிற்கு வார்த்தைகள் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
இ)ஒரு ட்வீட் போடப் போகிறேன் இன்று இரவிற்குள் ( ie., 13.07.2011)

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அ)காளிதாஸனின் சாகுந்தலம் மூலம் சிதையாமல் சமஸ்க்ருதம் தெரிந்த பண்டிதருடன் ஒரு இலக்கிய உரையாடல் தினம் ஒண்ணரை மணி நேரம்..ஒரு வருட காலம்;
ஆ)என் குழந்தைகளுடன் ஒரு நாற்பது நாட்கள் WEST EUROPE TOUR;
இ) ஜெயகாந்தன்..தோப்பில் முகமது மீரான் ஆகிய இருவரிடமும் என் சிறுகதைகளைப் பற்றிய கருத்துக் கீறல்கள்;

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
அ)மோகன்ஜி, சுந்தர்ஜி,ஆர்.வி.எஸ்,ரிஷபன் ஆகியவர்களுடன் காரில் ஒரு கேரளா டூர்; ஆ)என்னைச் சுற்றி ஒரு சந்தோஷ அலை எப்போதுமே சுற்ற வைத்துக் கொண்டிருத்தல்;
இ) நாம் இழந்த கூட்டுக் குடும்பம் பற்றி பத்தே..பத்து நிமிடத்தில் ஒரு ART FILM மிக..மிகக்குறைந்த வசனங்களுடன்!!

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
அ)உறவுகளின் துயரம்; ஆ) தற்பெருமை இ)பிழையான தமிழ்.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
அ) எளிமை; ஆ) அடக்கம் இ) ஸ்திதப்ரக்ஞம்.

12) பிடித்த மூன்று உணவு வகை?
அ) பழைய சாதம்-தொட்டுக் கொள்ள எரிச்சக் குழம்பு;
ஆ) நெய்முறுகலுடன் முருங்கக் கீரை அடை+ மிளகாய்ப் பொடி எண்ணெய்;
இ) ஐயங்கார் புளியாதரை+உருளைக்கிழங்கு கறி+ கருவடாம்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அ)தண்டபாணி தேசிகரின் ’என்னப்பனல்லவா’..
ஆ)’பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா?’
இ)’அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேண்டும் கேளம்மா?’
14) பிடித்த மூன்று படங்கள்?
அ)கெளவரம் ஆ)வியட்னாம் வீடு இ) புதிய பறவை

15)இது இல்லாமல் வாழ முடியாதென்று சொல்லும்படியான மூன்று விஷயங்கள்?
அ) சோப்பு; ஆ)சீப்பு ; இ) கண்ணாடி.
16)வாழ்வின் லட்சியங்கள்..
அ) பெற்றோரை ஒவ்வொரு கணமும் சந்தோஷமாய் வைத்துக் கொள்ளுதல்;
ஆ) பெரியவள் நோபல் பரிசு வாங்க வேண்டும்;
இ) சிறியவள் HARVARD ல் STRATEGIC MANAGEMENT ல் P.hd. (ரொம்ப பேராசையோ?)
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
அ) ஹரிணி ஆ) அப்பாத் துரை இ)பாஸ்டன் ஸ்ரீ ராம்!

13 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதில்கள்... சுவையான, சுவாரசியமான பதில்கள்.

இன்றுதான் நானும் தீன்... எழுதினேன்...

RVS said...

//நெய்முறுகலுடன் முருங்கக் கீரை அடை//
சாப்பிடனும் போல இருக்கு... ;-)

R. Gopi said...

ICWA final ஆ? வாழ்த்துக்கள்!

என்னப்பனல்லவா - எனக்கும் ரொம்பப் பிடிக்கும்

அய்யங்கார் புளியோதரை, கீரை ஆடை - எனக்கும் ரொம்பப் பிடிக்கும்!

A.R.ராஜகோபாலன் said...

அற்புதமான பதில்கள் அசத்தல் சார்

பத்மநாபன் said...

அருமையான பதில்கள் ...இலட்சியங்கள் கைகூட வாழ்த்துகள் .....

ராமலக்ஷ்மி said...

இலட்சியங்கள் ரசனைகள் குணாதிசயங்கள்
மூன்றையும் வெளிக் கொண்டு வந்த பகிர்வு
சுவாரஸ்யம் அருமை நன்று:)!

அப்பாதுரை said...

நானும் கேரளா டூர் வறேன்.

அப்பாதுரை said...

ஸ்திதபிரக்ஞம் என்றால் என்னங்க?

RAMA RAVI (RAMVI) said...

அழகான சுவையான பதில்கள் ராமமூர்த்தி சார்..

ரிஷபன் said...

டூருக்கு நான் ரெடி! சாம்பார் வடை உண்டா?!
ICWA Final க்கு நல்வாழ்த்துகள்.
சோப்பு சீப்பு கண்ணாடி என்று ஒரு பக்கம் ஹீயூமர்
பெற்றோரை ஒவ்வொரு கணமும் சந்தோஷமாய் வைத்துக் கொள்ளுதல் என்று மனசைத் தொட்ட நெகிழ்ச்சி.. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் உயர்வுள்ளல் இன்னொரு புறம்.. சபாஷ்! சபாஷ்!! சபாஷ்!!!

நிலாமகள் said...

ப்ர‌மாத‌ம் ப்ர‌மாத‌ம் ப்ர‌மாத‌ம்!!!

மனோ சாமிநாதன் said...

அனைத்து பதில்களும் மிக‌ அருமை! முக்கியமாய் பெற்றோரை நன்கு வைத்துக்கொள்ளுவதை வாழ்க்கையின் லட்சியமாகக் கொன்டுள்ள‌தற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அனைத்தும் அருமையோ அருமை. பாராட்டுக்கள்.